உங்கள் வருகைக்கு நன்றி

கை கழுவலேன்னா

சனி, 24 மே, 2014

நம் கைகளை சோப்பு போட்டு கழுவாததால், ஸ்வைன் ப்ளூ போன்ற, உலகமே அலறும் பல நோய்கள் வருவதாக கூறுவார்கள்.  நம் கையில் ஒட்டிக் கொள்ளும் நுண்கிருமிகளால் தான், பல நோய்கள் பரவுகின்றன. இதற்கான விழிப்புணர்வை, அனைவருக்கும் எடுத்து சொல்ல, ஒவ்வொரு ஆண்டும், அக்.,15ம் தேதி, 'உலக கைக்கழுவுதல் தினம்' கொண்டாடப்படுகிறது. நம் ஒவ்வொருவரின் கையிலும், கண்ணுக் குத் தெரியாத, பல நுண்கிருமிகள் உள்ளன. அவற்றை, 'நிரந்தரமாக தங்கி இருக்கும் கிருமிகள், தற்காலிகமாக தங்கும் கிருமிகள்' என, இரண்டு விதமாக பிரிக்கலாம். இதில், முதலாம் வகை கிருமி, நம் தோலின் உள்ளடுக்கில் தங்கியிருந்து, சிரங்கு, புண் மாதிரியான பிரச்னைகள் வராமல், நம் தோலை பாதுகாக்கும். இரண்டாவது வகையில், நாடாப்புழு, அரிசிப்புழு மாதிரியான கிருமிகள் மற்றும் அதன் முட்டைகள் தான், நமக்கு உடல் உபாதைகள் மற்றும் பல வித நோய்களை ஏற்படுத்துகின்றன. இக்கிருமிகள் உள்ள பொருளை நாம் தெரியாமல் தொடுவதால், அக்கிருமிகள் நம் கைகளிலேயே ஒட்டிக்கொள்ளும். மேலும், அந்த கையை கழுவாமல் சாப்பிடும் போது, உணவுடன் சேர்ந்து அந்த கிருமி யும் உள்ளே போய், குடலில் தங்கி இனவிருத்தி செய்வதால், காலரா, டைபாய்டு, ரத்தபேதி என, உடல் உபாதைகளை உண்டாக்கும். மேலும், அக்கிருமி கள் நம் மலம் வழியாகவும் வெளியேறும். மலம் கழித்த பின், அந்த பகுதியை நாம் சரியாக கழுவாமல் விட்டால், மறுபடியும் அந்த கிருமி நம்ம கைகளில் ஒட்டும். இடதுகை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் கழிவரை செல்லும்போது கழற்றிவிட்டு செல்லுங்கள். ஏனெனில் அதனுள் மலம் போன்ற அழுக்குகள் இருந்து கொண்டு பல நோய்களை உண்டாக்கும். அந்த கையோடு மத்த வேலைகளை செய்யும் போது, மஞ்சள் காமாலை போன்று, இன்னும் மோசமான சில விளைவுகளை உண்டாக்குவதால், அதிக கவனம் தேவை. அதே போல், கண்ணில் நீர்க் கொட்டுகிற பிரச்னை உள்ளவர்கள், ஜலதோஷத்தில் அவதிப்படுபவர்கள், அடிக்கடி கைகழுவுவதை பழக்கமாக்க வேண்டும். முதலில், இரண்டு கைகளையும் சுத்தமான தண்ணீரில் அலசுங்கள். பின், 'கெமிக்கல்'கள் அதிகம் கலக் காத மென்மையான சோப்பு அல்லது, 'லிக்விட் ஹேண்ட் வாஷை' இரண்டு கைகளிலும் மணிக்கட்டுக்கு மேல், 4 அங்குலம் வரை நன்றாக நுரைவர தேயுங்கள். பின், நீரில் கைகளை அலசி, சுத்தமான டவலைக் கொண்டு ஈரத்தை ஒற்றி எடுத்தாலே, கிருமிகள் எதுவும் அண்டாது. எக்காரணம் கொண்டும், 'பிரஷ்' உபயோகிப்பதோ, கைகளை அழுத்தி தேய்ப்பதோ கூடாது.

மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.


கர்ப்பிணிப் பெண்கள், தலைமுடிக்கு, நீங்கள் உபயோகிக்கும், "டை'யானது, "அம்மோனியா ப்ரீ' மற்றும் "வெஜிடபிள் பேஸ்டு' என்பதாக இருந்தால், பிரச்னை இல்லை. "டை' பாக்கெட்டில், இதைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆனால், கர்ப்பமாக இருக்கும் போதோ, கர்ப்பம் தரிப்பது தொடர்பாக, ஏதேனும் சிறப்பு மருந்துகளோ, சிகிச்சைகளோ எடுத்துக் கொள்பவராக இருந்தால், நீங்கள் உபயோகிக்கும், "டை' குறித்து, உங்கள் மகப்பேறு மருத்துவரிடம், ஆலோசிப்பது நல்லது. ஏனெனில், "வெஜிடபிள் பேஸ்டு' எனப்படும் சில, "ஹேர் டை'களில், மருந்து அல்லது மாத்திரைகளுடன், ஒவ்வாமையை உண்டாக்கக் கூடிய, வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கக் கூடும். நிரந்தர நிறமூட்டிகள், வீரியமானவை என்பதால், ஹென்னா அடிப்படையிலான, தற்காலிக சாயங்களைப் பயன்படுத்துவது நல்லது. மருத்துவப் பரிசோதனைகளின் கீழ், கர்ப்பிணிப் பெண், "ஹேர் டை' உபயோகிப்பது, அவருக்கோ, அவர் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கோ பாதிப்பு ஏற்படுத்துவதாக, இதுவரை, நிரூபணம் ஆகவில்லை. ஆனால், அதுகுறித்த உங்களின் தடுமாற்றமோ, தயக்கமோ, பதற்றமோ, உடலையும், உள்ளத்தையும் பாதிக்கலாம். எனவே, மேற்சொன்ன எச்சரிக்கைகளை பின்பற்றி, தெளிவு பெறலாம். பயன்படுத்தும், "டை' காரணமாக, ஏதேனும் அரிப்பு, தடிப்பு, நீர் வடிதல் தென்பட்டால், உடனடியாக உபயோகத்தை நிறுத்தி விட்டு, மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

தொண்டையில் வலி இருக்கும் போது இதை சாப்பிட வேண்டாம்


சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் பருவநிலையானது குளிர்காலமாக இருந்தால், சொல்லவே வேண்டாம். அனைத்து நோய்களும் நமது உடலில் புகுவதற்கு வரிசையாக நின்று, அதற்கான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அவற்றில் முக்கியமாக வரும் ஒரு பிரச்சனையெனில் அது சளி, ஜலதோஷம் போன்றவை தான். ஏனெனில் உமது உடல் புதிதான ஒரு சூழ்நிலையை சந்திக்கும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் சற்று பலமிழந்து இருக்கும். எனவே அப்போது கிருமிகள் உடலில் எளிதில் புகுந்துவிடுகின்றன.

அவ்வாறு உடலில் புகும் கிருமிகள், இருமலின் மூலம் தொண்டையில் சிறிது காலம் தங்கி, அங்கு புண்ணை ஏற்படுத்தி, பெரும் தொந்தரவைத் தரும். அது தரும் தொந்தரவு போதாது என்று நாம் நமது நாவின் சுவைக்கேற்ப சில உணவுகளை சாப்பிடுவோம். ஆனால் அந்த உணவுகள் நமக்கு சுவையை அளிப்பதோடு, அந்த கிருமிகளுக்கு தொல்லையைத் தந்து, அவை அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன.
மேலும் சிலர் அந்த தொண்டைப் புண்ணை சரிசெய்கிறேன் என்ற பெயரில், சாப்பிடக் கூடாத உணவுகளை உட்கொள்கின்றனர். எனவே அத்தகைய தொல்லை தரும் உணவுகளை சிறிது காலம் சாப்பிடாமல் இருந்தால், தொண்டையில் இருக்கும் புண்ணானது பெரிதாகாமல் விரைவில் சரியாகிவிடும். இப்போது அந்த மாதிரியான உணவுகள் என்னவென்று படித்துப் பார்த்து, உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நா ஊற வைக்கும் உணவுகள்
நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், தொண்டையில் அரிப்புகளோடு, வலியும் ஏற்படும். ஆகவே அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். மேலும் வினிகர் கலந்திருக்கும உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets