உங்கள் வருகைக்கு நன்றி

உடல் நலத்திற்கு வேட்டு வைக்கும் கோலா பானங்கள்,

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றிஉயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலாபெப்சிலிம்கா போன்றவைபட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில்கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருகசினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல்கர்ப்பிணிகள்குழந்தைகள்நீரிழிவு நோயாளிகள்ரத்த அழுத்தம் உள்ளோர் கூடஇவற்றை பருகுகின்றனர்.

இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளதுஎன்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம்சர்க்கரைகாபீன்நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல்ஆணியை கரைத்தல்சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும்பாஸ்பாரிக் அமிலம்இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால்கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்.அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும்இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும்வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால்வினிகரை விட சுவையாக உள்ளது.

வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்பல்லில் குழி விழும். நம் பல்லைஇது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால்பல் மிருதுவாகி விடும். 250 மி.லி.பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக்களோவைட்டமினோதாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரைஉடனடியாக ரத்தத்தில் கலந்துகொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால்உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும்காபீனும் இதில் இருப்பதால்இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 - 125,  கோகோவில் 10 - 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 - 70 மி.கி.அளவுள்ள காபீன், 360 மி.லி.கோலா பானத்தில், 50 - 65 அளவு உள்ளது. இதில் உள்ள அமிலமும்காபீனும்வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேறகாபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன்குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்துஎலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால்எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன்இதய செயல்பாட்டையும்மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால்அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன்தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும்அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால்பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன்ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும். 

எனவேஎப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள்காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள்நாள் ஒன்றுக்கு, 300 மி.கி.அளவு காபீன் பருகலாம்அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால்உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாதுபணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets