உங்கள் வருகைக்கு நன்றி

எதையுமே மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.

திங்கள், 18 மே, 2020


'பாசிட்டிவ்' ஆக இருப்பவர்களோடு பழகுங்கள். நம்மை சுற்றி எப்போதுமே, 'பாசிட்டிவ் வைப்ரேஷன்' இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே, எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை, எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
உற்சாகமாக இருங்கள்: சோகத்தை விட்டொழித்து, எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலை செய்யுங்கள். இந்த வேலையை செய்ய வேண்டுமே என, செய்து முடிக்காதீர். இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என, எண்ணி வேலை பாருங்கள்.
'பவர்புல்'லாக உணருங்கள்: உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி, மன வலிமை மிக முக்கியம். உங்களை போல, இந்த உலகத்தில், 'பவர்புல்' ஆனவர் யாருமில்லை என்றால், உடனே சிரிக்காதீர்கள்.

இது தான் நிஜம். உங்களின், 'பெஸ்ட்' எது என்பது, உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற, 'லெவல்' ஆள்.
நேசியுங்கள்: உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால், வெற்றியடையவே முடியாது.
உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால், உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை, மனதுக்கு புரிய வையுங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை; திறமையானவர் யாரும் இல்லை என்பதை, மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
முயற்சி தொடரட்டும்: வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என, தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில், ஒரு சிலருக்கு, வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால், 'பாசிட்டிவ்' எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets