ஆதார் கார்டு செயல்படாமல் போகும்?
சனி, 24 ஜூன், 2017
இந்தியாவில் இப்போது ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக
அனைவரும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறலாம். ஆம், இன்று அரசு மானியங்கள் முதல்
நிதி பரிவர்த்தனைகள் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என்பது உங்களுக்குத்
தெரிந்து இருக்கும்.
சரி, உங்களிடம் ஆதார் கார்டு இருந்தாலும் அது செல்லாத கார்டாக
மாற வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எதனால் உங்கள் ஆதார்
கார்டு செல்லா கார்டாக மாறும்?, எப்படி அதனை மீண்டும் முறையாக இயங்க வைப்பது? என்று இங்குப் பார்ப்போம்.
எப்போது உங்கள் ஆதார் கார்டு செயல்படாமல் போகும்?
உங்கள் ஆதார் கார்டை தொடர்ந்து மூன்று வருடங்கள்
பயன்படுத்தாமல் இருந்தால் அதாவது வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு, குடும்ப அட்டை
உள்ளிட்டவையில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது பிஎப் உள்ளிட்ட கணக்குகளில்
இணைக்காமல் இருந்தால் ஆதார் கார்டு செயல்படாது.
ஆதார் கார்டு செயல்படுகின்றதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது?
முதலில் ஆதார் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். அதில் ஆதார்
சேவைகள்(Aadhaar
services) டேபின்
கீழ் உள்ள ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்(Verify Aadhaar Numbe) என்ற தெரிவை தேர்வு செய்ய
வேண்டும்.
ஆதார் இணையதளம் செல்ல இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
செயல்படுகின்றதா என்று சரிபார்த்தல்
செயல்படுகின்றதா என்று சரிபார்த்தல்
ஆதார் எண்ணைச் சரிபார்க்கும் பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை
உள்ளிட்டு கேப்ட்சாவை உள்ளிட்டுச் சரிபார்க்கும் என்ற பொத்தானை அலுத்த வேண்டும்.
அப்படிச் செய்யும் போது ஆதார் எண் செயல்படும் போது பச்சை நிற டிக் மார்க்கும்
இதுவே இயங்கவில்லை என்றால் சிவப்பு நிற கிராஸ் மார்க்கும் வரும்.
ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் அருகில் உள்ள
ஆதார் மையத்திற்குச் சரியான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். உங்களுக்கு அருகில் எங்கு
ஆதார் மையம் உள்ளது என்று கண்டறிய இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
இங்கு என்ன செய்வார்கள்?
இங்கு என்ன செய்வார்கள்?
ஆதார் கார்டினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைப்
பூர்த்திச் செய்த பிறகு உங்கள் பையோமெட்ரிக் தரவுகளை உள்ளிட வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
ஆதார் கார்டின் விவரங்களைப் புதுப்பித்துச் செயல்படுத்த 25 ரூபாய்க் கட்டணமாக
வசுலிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் ஆதார் விவரங்களைப் புதுப்பித்துச்
செயல்படுத்த விரும்பும் போது சரியான் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
கண்டிப்பாக ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டுமா?
ஆம், முன்பே நாம் அளித்த பையோமெட்ரிக் விவரங்களும், இப்போது புதிதாக நீங்கள்
அளிக்கும் பையோமெட்ரிக் விவரங்களுடன் பொருந்துவதை வேண்டும். அப்படியானால் நீங்கள்
கண்டிப்பாக ஆதார் உள்ளிட்டு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
நன்றி :
குட்ரிட்டர்ன்ஸ்