சர்க்கரை நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்.
செவ்வாய், 25 டிசம்பர், 2018
ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை, டீ அல்லது காபியில் அதிகமாகி விட்டால், சர்க்கரை நோய் வந்துவிடும் என்பதும், சர்க்கரை உள்ள உணவுகளை அதிகம்
சாப்பிடுவதால், நீரிழிவு வரும் என்பதும் உண்மை இல்லை.ஆனால், நீங்கள் கூடுதலாக சாப்பிடும் ஒவ்வொரு கலோரியும் தான், சர்க்கரையை இருகரம் கூப்பி வரவேற்கிறது.அதிகம் சாப்பிட சாப்பிட, உடலில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். கொழுப்பு, 'இன்சுலினை' ஒழுங்காக வேலை செய்யவிடாமல் தடுக்கும். இன்சுலின் வேலை தடைபடுவதால், சர்க்கரை தாறுமாறாக கூடும். எதையும், அளவுக்கு மீறி சாப்பிட்டாலே கொழுப்பு
சேரும். அதனால், சர்க்கரை வரக்கூடும். இதைத் தடுக்க, வெளிநாடுகளில், சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரியின்
அளவு குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி செய்வதால், ஒரு நாளுக்கு எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோம் என்பதை கணக்கிட்டு, அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளலாம். குளிர்பானம், கேக், எண்ணெயில் பொரித்த உணவு, இறைச்சி மற்றும் இனிப்பு வகை ஆகியவை, கலோரி அதிகமுள்ள உணவுகள். பச்சைக் காய்கறி, கீரை, பழம், பருப்பு வகை, முளைகட்டிய தானியம், புரதம் நிறைந்த உணவு, சிறிய மீன் வகை ஆகியவை, கலோரி குறைவான உணவுகள்.இளநீர், மோர், டீ, காபி, பழம், கீரை வகை, காய்கறி, 50 கலோரிக்கும் குறைவான உணவுகள். பால், தயிர், சட்னி வகை, சுண்டல் வகை, கிழங்கு வகை, 51 - 100 கலோரி வரை உள்ள உணவுகள். இட்லி, தோசை, சப்பாத்தி, மீன், முட்டை, கலவை சாத வகை, 101 -
200 கலோரி உள்ள உணவுகள்.கோழிக்கறி, வறுத்த இறைச்சி, ஆட்டுக்கறி, ஐஸ்க்ரீம், பூரி, பரோட்டா, லட்டு, பப்ஸ், இனிப்பு வகை, 201 - 400 கலோரி உள்ள உணவுகள். அல்வா, இறைச்சி உள்ளுறுப்புகள், நெய், மிக்சர், முறுக்கு ஆகியவை, 400 கலோரிக்கும் மேல் உள்ளவை.
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்களைப் பொறுத்து, கலோரியின் அளவு மாறுபடலாம்.ஒருவரின் வயது, பாலினம், எடை, உயரம், வேலைத்தன்மை, உடற்பயிற்சி ஆகியவற்றை வைத்து தான், ஒரு நாளுக்கு, எவ்வளவு கலோரி தேவை என்பதை கணிக்கிட முடியும். www.freedieting.com என்ற இணையதளத்தில், தகவல்களை அளித்து, தேவையான கலோரியை கணக்கிட்டுக் கொள்ளலாம்.சர்க்கரை வராமல் தடுக்க, கலோரியைக் கணக்கிட்டு சாப்பிடு வது நல்லது. தினமும், குறைந்தபட்சம் அரைமணி நேரம், உடலுக்கு பயிற்சி கொடுத்தே ஆகவேண்டும்.
நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், கருணாநிதி: