கை கழுவலேன்னா
சனி, 24 மே, 2014
நம் கைகளை சோப்பு போட்டு கழுவாததால், ஸ்வைன் ப்ளூ போன்ற, உலகமே அலறும் பல நோய்கள் வருவதாக கூறுவார்கள். நம் கையில் ஒட்டிக் கொள்ளும் நுண்கிருமிகளால் தான், பல நோய்கள் பரவுகின்றன. இதற்கான விழிப்புணர்வை, அனைவருக்கும் எடுத்து சொல்ல, ஒவ்வொரு ஆண்டும், அக்.,15ம் தேதி, 'உலக கைக்கழுவுதல் தினம்' கொண்டாடப்படுகிறது. நம் ஒவ்வொருவரின் கையிலும், கண்ணுக் குத் தெரியாத, பல நுண்கிருமிகள் உள்ளன. அவற்றை, 'நிரந்தரமாக தங்கி இருக்கும் கிருமிகள், தற்காலிகமாக தங்கும் கிருமிகள்' என, இரண்டு விதமாக பிரிக்கலாம். இதில், முதலாம் வகை கிருமி, நம் தோலின் உள்ளடுக்கில் தங்கியிருந்து, சிரங்கு, புண் மாதிரியான பிரச்னைகள் வராமல், நம் தோலை பாதுகாக்கும். இரண்டாவது வகையில், நாடாப்புழு, அரிசிப்புழு மாதிரியான கிருமிகள் மற்றும் அதன் முட்டைகள் தான், நமக்கு உடல் உபாதைகள் மற்றும் பல வித நோய்களை ஏற்படுத்துகின்றன. இக்கிருமிகள் உள்ள பொருளை நாம் தெரியாமல் தொடுவதால், அக்கிருமிகள் நம் கைகளிலேயே ஒட்டிக்கொள்ளும். மேலும், அந்த கையை கழுவாமல் சாப்பிடும் போது, உணவுடன் சேர்ந்து அந்த கிருமி யும் உள்ளே போய், குடலில் தங்கி இனவிருத்தி செய்வதால், காலரா, டைபாய்டு, ரத்தபேதி என, உடல் உபாதைகளை உண்டாக்கும். மேலும், அக்கிருமி கள் நம் மலம் வழியாகவும் வெளியேறும். மலம் கழித்த பின், அந்த பகுதியை நாம் சரியாக கழுவாமல் விட்டால், மறுபடியும் அந்த கிருமி நம்ம கைகளில் ஒட்டும். இடதுகை விரலில் மோதிரம் அணிந்திருந்தால்
கழிவரை செல்லும்போது கழற்றிவிட்டு செல்லுங்கள். ஏனெனில் அதனுள் மலம் போன்ற அழுக்குகள்
இருந்து கொண்டு பல நோய்களை உண்டாக்கும். அந்த கையோடு மத்த வேலைகளை செய்யும் போது, மஞ்சள் காமாலை போன்று, இன்னும் மோசமான சில விளைவுகளை உண்டாக்குவதால், அதிக கவனம் தேவை. அதே போல், கண்ணில் நீர்க் கொட்டுகிற பிரச்னை உள்ளவர்கள், ஜலதோஷத்தில் அவதிப்படுபவர்கள், அடிக்கடி கைகழுவுவதை பழக்கமாக்க வேண்டும். முதலில், இரண்டு கைகளையும் சுத்தமான தண்ணீரில் அலசுங்கள். பின், 'கெமிக்கல்'கள் அதிகம் கலக் காத மென்மையான சோப்பு அல்லது, 'லிக்விட் ஹேண்ட் வாஷை' இரண்டு கைகளிலும் மணிக்கட்டுக்கு மேல், 4 அங்குலம் வரை நன்றாக நுரைவர தேயுங்கள். பின், நீரில் கைகளை அலசி, சுத்தமான டவலைக் கொண்டு ஈரத்தை ஒற்றி எடுத்தாலே, கிருமிகள் எதுவும் அண்டாது. எக்காரணம் கொண்டும், 'பிரஷ்' உபயோகிப்பதோ, கைகளை அழுத்தி தேய்ப்பதோ கூடாது.