முயற்சிகளை பெற்றோர்தான் எடுக்க வேண்டும்,
வெள்ளி, 16 அக்டோபர், 2015
வீடியோ
கேம்ஸ்' விளையாடும்போது, இமைகளை
மூடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர், "டிவி'க்களை பார்க்கும்போது, கருவிழி முன்னால் ஈரப்பசை காய்ந்து விடும். இதனால் கண் சிவந்து, உறுத்தல் அதிகரிக்கும். கூர்மையாக பார்க்கும்போது, தலைவலி ஏற்படும். ஆர்வம் காரணமாக படிப்பு உட்பட மற்ற
விஷயங்களில் கவனசிதறல் ஏற்படும். உடல்
உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் நாள்
முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்காருவதால், உடல்
பருமன் ஏற்படுகிறது. தவிர,
பித்தப்பையில் கல், கால் மூட்டு
தேய்மானம், சிறுவயதிலேயே
சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், கொழுப்பு சத்து
அதிகரிப்பு ஏற்படும்.
இதுபோன்ற காரணங்களால், 30 வயதிலேயே
மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தினமும் 4 கி.மீ., தூரம் நடப்பதும், ஓடி விளையாடும்
விளையாட்டுகளில் ஈடுபடுவதும் நல்லது.
"வீடியோ கேம்ஸ்' ஒரு போதை!
மாணவர்களுக்கு தொலைநோக்கு பார்வை, பொதுஅறிவு, ஆளுமை தன்மை
போன்றவற்றை வளர்ப்பதற்காகவே கோடை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இன்று
அறிவுசார்ந்த நூல்களை படிப்பதில்லை. விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. எந்நேரமும்
"வீடியோகேம்ஸில்' கவனம்
இருப்பதால், மனநலம் மட்டுமல்ல, உடல்நலமும்
பாதிக்கும். இது ஒரு வகை போதை. நண்பர்களுடன் பழகி, விளையாடினால்தான்
ஒழுக்கம், ஆளுமை தன்மை
போன்றவற்றை கற்க முடியும். விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானத்திற்கு
வரவேண்டும். இயற்கை, சுதந்திர
காற்றை சுவாசிக்க வேண்டும். அதைவிடுத்து, 4 சுவர்கள், ஒரு
கம்ப்யூட்டர்தான் உலகம் என இருந்துவிடாமல் இருக்க, தேவையான