உங்கள் வருகைக்கு நன்றி

சர்க்கரை நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்.

செவ்வாய், 25 டிசம்பர், 2018


ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை, டீ அல்லது காபியில் அதிகமாகி விட்டால், சர்க்கரை நோய் வந்துவிடும் என்பதும், சர்க்கரை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், நீரிழிவு வரும் என்பதும் உண்மை இல்லை.ஆனால், நீங்கள் கூடுதலாக சாப்பிடும் ஒவ்வொரு கலோரியும் தான், சர்க்கரையை இருகரம் கூப்பி வரவேற்கிறது.அதிகம் சாப்பிட சாப்பிட, உடலில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். கொழுப்பு, 'இன்சுலினை' ஒழுங்காக வேலை செய்யவிடாமல் தடுக்கும். இன்சுலின் வேலை தடைபடுவதால், சர்க்கரை தாறுமாறாக கூடும். எதையும், அளவுக்கு மீறி சாப்பிட்டாலே கொழுப்பு சேரும். அதனால், சர்க்கரை வரக்கூடும். இதைத் தடுக்க, வெளிநாடுகளில், சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரியின் அளவு குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி செய்வதால், ஒரு நாளுக்கு எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோம் என்பதை கணக்கிட்டு, அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளலாம். குளிர்பானம், கேக், எண்ணெயில் பொரித்த உணவு,  இறைச்சி மற்றும் இனிப்பு வகை ஆகியவை, கலோரி அதிகமுள்ள உணவுகள். பச்சைக் காய்கறி, கீரை, பழம், பருப்பு வகை, முளைகட்டிய தானியம், புரதம் நிறைந்த உணவு, சிறிய மீன் வகை ஆகியவை, கலோரி குறைவான உணவுகள்.இளநீர், மோர், டீ, காபி, பழம், கீரை வகை, காய்கறி, 50 கலோரிக்கும் குறைவான உணவுகள். பால், தயிர், சட்னி வகை, சுண்டல் வகை, கிழங்கு வகை, 51 - 100 கலோரி வரை உள்ள உணவுகள். இட்லி, தோசை, சப்பாத்தி, மீன், முட்டை, கலவை சாத வகை, 101 - 200 கலோரி உள்ள உணவுகள்.கோழிக்கறி, வறுத்த இறைச்சி, ஆட்டுக்கறி, ஐஸ்க்ரீம், பூரி, பரோட்டா, லட்டு, பப்ஸ், இனிப்பு வகை, 201 - 400 கலோரி உள்ள உணவுகள். அல்வா, இறைச்சி உள்ளுறுப்புகள், நெய், மிக்சர், முறுக்கு ஆகியவை, 400 கலோரிக்கும் மேல் உள்ளவை. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்களைப் பொறுத்து, கலோரியின் அளவு மாறுபடலாம்.ஒருவரின் வயது, பாலினம், எடை, உயரம், வேலைத்தன்மை, உடற்பயிற்சி ஆகியவற்றை வைத்து தான், ஒரு நாளுக்கு, எவ்வளவு கலோரி தேவை என்பதை கணிக்கிட முடியும். www.freedieting.com என்ற இணையதளத்தில், தகவல்களை அளித்து, தேவையான கலோரியை கணக்கிட்டுக் கொள்ளலாம்.சர்க்கரை வராமல் தடுக்க, கலோரியைக் கணக்கிட்டு சாப்பிடு வது நல்லது. தினமும், குறைந்தபட்சம் அரைமணி நேரம், உடலுக்கு பயிற்சி கொடுத்தே ஆகவேண்டும்.

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர்கருணாநிதி:

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 மாநகராட்சி மண்டலங்கள் விவரம்:

வெள்ளி, 7 டிசம்பர், 2018


மண்டலம்-1 
திருவொற்றியூர் (1 முதல் 14 வார்டுகள்) 
மண்டலம்-2 மணலி (15 முதல் 21 வார்டுகள்) 
மண்டலம்-3 மாதவரம் (22 முதல் 33 வார்டுகள்) 
மண்டலம்-4 தண்டையார்பேட்டை (34 முதல் 48 வார்டுகள்) 
மண்டலம்-5 ராயபுரம் (49 முதல் 63 வார்டுகள்) 
மண்டலம்-6 திருவிகநகர் (64 முதல் 78 வார்டுகள்) 
மண்டலம்-7 அம்பத்தூர் (79 முதல் 93 வார்டுகள்) 
மண்டலம்-8 அண்ணாநகர் (94 முதல் 108 வார்டுகள்) 
மண்டலம்-9 தேனாம்பேட்டை (109 முதல் 126 வார்டுகள்) 
மண்டலம்-10 கோடம்பாக்கம் (127 முதல் 142 வார்டுகள்) 
மண்டலம்-11 வளசரவாக்கம் (143 முதல் 155 வார்டுகள்) 
மண்டலம்-12 ஆலந்தூர் (வார்டு 156 முதல் 169 வார்டுகள்) 
மண்டலம்-13 அடையாறு (170 முதல் 182 வார்டுகள்) 
மண்டலம்-14 பெருங்குடி (183 முதல் 191 வார்டுகள்), 
மண்டலம்-15 சோழிங்கநல்லூர் (192 முதல் 200 வார்டுகள்).

சென்னை மாநகராட்சி மண்டலங்கள்.

மண்டலம்1:
சிதம்பரனார் முத்தி யால்பேட்டை ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, 80, தம்பு செட்டி தெரு, மண்ணடி, சென்னை-1 (காளி காம்பாள் கோவில் அருகில்).
மண்டலம் 2:
இராயபுரம்சென்னை நடுநிலைப்பள்ளி, கார்னேஷன் நகர், எருக்கஞ்சேரி ரோடு, கொருக்குப்பேட்டை, சென்னை-21 (தண்டையார்பேட்டை மேம் பாலம் அருகில்).
மண்டலம் 3:
பெரம்பூர் சென்னை துவக்கப்பள்ளி, வ.உ.சி. விளை யாட்டு திடல், 143, நியு பேரக்ஸ் ரோடு, பட்டாளம், சென்னை-12 (பட்டாளம் காவல் நிலையம் எதிரில்).
மண்டலம் 4:
அண்ணாநகர் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பு.எண்.66/ப.எண்.162, என்.எம்.கே. தெரு, அயன்புரம், சென்னை-23 (அயன்புரம் மார்க்கெட் பின் புறம்) .
மண்டலம் 5:
அம்பத்தூர் வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, 4வது பிளாக், எம்.எம்.டி.ஏ.காலனி, மதுரவாயல், சென்னை-95 (மதுரவாயல் பள்ளி வாசல் அருகில்.
மண்டலம் 6:
வில்லிவாக்கம் சென்னை துவக்கப் பள்ளி, 34, சீனிவாசா நகர் மூன்றாவது தெரு, கொளத்தூர், சென்னை-99 (கொளத்தூர் காஞ்சி ஓட்டல் பின் புறம்).
மண்டலம் 7:
திருவொற்றியூர் சமு தாய கூடம், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர், சென்னை 57.
மண்டலம் 8:
ஆவடி பெருநகராட்சி துவக்கப்பள்ளி, சத்தியமூர்த்தி நகர், திருமுல்லைவாயல், சென்னை-600 062. (காவலர் குடி யிருப்பு அருகில்).
மண்டலம் 9:
தி.நகர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளி, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை 600 087, (சென்னை மாநகராட்சி 11-வது மண்டல அலுவலகம் அரு கில்).
மண்டலம் 10:
மயிலாப்பூர் சென்னை உயர்நிலைப் பள்ளி, கதவு எண்.76, காமராஜர் அவென்யூ, அடை யாறு, சென்னை 600 020. (176-வது மாமன்ற உறுப்பினர் அலுவலகம் பின்புறம்).
மண்டலம் 11:
பரங்கிமலை புனித தோமையார் மலை ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி, நடராஜன் தெரு, மூங்கில் ஏரி, பம்மல், சென்னை-75 (புற்றுக்கோயில் எதிர்புறம்).
மண்டலம் 12:
தாம்பரம் பீர்க்கன் கரணை பேரூராட்சி அலுவலகம், சீனிவாசா நகர், பீர்க்கன்கரணை, சென்னை-600 063.
மண்டலம் 13:
சைதாப்பேட்டை சென்னை மாநகராட்சி கூடம், கெங்கையம்மன் கோயில் தெரு, கட்டபொம்மன் பிளாக், ஜாபர் கான்பேட்டை, சென்னை-600083.
மண்டலம் 14:
ஆயிரம் விளக்கு புனித பிரான்சிஸ் சேவியர் நடு நிலைப் பள்ளி, 153, டி.டி.கே ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 (அடையாறுகேட் ஓட்டல் அருகில்).
மண்டலம் 15:
சேப்பாக்கம் சென்னை துவக்கப் பள்ளி, கதவு எண். 25, நாகப்பன் தெரு, புதுப் பேட்டை, சென்னை-600 002.
மண்டலம் 16:
சோழங்கநல்லூர் அரசினர் உயர் நிலைப் பள்ளி, பள்ளிக்கூடசாலை, கந்தன்சாவடி, பெருங்குடி, சென்னை-600 096. (184வது வார்டு மாமன்ற உறுப் பினர் அலுவலகம் பின்புறம்)

செம்பருத்திப்பூவை சாகுபடி செய்து வருமானம் ஈட்டலாம்.

திங்கள், 3 டிசம்பர், 2018


மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூவை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி: கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். விவசாயத்துக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து, சென்னையில், ஒரு, 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 10 ஆண்டுகள் வேலை செய்தேன்.ஒரு கட்டத்தில் வேலை மிகவும் போர் அடிக்கவும், 2015ல், குடும்பத்தோடு ஊர் திரும்பி விட்டேன். எங்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர், கரம்பை நிலம், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், சீமைக்கருவேல மரங்களால் அடர்ந்து இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை தயார் செய்து, 4,000 செம்பருத்தி செடிகளை நடவு செய்தேன். அதில், 500 செடிகள் பட்டுப்போயின.மீத செடிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை, ஆறு மாதங்களாக, அறுவடை செய்து வருகிறேன். சென்னை, கோவை, டில்லி நகரங்களில் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்களை தேடிப்பிடித்து, நேரடியாக பூக்களை விற்பனை செய்து வருகிறேன். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்கள், மணப்பாகு தயாரிக்க, தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.உலராத பூக்களாகவும், மீதியை காய வைத்த பூக்களாகவும் விற்பனை செய்து வருகிறேன். 100 கிலோ பூவை காய வைத்தால், 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத, 200 கிலோ பூக்களை, கிலோ, 200 ரூபாய் என விற்று, 40 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது. அதேபோல், 3,154 கிலோ பூக்களை உலர வைத்து, 616 கிலோ கிடைத்தது. இது, கிலோ, 490 - 750 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலமாக, 3.08 லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இதுவரை, நிலம் சீரமைப்பு, செடிகள், சொட்டுநீர் பாசனம், களை எடுப்பு, இடுபொருள் செலவு என, 2.71 லட்சம் ரூபாய் செலவு போக, 77 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும்; பராமரிப்பு செலவு குறைந்து விடும் என்பதால், இனி, லாபம் அதிகரிக்கும். அத்துடன், செம்பருத்தியில் இருந்து தேநீர்ப் பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி ஜாம் என, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் யோசனையும் உள்ளது. அப்படி விற்பனை செய்ய ஆரம்பித்தால், கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பித்து விடும்.
தொடர்புக்கு: 99430 06666.

'சாக்லேட் பொக்கே' தயாரிப்புத் தொழில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018


 'சாக்லேட் பொக்கே' தயாரிப்பதை முழு நேர தொழிலாக்கி, லாபம் ஈட்டி வரும், சென்னையைச் சேர்ந்த மாலதி: சிறு வயது முதலே, கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்குப் பின், வீட்டில் இருந்தே வேலை பார்க்க நினைத்தேன். அதன்படி, கலைப் பொருட்கள் மற்றும் நகைகள் செய்து, விற்று வந்தேன்.என் குழந்தைகளுக்காக, வீட்டிலேயே சாக்லேட் செய்து வந்த நான், விழாக்கள், விசேஷங்களுக்கு, அதை பரிசாக கொடுக்க ஆரம்பித்தேன். இதையே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைத்ததில், 'சாக்லேட் பொக்கே' யோசனை வரவே, உடனே களத்தில் இறங்கினேன்!பயிற்சிக்குச் செல்லாமல், ஒரு பொக்கே வாங்கி, அதை எப்படி செய்துள்ளனர் என, பிரித்து பார்த்தேன். பிறகு, என்னென்ன வகைகளில் வித்தியாசமாக செய்யலாம் என, பல கடைகளில் இருந்த மாடல்களை பார்த்துக் கற்றுக் கொண்டேன். ஒரு விசேஷத்துக்கு, நான் செய்த சாக்லேட் பொக்கேயை பரிசாக கொடுத்தேன். அதுவே, இப்போது தொழிலாக மாறிவிட்டது.பொதுவாகவே, சாக்லேட்டில், 'கோக்கோ'வை தான், அனைவரும் அதிகமாக சேர்ப்பர். ஆனால் நான், 'நட்ஸ்' வகைகளை தான் அதிகமாக சேர்த்து செய்வேன். ஆரோக்கியமும், சுவையும் உடையது, நட்ஸ் என்பதால், நான் செய்த சாக்லேட், அனைவருக்கும் பிடித்து போனது.வெறும் காகிதப்பூ பொக்கே, நமக்கு பயன் தராது; அசல் பூக்களில் செய்யும் பொக்கே, குறிப்பிட்ட நேரத்துக்கு பின் வாடிவிடும் என்பதால், அதனாலும் பயனில்லை. ஆனால், 'சாக்லேட் பொக்கே'வைப் பொருத்தவரை, 'வேஸ்ட்' இருக்காது! அதனால், தொடர்ந்து எனக்கு, 'ஆர்டர்கள்' வர ஆரம்பித்தன. சில கடைகளிலும் கேட்டனர்.'இதை செய்வது குறித்து, எங்களுக்கு பயிற்சி தர முடியுமா...' என, பலர் கேட்க, வகுப்பும் எடுத்தேன். அதன் மூலமாக வந்த, 'ஆர்டர்'களையும் செய்து கொடுத்தேன். இதனால் என்னிடம் பயிற்சி எடுத்தவர்களுக்கும், நல்ல வருமானம் கிடைத்து வருகிறது!இது தவிர, இப்போது, கலைப் பொருட்களையும் செய்து கொடுக்கிறேன். நகை செய்வது மற்றும் கோடை வகுப்பும் எடுக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் அரசு சான்றிதழ்கள் வாங்கி, ஒரு, 'பிராண்ட்' ஆக மாற்ற முயற்சி செய்து வருகிறேன். என் எதிர்கால திட்டமே, இதன் மூலம், பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் வருமானத்துக்கு வழி செய்வது தான்!தொடர்புக்கு: 98407 08153

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets