உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகளுடனான நம் நட்பை, மேலும் அதிகரிக்க,,,

வியாழன், 1 ஜூன், 2017

பள்ளி செல்லும் குழந்தைகளை, புதிதாக பள்ளி செல்லும் குழந்தை, உயர்நிலைப் பள்ளி செல்பவர், மேல்நிலைப் பள்ளி செல்பவர் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகளை தயார்படுத்துவது தான், பெற்றோருக்கு மிகவும் சவாலான விஷயம். பள்ளியில் அட்மிஷன் கிடைத்தவுடன், அந்த பள்ளியை பற்றிய பாசிடிவ் விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்வது நல்லது.அங்கு சென்றால் புதிய நண்பர், ஆசிரியர் கிடைப்பர்; அன்பாக இருப்பர்; புதிதாக நிறைய விஷயங்களை கற்கலாம் எனக் கூறலாம். தவிர, பள்ளிக்கூடம் குறித்து குழந்தைகள், என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை, கேட்டு அறிந்து கொள்ளலாம்.
பள்ளி திறப்பதற்கு முன், குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவது நல்லது.குறைந்தது, 10 மணி நேரமாவது இரவில் உறங்க செய்வது, காலையில் கொஞ்சம் முன்பாகவே எழுந்து பல் தேய்ப்பது, குளிப்பது, சாப்பிடுவது, அன்றாட கடமைகளை செய்ய பழக்க வேண்டும். காலை வேளைகளில் குழந்தைகளிடம் கனிவாக பேசுவது நல்லது. அதனால், நமக்கும், அவர்களுக்கும் அன்றைய நாள் இனிதாக அமையும்.
மேலும், புதிய சீருடை, ஷூ முதலியவற்றை முன்பாகவே வாங்கி வைப்பது, புத்தகம், நோட்டுகளுக்கு அட்டை போட்டு வைப்பது, சைக்கிளில் செல்வதாக இருந்தால், 
அதை சர்வீஸ் செய்து வைப்பது என, முன்கூட்டியே தயார்படுத்தி வைக்கலாம்.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தற்போது நிறைய புராஜெக்ட் செய்ய சொல்கின்றனர். அதை திறம்பட அவர்கள் செய்ய உதவலாம். விடுமுறையில் அவர்கள் சென்று வந்த இடங்கள் பற்றிய கட்டுரைகள் எழுத சொல்வதால், அவர்களது நினைவாற்றலை அதிகப்படுத்தலாம்; அது, அவர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும்.
பெற்றோராகிய நாம், பள்ளி சென்ற போது செய்த குறும்புகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், குழந்தைகளுடனான நம் நட்பை, மேலும் 
அதிகரிக்க செய்யலாம்.
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மேற்படிப்பு குறித்த விபரங்கள், நம் பண்பாடு, கலாசாரம், பணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றியமையாதது.
இந்த வயதினரை பள்ளிக்கு அனுப்ப, எந்தவித முன் தயாரிப்பும் தேவையில்லை. இருப்பினும், அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டியது அவசியம். 

மேலும், இந்த இரண்டு ஆண்டு, அவர்கள் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வதுடன், கூடா நட்பில் சிக்கி கொள்ளாமல் நல்வழி நடத்துவதும் பெற்றோரின் கடமை ஆகும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets