உங்கள் வருகைக்கு நன்றி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் எட்டு !

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

"எட்டுபோட்டால்வாகனம் ஓட்ட "உரிமம்கிடைக்கும் என்பது தான் நமக்கு தெரியும். ஆனால், "எட்டுவடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால்உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்யோகா ஆசிரியரான சண்முகம்.

சென்னைராயபுரம் அண்ணா பூங்காவில் மாலை நேரத்தில் சென்றால்தரையில் எட்டு என்ற எண்ணை எழுதிஅதன் மீது தொடர்ந்து நடந்து செல்வதைப் பார்க்கலாம்.
சர்க்கரை தீரும்: இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, "எட்டுவடிவில் நடந்து செல்வதால்,சர்க்கரை வியாதியில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவதாகவும்மூட்டு வலியும் குணமடைவதாகவும் கூறினர்.

"எட்டு' வடிவ நடைபயிற்சியை வழங்கி வரும், வண்ணாரப்பேட்டை யோகா ஆசிரியர் சண்முகம் கூறியதாவது: சித்தர் கால வைத்தியம்"எட்டுவடிவ நடைபயிற்சியைபுதுச்சேரியில் உள்ள இயற்கை உணவு வைத்தியர் மாணிக்கம் என்பவரிடம் கற்றுக்கொண்டேன். "எட்டுபோட்டுஅதன் மேல் கால்களை எட்டி வைத்து நடப்பதுபார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால்சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை வைத்திய முறைகளில்இதுவும் ஒன்று.
சென்னையில் 20 ஆண்டுகளாக இப்பயிற்சியை அளிக்கிறேன். ஆயிரத்துக்கும் அதிகமானோர் "எட்டுநடை போடுகின்றனர்.

பயிற்சி முறை:ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில்கிழக்கு மேற்காக கோடு வரைந்து, 10 அடியில்வடக்கு தெற்காக "எட்டுஎண் எழுத வேண்டும். அதன் மேல்தொடர்ந்து 10 முதல் 15 நிமிடம் வரை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி யோ அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி யோ நடக்க வேண்டும்.பயிற்சியின் முடிவில்உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின் இடைவெளி விட்டு மீண்டும் 15 நிமிட நடைபயிற்சியைத் தொடரலாம். இடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளியை தானாகவே வெளியே உமிழ்வதாலோ அல்லது கரைந்து இருப்பதையோ உணரலாம்.

குதிகால் வரை:இப்பயிற்சியால்குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலிமலச்சிக்கல் தீரும். கண் பார்வை மற்றும் செவி கேட்புத் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் ஐந்து கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. குடலிறக்க நோயும் இதனால் குணமாகும். ரத்த அழுத்தம் குறையும்.

எட்டு நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்தால் மூட்டு வலியும், 40 நிமிடம் செய்தால் ரத்த அழுத்தமும்ஒரு மணி நேரம் செய்தால் சர்க்கரை வியாதியில் இருந்தும் விடுபடலாம். மற்ற நடைபயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியில் சிறுநீரகத்தின் "பாய்ண்ட்என்று சொல்லப்படும் குதிகால்அதிக பயன் பெறுகிறது. மன அழுத்தமும் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு :எட்டு நடை பயிற்சி குறித்து நாகேந்திரன் கூறும்போது, ""60 வயதான எனக்குஇந்த பயிற்சியை மேற்கொண்ட பிறகுபடபடப்பு குறைந்துள்ளதுசர்க்கரை அளவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது,'' என்றார்.

பள்ளி தலைமையாசிரியர் மனோன்மணி,""இந்த பயிற்சியை கடந்த ஆறு மாதமாக செய்து வருகிறேன். இதனால்எனது ஊளை சதை வெகுவாகக் குறைந்துள்ளது. கண்களுக்கு நல்ல பயிற்சியாக உள்ளது,'' என்றார்.



கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets