மொபைல் போன்களின் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
வியாழன், 3 ஜனவரி, 2019
மொபைல் போன், ஒரு அத்தியாவசிய, யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டிய கருவியாகி விட்டது.
மொபைல் போனை பயன்படுத்தா விட்டாலும், மொபைல் போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறர் பயன் படுத்தும்போதும் வெளிப்படும் கதிர்வீச்சும், நம்மை பாதிக்கவே செய்யும்.
இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து, நம்மை பாதுகாக்கும் வழிகளை பின்பற்றி, நம் குடும்பம் மற்றும் சந்ததியினரை காப்பாற்றிக் கொள்வோம்.
மொபைல் போனால் ஏற்படும் தீமைகளில் முக்கியமானது, அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு, மூளையை செயல் இழக்க செய்யும். கதிர்வீச்சால், மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
* ஒரு நாளைக்கு, 30 நிமிடங்களுக்கு மேல், மொபைல் போன் உபயோகிப்போரிடம், இந்த நோயின் தாக்கம் அதிகம் ஏற்படலாம்
* 'லேண்ட் லைன்' உபயோகிக்கும் வசதி இருந்தால், அதை பயன்படுத்தலாம். ஏனென்றால், 'லேண்ட் லைன்' போன்களை விட, மொபைல் போனால் பாதிப்புகள் அதிகம்
* ஏதாவது சுருக்கமான செய்தியை, மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமென்றால், போன் செய்வதை தவிர்த்து, குறுஞ்செய்தி அனுப்பலாம்
* குழந்தைகளிடம், மொபைல் போனை தரவே கூடாது. அவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், குழந்தைகளை சுலபமாக கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது
* உங்கள் மொபைல் போனில், சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேசுவதால், கதிர்வீச்சு பாதிப்பு அதிகமாக இருக்கும்
* காதில் வைத்து பேசுவது, 'ஹெட்' போனில் பேசுவது போன்றவைகளை விட, 'ஸ்பீக்கர்' வசதியுடைய போனில் பேசுவது சிறந்தது
* துாங்கும்போது, மொபைல் போனை அருகில் வைத்து, துாங்கும் பழக்கமிருந்தால், அதை உடனே கைவிடவும்
* நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும்போது, எதிர் முனையில், உங்கள் தொடர்பை, 'ஆன்' செய்தவுடன், போனை காதின் அருகே வைத்து பேசவும். 'ரிங்' போகும்போதே காதில் வைப்பதால், பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சு அளவை விட, 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
* மொபைல் போனில் பேசும்போது, வலது பக்க காதில் வைத்து பேசாமல், இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான், மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது
* 'கேம்' விளையாடுவதை தவிர்க்கவும். முக்கியமாக, பயணம் செய்யும்போது, விளையாடுவதை தவிருங்கள். ஏனெனில், கண்களில் உள்ள 'லென்ஸ்' பகுதி, பாதிக்க, அதிக வாய்ப்புள்ளது
* 'வைபரேஷன் மோடில்' வைப்பதை தவிர்க்கவும்
* சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைக்க வேண்டாம்
* பேசும்போது, இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடியபடி பேச வேண்டாம். 'இன்டெர்னல் ஆன்டெனா' பெரும்பாலும், போனின் பின்பக்க மத்தியில் வைத்திருப்பர். இதிலிருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளிப்படும்.