உங்கள் வருகைக்கு நன்றி

சிறுதானிய தொழில்கள்

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பெங்களூரில் சிறுதானிய பிசினசில் கலக்கும் தோழிகளில் ஒருவரான லதா: சென்னையை சேர்ந்தவள் நான். சி.ஏ., முடித்து, கணவரின் பணி காரணமாக பெங்களூரில் குடியேறினோம். சேலம் மாவட்டம் மோகனுாருக்குப் போனோம். அங்கே, சத்தான சிறுதானியங்கள் மலிவாகக் கிடைப்பதைப் பார்த்தேன். அப்போதுதான், நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரு பிசினஸ் ஐடியாவை யோசித்தோம். சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி, பெங்களூரில் விற்க முடிவெடுத்தோம். இப்போது, தினமும், 300 லிட்டர் மாவு விற்கும் அளவுக்கு, எங்கள் தொழில் வளர்ந்துள்ளது. எங்களின் இணையதளம், 'டெய்லி நிஞ்சா' மூலமும், 'மொபைல் ஆப்' மூலமாகவும், மாவுகளைப் பெறலாம். இப்போது பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான ஆர்கானிக் கடைகள், பெரிய கேட்டரிங் நிறுவனங்கள் என, பலரும் எங்களிடம் மாவு வகைகள் வாங்குகின்றனர். அடுத்ததாக, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி, தமிழகத்திலும் களம் இறங்க உள்ளோம். செல்வலட்சுமி: விவசாயியான என் அப்பா மூலமாக, சிறுதானியங்களை வாங்கி, முதல் கட்டமாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போர், குடும்ப நண்பர், உறவினர்களுக்கு விற்பனை செய்தோம். ஆனால், சிறுதானியங்களை எப்படி சமைப்பது என தெரியவில்லை. 'இட்லி, தோசைக்கான மாவாக கிடைத்தால் நன்றாக இருக்குமே' என, இளம் அம்மாக்களும், பணிபுரியும் பெண்களும் கேட்க, வீட்டில் இருந்த கிரைண்டரில் நாங்களே தானியங்களை மாவாக அரைத்து விற்க ஆரம்பித்தோம். நிறைய பேர் வாங்கினர். அவர்களிடம் கருத்து கேட்டு, மாவை மெருகேற்றி, வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப விற்பனை செய்யும் வித்தையைக் கற்றோம்.சில மாதங்களிலேயே மாவு அரைக்கத் தனி யூனிட் துவங்கி, பெரிய கிரைண்டர்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்தினோம். 
ஆரம்ப நாட்களில் வேலையாட்கள் சரியாக அமையாத சூழலில், மாவு அரைத்து, பொங்கிப் புளிக்க வைத்து, பாக்கெட்டுகளில் நிரப்பி, காலை, 4:00 மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்வது வரை படித்து விட்டோம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets