உங்கள் வருகைக்கு நன்றி

பெற்றோரே நீங்கள்தான் துணை

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

குழந்தைகளின்பிரச்னைகளை தீர்ப்பது பெற்றோரின் கடமை!
ஆண்ட்ராய்டு மற்றும் கணினி போதையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க,  
 பெருமைக்காக, குழந்தைகள் கையில் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு மொபைல் போனைத் தரும்போது, பாதுகாப்பு குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததால், அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது.
பிள்ளைகளின் பிடிவாதம், அந்தஸ்து, கல்விக்காக கணினி மற்றும் மொபைல் போனை வாங்கித் தரும் முன், சில முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். டெக்னாலஜி வாயிலாக, நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என்பதை, பெற்றோர் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்
எதற்கெடுத்தாலும் மனம் சுருங்கும் பிள்ளைகளிடம், நேர்மறை வலுவூட்டல் முறையை உபயோகிக்க வேண்டும்.அதாவது, 'இதையெல்லாம் பார்க்காதே, செய்யாதே' என்று கண்டிப்பதற்குப் பதில், 'இதைச் செய், பரிசாக இதைத் தருகிறேன்' என, நேர்மறையாகச் செயல்பட வேண்டும்.
வளர்ந்து நிற்கும் டெக்னாலஜியை, நம் தேவைக்கு வெறும் கருவியாக மட்டும் உபயோகித்தாலே, இம்மாதிரியான பிரச்னைகளுக்குத் தீர்வு வரும். 'ப்ளூ வேல்' என்ற, இந்த விபரீத வலைதள விளையாட்டு கூட, தனக்கு அடிமையானவர்களை மட்டுமே துரத்த முடியும்.
உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும், இந்த ஆபத்துகளை உருவாக்கியவரின் கட்டளையைக் கேட்டு நடக்கும் பிள்ளைகள், நம் பேச்சையும் கேட்பர் என்னும் நம்பிக்கை பெற்றோருக்கு வரவேண்டும்.
அதற்கு அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முன்வர வேண்டும். 'போய் விளையாடு' என, தனிமையைத் தருவதற்கு பதில், 'வா விளையாடலாம்' என அழைத்தால், மகிழாத குழந்தைகள் இல்லை.ஓடி விளையாடும் பழக்கத்தை ஊக்குவித்தும்,  விளையாட்டு எழுத்து போன்ற தனித் திறமைகளை கண்டுபிடித்து ஆதர வளித்தும், மனம் விட்டுப் பேசியும், அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது பெற்றோரின் முக்கியக் கடமை.

'எது வசதி' என்பதை விட, 'எது சரி' என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால் உடனடி கவனம் வைத்து, தகுந்த ஆலோசனைகள் மூலம் அவர்களை மீட்டெடுங்கள். அன்பும், ஆதரவுமற்ற குழந்தைகளே, பெரும்பாலும் த்ரில்லுக்காகவும், தங்கள் மீதான கவனிப்பை அதிகப்படுத்துவதற்காகவும் தற்கொலை போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. இதை தடுக்க, நவீனடெக்னாலஜி துணையுடன், பெற்றோரின் துணையும் அவசியம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets