உங்கள் வருகைக்கு நன்றி

குளிர்காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு

திங்கள், 21 ஜனவரி, 2019


உடல் குளிர்ச்சியடையும் போதும், இந்த தசைப்பிடிப்புகள் ஏற்படும். இது, பெரும்பாலும் இரவில் துாங்கும்போது ஏற்படும். இதை, 'ஒரக்கலிக்கிறது' மற்றும்'இழுத்துப்பிடிக்கு' என்றும் கூறுவர்.
இந்த தசைப் பிடிப்பு ஏற்படும்போது, கால்களை அசைக்க முடியாத நிலையும் உண்டாகும்.
குளிர்காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். நாம் குடிக்கும் நீரின் அளவு, நம் உடலுக்குப் போதாத போதும், உடலில் உள்ள, 'பொட்டாசியம், சோடியம்' அளவு குறையும்போதும், முறையற்ற நிலையில் படுத்து துாங்கும் போதும், தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
சில வகையான மருந்து, மாத்திரை சாப்பிடுவதன் பக்கவிளைவாக, உதாரணமாக, மன நல பிரச்னை, கருகலைப்பு மற்றும் 'ஸ்டீராய்டு' மருந்துகளாலும் தசைப்பிடிப்பு வரலாம்.

இதை தடுக்க, தினமும் துாங்கச் செல்லும் முன், ஒரு பக்கெட்டில் சூடான நீர் ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி அளவு, 'மெக்னீசியம் சல்பேட்' அல்லதுவீட்டில் இருக்கும் கல்லுப்பை போட வேண்டும்.
அந்தத் தண்ணீரில் கெண்டைக்கால் தசை மூழ்கும்படி, சில நிமிடம் வைத்திருக்க வேண்டும். இது, இரவில் ஏற்படும் தசைப்பிடிப்பு வராமல் தடுக்கும். தவிர, நிம்மதியான துாக்கத்துக்கும் வழிவகுக்கும்.தினமும், எதாவது ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இது தசைப்பிடிப்பு, மூட்டுவாதம் வராமல் தடுக்கும்.இதுதவிர, பொட்டாசியம் நிறைந்த உணவுகளான புரோக்கோலி, உருளைக்கிழங்கு சாப்பிடலாம். வாய்வு அதிகமாக இருப்பவர்கள்,  உருளைக்கிழங்கை    தவிர்க்கலாம்.
மதிய வேளையில் இளநீர் குடிக்கலாம். இளநீர் கிடைக்காதவர்கள், ஒரு டம்ளர் தண்ணீரில், அரை எலுமிச்சையை ஊற வைத்து, அதில் வெல்லம், புதினா, சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம். இது, தசைப்பிடிப்பு வராமல் தடுப்பதுடன், உடலுக்கு சக்தியும் தருவதால், பல நோய்கள் வராமல் தடுக்கும்.வைட்டமின், 'டி மற்றும் இ' குறைபாடும் காரணம் என்பதால், காலை நேர மிதமான வெயிலில், 15 நிமிடம் நிற்கலாம். நான்கு பாதாம், இரண்டு பேரீச்சை, உலர்ந்த திராட்சை சிறிதளவு, இவற்றை தினமும் சாப்பிடலாம். அடிக்கடிஏற்படும் தசைப்பிடிப்பு என்றால், பருத்தித் துணியை சூடான தண்ணீரில்நனைத்து அல்லது 'ஹாட் வாட்டர் பேக்'கை ஒத்தடம் கொடுக்கலாம். திடீரென ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் குறிப்பிட்ட தசைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்போது அல்லது தொடர்ந்து செய்யும் வேலையால் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு, 'ஐஸ் பேக்' அல்லது பருத்தித் துணியில் ஐஸ்கட்டிகளை போட்டு, ஒத்தடம் கொடுக்கலாம்.மேலும், தசைப்பிடிப்பு இருக்கும் இடத்தில் லேசாக அழுத்தம் தரலாம். விளையாட்டு வீரர்கள் செய்வதைப் போல், கால்களை நீட்டி மடக்கலாம்.

சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த, முதியோர் சிறப்பு நல மருத்துவர், என்.லட்சுமிபதி ரமேஷ் மற்றும், அண்ணா சித்த மருத்துவமனையை சேர்ந்த, யோகா, இயற்கை மருத்துவர்,  ஒய்.தீபா:

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets