உங்கள் வருகைக்கு நன்றி

மனச் சோர்வை குணப்படுத்த முடியுமா ?

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


மனச் சோர்வு என்பது ஒரு சிலருக்கு எப்போதாவது ஏற்படுவது வழக்கம். சிலர் எப்போதுமே மனச்சோர்வுடன் இருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த மனச்சோர்வு என்பது ஏதோ சாதாரண ஒரு விஷயம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். ஆனால் அது சாதாரண விஷயமில்லை. மனச் சோர்வு என்பது ஒரு மன நோய்.  அதற்கு உடனடியாக உரிய சிகிச்சை (மருந்து மர்த்திரைகள் அல்ல) அல்லது தீர்வினை கண்டு, குணப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
மனச் சோர்வுக்கு எந்த வயது வித்தியாசமும் இல்லை. சிறார்கள் முதல் முதியவர்கள் வரை மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் ஏராளம். சிறிய தோல்விகள் முதல், ஏமாற்றங்கள், நஷ்டம் போன்றவற்றால் மனச் சோர்வு ஏற்படுகிறது.
தற்போதெல்லாம் மனச் சோர்வுக்கு ஆளாகும் நபர்களில் குழந்தைகளும், இளம் வயதினரும் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். இதில் இவர்களது மனச் சோர்வு பல நேரங்களில் குடும்பத்தாருக்கு தெரிவதில்லை. மனச்சோர்வினால் அவர்கள் செய்யும் செயல்களை குடும்பத்தார் வேறு விதமாக பார்ப்பதே சிக்கலை பெரிதாக்குகிறது.
அதாவது, ஒரு சிறிய விஷயம்தான் வித்யாசம். கவலை மற்றும் மனச் சோர்வு என்பதை வேறுபடுத்திப் பார்க்க ஒரு சில விஷயங்களை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டில் வளர்த்த செல்லப் பூனை இறந்துவிட்டது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்பட்டு, கண்ணீர் சிந்துகிறார்கள். இது மனக் கவலை. ஆனால் இதில் ஒருவர் மட்டும் அதிகக் கவலை அடைந்து, யாருடனும் பேசாமல், சாப்பிடாமல், தங்களது அன்றாடப் பணிகளை செய்யாமல், ஏன் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற அளவுக்கு சிந்தித்தால் அதுதான் மனச் சோர்வு என்கிறது மருத்துவ உலகம்.
பொதுவாக ஒருவர் மன அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டால் உடனடியாக உங்களது ஆதரவும், அவரது மனநிலையை மாற்ற நடவடிக்கையும் தேவை..  மனச் சோர்வுக்கு முக்கிய சிகிச்சை என்பது, அவர்களை பாதித்த விஷயத்தை சரி செய்வதாகத் தான் இருக்கும். அவர்களை பாதித்த, பாதிக்கிற விஷயம் சரியானால் இவர்கள் தானாகவே சரியாகிவிடுவார்கள்.
ஒருவருக்கு ஏற்படும் மனச்சோர்வுக்கு அவரது குடும்பத்திலோ, அவரை சுற்றியுள்ளவர்களிடத்திலோ, அவர் இருக்கும் பள்ளி, கல்லூரி, பணியிடத்திலோ இருக்கும் பிரச்னையே அடிப்படைக் காரணியாக அமைகிறது. அதனை மாற்றுவதன் மூலம் அவரை மனச்சோர்வில் இருந்து எளிதாக வெளியே கொண்டு வந்து விடலாம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மன சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரச்னை, மனச்சோர்வை வெளிப்படுத்தும் விதம், அதன் பாதிப்பு ஆகியவை ஒன்று போல இருப்பதில்லை.  அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அதை நாம் சரியான முறையில் கண்டுபிடித்து பயிற்சியளித்தால்தான் அதை விரைவில் குணப்படுத்த முடியும். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets