நீங்கள் சோம்பல் பட்டால் அவ்வளவுதான் குழந்தைகள்.
வெள்ளி, 1 செப்டம்பர், 2017
குழந்தைகள்
எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மாக்களுக்கு மனது நிறைவதேயில்லை. 'நிறைய சாப்பிட்டால் தான் குழந்தை நன்றாக வளரும்' என நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, கிட்டத்தட்ட எல்லா அம்மாக்களுமே, குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணிக்கவே செய்கின்றனர். ஆனால், இப்படித் திணிப்பது குழந்தைகளுக்கு சாப்பாட்டின் மேல், வெறுப்பை ஏற்படுத்தி விடும்.எனவே, ருசியாக சமைத்து கொடுக்கலாம்; பீட்ரூட், கேரட், ஆரஞ்ச் என, இயற்கையான நிறம் சேர்த்து, கலர் கலராக
சமைத்து கொடுக்கலாம். திராட்சை கண்கள், பாதாமில் மூக்கு
என்று, இட்லியில் டெகரேட் செய்து, அவர்களை சாப்பிட
துாண்டலாம். காலையில் குழந்தை சாப்பிடவில்லை என்றால், லஞ்ச் சரியாக சாப்பிட்டு விடும்; இது இயல்பானது.
குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் பருப்பும், நெய்யும், காயும் கலந்து தருவது வழக்கமாக உள்ளது. அதே கிண்ணத்திலேயே
மிச்சமிருக்கும் சாதத்தில்,
தயிரும் கலந்து தருவதும் நடக்கிறது. இப்படி காய்கறி, தயிர், குழம்பு என
எல்லாவற்றையும் ஒரே கிண்ணத்தில், உங்களுக்கு கலந்து
கொடுத்தால் சாப்பிடுவீர்களா? அதேபோல, ஒரே மாதிரியான உணவுகளை திரும்பத் திரும்ப கொடுத்து, உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விட வேண்டாம். காக்கா, நாய் என்று பிள்ளைகளுக்கு காட்டி, பாட்டிகள், சாப்பாட்டை வாயில்
திணித்து விட்டனர். இந்த கால அம்மாக்கள், 'டிவி' மற்றும் மொபைல்போனை குழந்தைகள் கையில் கொடுத்து, தன்னை மறந்து அதை பார்க்கிற சமயத்தில், உணவை திணித்து விடுகின்றனர். இந்த இரண்டுமே குழந்தைகளை ஏமாற்றி, உணவை வாயில் திணிக்கிற, 'டெக்னிக்' தான். அதற்கு பதிலாக, சாப்பிடும்
நேரங்களை குழந்தைகளுக்கு ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொடுக்கலாம். ஓடியாடும்படி, பாட்டு பாடும்படி அல்லது விளையாட்டு காட்டி, கதை சொல்லி என்று சாப்பிடும் நேரத்தை, 'எஞ்ஜாய்' பண்ண
வைக்கலாம்.அன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டபடியே, குழந்தைக்கு சாதம் ஊட்டலாம். விஷயங்களை சொல்லும்
சுவாரஸ்யத்தில், குழந்தை சாப்பாட்டை சமர்த்தாக சாப்பிடும்.குழந்தைகளின் முன்
நீங்கள், 'டிவி' பார்த்தபடி
சாப்பிடக் கூடாது; குழந்தையும் அதையே பின்பற்றும், சரியாகவும் சாப்பிடாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உணவு பிடிக்கும். சிலருக்கு இட்லி, சிலருக்கு எப்போதும் தோசை அல்லது சப்பாத்தி. எனவே, குழந்தைகளுக்கு பிடித்ததை, செய்து
கொடுக்கலாம்.இன்றைக்கு எல்லா குழந்தைகளுக்குமே நுாடுல்ஸ் பிடிக் கிறது. அதனால், இதை மொத்தமாக தவிர்க்க முடியாது. அதற்கு பதிலாக, மாலை நேர சிற்றுண்டியாக மாற்றி கொஞ்சமாக கொடுக்கலாம்.
குழந்தைகளை நன்றாக
சாப்பிட வைக்க வேண்டுமென்றால், குழந்தைகளின்
ஒன்றரை வயதில் இருந்தே, அவர்களை தானாக அள்ளிச் சாப்பிட பழக்குவதே, முதல் தீர்வு.
குழந்தைகள்
சிந்தியபடி தான் சாப்பிடுவர். சிந்தியதை சுத்தப்படுத்த, நீங்கள் சோம்பல் பட்டால், அவர்களை சாப்பிட
பழக்க வைக்க முடியாது.