'சாக்லேட் பொக்கே' தயாரிப்புத் தொழில்
ஞாயிறு, 2 டிசம்பர், 2018
'சாக்லேட் பொக்கே' தயாரிப்பதை முழு நேர தொழிலாக்கி, லாபம் ஈட்டி
வரும், சென்னையைச்
சேர்ந்த மாலதி: சிறு வயது முதலே, கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்குப்
பின், வீட்டில்
இருந்தே வேலை பார்க்க நினைத்தேன். அதன்படி, கலைப் பொருட்கள் மற்றும் நகைகள் செய்து, விற்று
வந்தேன்.என் குழந்தைகளுக்காக, வீட்டிலேயே சாக்லேட் செய்து வந்த நான், விழாக்கள், விசேஷங்களுக்கு, அதை பரிசாக
கொடுக்க ஆரம்பித்தேன். இதையே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைத்ததில், 'சாக்லேட்
பொக்கே' யோசனை வரவே, உடனே
களத்தில் இறங்கினேன்!பயிற்சிக்குச் செல்லாமல், ஒரு பொக்கே வாங்கி, அதை எப்படி
செய்துள்ளனர் என, பிரித்து பார்த்தேன். பிறகு, என்னென்ன வகைகளில் வித்தியாசமாக செய்யலாம்
என, பல கடைகளில்
இருந்த மாடல்களை பார்த்துக் கற்றுக் கொண்டேன். ஒரு விசேஷத்துக்கு, நான் செய்த
சாக்லேட் பொக்கேயை பரிசாக கொடுத்தேன். அதுவே, இப்போது தொழிலாக மாறிவிட்டது.பொதுவாகவே, சாக்லேட்டில், 'கோக்கோ'வை தான், அனைவரும்
அதிகமாக சேர்ப்பர். ஆனால் நான், 'நட்ஸ்' வகைகளை தான் அதிகமாக சேர்த்து செய்வேன். ஆரோக்கியமும், சுவையும்
உடையது, நட்ஸ்
என்பதால்,
நான்
செய்த சாக்லேட், அனைவருக்கும் பிடித்து போனது.வெறும் காகிதப்பூ பொக்கே, நமக்கு பயன்
தராது; அசல்
பூக்களில் செய்யும் பொக்கே, குறிப்பிட்ட நேரத்துக்கு பின் வாடிவிடும் என்பதால், அதனாலும்
பயனில்லை. ஆனால், 'சாக்லேட் பொக்கே'வைப் பொருத்தவரை, 'வேஸ்ட்' இருக்காது! அதனால், தொடர்ந்து எனக்கு, 'ஆர்டர்கள்' வர ஆரம்பித்தன. சில கடைகளிலும் கேட்டனர்.'இதை செய்வது
குறித்து,
எங்களுக்கு
பயிற்சி தர முடியுமா...' என, பலர் கேட்க, வகுப்பும் எடுத்தேன். அதன் மூலமாக வந்த, 'ஆர்டர்'களையும்
செய்து கொடுத்தேன். இதனால் என்னிடம் பயிற்சி எடுத்தவர்களுக்கும், நல்ல வருமானம்
கிடைத்து வருகிறது!இது தவிர, இப்போது, கலைப் பொருட்களையும் செய்து கொடுக்கிறேன். நகை செய்வது
மற்றும் கோடை வகுப்பும் எடுக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் அரசு சான்றிதழ்கள்
வாங்கி, ஒரு, 'பிராண்ட்' ஆக மாற்ற
முயற்சி செய்து வருகிறேன். என் எதிர்கால திட்டமே, இதன் மூலம், பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை
ஏற்படுத்தி,
அவர்களின்
வருமானத்துக்கு வழி செய்வது தான்!தொடர்புக்கு: 98407 08153