மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
சனி, 24 மே, 2014
கர்ப்பிணிப்
பெண்கள், தலைமுடிக்கு, நீங்கள் உபயோகிக்கும்,
"டை'யானது, "அம்மோனியா ப்ரீ' மற்றும் "வெஜிடபிள்
பேஸ்டு' என்பதாக இருந்தால், பிரச்னை இல்லை. "டை'
பாக்கெட்டில், இதைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆனால், கர்ப்பமாக இருக்கும் போதோ,
கர்ப்பம் தரிப்பது தொடர்பாக,
ஏதேனும் சிறப்பு மருந்துகளோ,
சிகிச்சைகளோ எடுத்துக் கொள்பவராக இருந்தால், நீங்கள் உபயோகிக்கும், "டை' குறித்து, உங்கள் மகப்பேறு மருத்துவரிடம், ஆலோசிப்பது நல்லது. ஏனெனில், "வெஜிடபிள் பேஸ்டு' எனப்படும் சில,
"ஹேர் டை'களில், மருந்து அல்லது மாத்திரைகளுடன், ஒவ்வாமையை உண்டாக்கக் கூடிய, வேதிப் பொருட்கள்
சேர்க்கப்பட்டிருக்கக் கூடும். நிரந்தர நிறமூட்டிகள், வீரியமானவை என்பதால், ஹென்னா அடிப்படையிலான, தற்காலிக சாயங்களைப் பயன்படுத்துவது நல்லது. மருத்துவப் பரிசோதனைகளின் கீழ், கர்ப்பிணிப் பெண், "ஹேர் டை' உபயோகிப்பது, அவருக்கோ, அவர் வயிற்றில் இருக்கும்
சிசுவுக்கோ பாதிப்பு ஏற்படுத்துவதாக, இதுவரை, நிரூபணம் ஆகவில்லை. ஆனால்,
அதுகுறித்த உங்களின் தடுமாற்றமோ, தயக்கமோ, பதற்றமோ, உடலையும், உள்ளத்தையும் பாதிக்கலாம். எனவே, மேற்சொன்ன எச்சரிக்கைகளை பின்பற்றி, தெளிவு பெறலாம். பயன்படுத்தும், "டை' காரணமாக, ஏதேனும் அரிப்பு, தடிப்பு, நீர் வடிதல் தென்பட்டால், உடனடியாக உபயோகத்தை நிறுத்தி
விட்டு, மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.