உங்கள் வருகைக்கு நன்றி

பள்ளிக்கு போகாமலே, 'பாஸ்' ஆகும், மாற்று முறை

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இன்றைய கல்வி முறை, மனப்பாடத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையாக மாறி விட்டது. பல பள்ளிகளில் பாடங்களைச் சரிவர நடத்தாமலே, கேள்வி-- பதில்களை மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெற வைக்கின்றனர். விளையாட்டு, வேடிக்கை எதுவும், இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இல்லை. குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்ற, முயற்சிக்காதீர்கள்    மத்திய அரசின் மனிதவள துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம். இங்கு, ஆரம்ப, அடிப்படை கல்வி, 8ம் வகுப்புக்கு சமமானது. உயர்நிலை, மேல்நிலை கல்வியை, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம். இதில், நமக்கு பிடித்த பாடங்களை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. 10ம் வகுப்பிலேயே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி முதலான, 17 மொழிகளில் விருப்பப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மொழிகளை தேர்வு  செய்யலாம். கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல், ஓவியம், கணக்குப் பதிவியல் போன்ற, 11 பாடங்களில், 3 - 5 வரை தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேல்நிலையில் ஒன்பது மொழிகளும், 33 பாடத் துறைகளும் உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில், நம் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில், 5 - 7 பாடங்களில் தேர்வு எழுதலாம்.  இந்த முறை படிப்பால் நேரம், தாங்கள் விரும்பியவற்றை கற்கும் வசதியும், சுதந்திரமும் இருக்கிறது. இந்திய மெடிக்கல் கவுன்சில், ஐ.ஐ.டி., முதலான பொறியியல் கல்லுாரிகளுக்கான குழுமம், அனைத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் அங்கீகாரம் பெற்ற அமைப்பு இது. எனவே, இங்கு, 10ம் வகுப்பு முடித்தவர்கள், எந்த மாநிலத்தில் உள்ள பள்ளியிலும், பிளஸ் 1 சேர முடியும். மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்திற்கேற்ப, மருத்துவமோ, பொறியியலோ, வணிகவியல் சார்ந்த படிப்புகளையோ தொடர முடியும். இந்தாண்டு, சென்னையில் இருந்து, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர் தான். தங்கள் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பழக வாய்ப்பு தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.   குழந்தைகளை வீட்டில் இருந்தே படிக்க வைக்கலாம். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று, தனிமையில் இருக்க நேரும் குழந்தைகளுக்கு, இந்த முறை கொஞ்சம் கடினம் தான். இல்லையெனில், இதற்காக தனி வகுப்புகள் ஏற்பாடு செய்ய நேரிடும்.  

Read more...

நீங்கள் சோம்பல் பட்டால் அவ்வளவுதான் குழந்தைகள்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மாக்களுக்கு மனது நிறைவதேயில்லை. 'நிறைய சாப்பிட்டால் தான் குழந்தை நன்றாக வளரும்' என நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, கிட்டத்தட்ட எல்லா அம்மாக்களுமே, குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணிக்கவே செய்கின்றனர். ஆனால், இப்படித் திணிப்பது குழந்தைகளுக்கு சாப்பாட்டின் மேல், வெறுப்பை ஏற்படுத்தி விடும்.எனவே, ருசியாக சமைத்து கொடுக்கலாம்; பீட்ரூட், கேரட், ஆரஞ்ச் என, இயற்கையான நிறம் சேர்த்து, கலர் கலராக சமைத்து கொடுக்கலாம். திராட்சை கண்கள், பாதாமில் மூக்கு என்று, இட்லியில் டெகரேட் செய்து, அவர்களை சாப்பிட துாண்டலாம். காலையில் குழந்தை சாப்பிடவில்லை என்றால், லஞ்ச் சரியாக சாப்பிட்டு விடும்;  இது இயல்பானது. குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் பருப்பும், நெய்யும், காயும் கலந்து தருவது வழக்கமாக உள்ளது. அதே கிண்ணத்திலேயே மிச்சமிருக்கும் சாதத்தில், தயிரும் கலந்து தருவதும் நடக்கிறது. இப்படி காய்கறி, தயிர், குழம்பு என எல்லாவற்றையும் ஒரே கிண்ணத்தில், உங்களுக்கு கலந்து கொடுத்தால் சாப்பிடுவீர்களா?  அதேபோல,  ஒரே மாதிரியான உணவுகளை திரும்பத் திரும்ப கொடுத்து, உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விட வேண்டாம். காக்கா, நாய் என்று பிள்ளைகளுக்கு காட்டி, பாட்டிகள், சாப்பாட்டை வாயில் திணித்து விட்டனர். இந்த கால அம்மாக்கள், 'டிவி' மற்றும் மொபைல்போனை குழந்தைகள் கையில் கொடுத்து, தன்னை மறந்து அதை பார்க்கிற சமயத்தில், உணவை திணித்து விடுகின்றனர். இந்த இரண்டுமே குழந்தைகளை ஏமாற்றி, உணவை வாயில் திணிக்கிற, 'டெக்னிக்' தான். அதற்கு பதிலாக, சாப்பிடும் நேரங்களை குழந்தைகளுக்கு ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொடுக்கலாம். ஓடியாடும்படி, பாட்டு பாடும்படி அல்லது விளையாட்டு காட்டி, கதை சொல்லி என்று சாப்பிடும் நேரத்தை, 'எஞ்ஜாய்' பண்ண வைக்கலாம்.அன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டபடியே, குழந்தைக்கு சாதம் ஊட்டலாம். விஷயங்களை சொல்லும் சுவாரஸ்யத்தில், குழந்தை சாப்பாட்டை சமர்த்தாக சாப்பிடும்.குழந்தைகளின் முன் நீங்கள், 'டிவி' பார்த்தபடி சாப்பிடக் கூடாது; குழந்தையும் அதையே பின்பற்றும், சரியாகவும் சாப்பிடாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உணவு பிடிக்கும். சிலருக்கு இட்லி, சிலருக்கு எப்போதும் தோசை அல்லது சப்பாத்தி. எனவே, குழந்தைகளுக்கு பிடித்ததை, செய்து கொடுக்கலாம்.இன்றைக்கு எல்லா குழந்தைகளுக்குமே நுாடுல்ஸ் பிடிக் கிறது. அதனால், இதை மொத்தமாக தவிர்க்க முடியாது. அதற்கு பதிலாக, மாலை நேர சிற்றுண்டியாக மாற்றி கொஞ்சமாக கொடுக்கலாம்.
குழந்தைகளை நன்றாக சாப்பிட வைக்க வேண்டுமென்றால், குழந்தைகளின் ஒன்றரை வயதில் இருந்தே, அவர்களை தானாக அள்ளிச் சாப்பிட பழக்குவதே, முதல் தீர்வு.
குழந்தைகள் சிந்தியபடி தான் சாப்பிடுவர். சிந்தியதை சுத்தப்படுத்த, நீங்கள் சோம்பல் பட்டால், அவர்களை சாப்பிட பழக்க வைக்க முடியாது.



Read more...

மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நம்மில் பலருக்கும் பணக்காரர் ஆக வேண்டும்; லட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்முடைய ஆசை நிறைவேறுகிறதா... கனவு நினைவாகிறதா என்றால், நிச்சயம் இல்லை. தினமும் அந்த வேலை, இந்த வேலை எனச் சிறிய சிறிய வேலைகளுக்காகவே நாயாக, பேயாக உழைக்கிறோமே தவிர, நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள, வசதியை மேம்படுத்திக்கொள்ளப் பெரிதாக நினைப்பதுமில்லை; நினைப்பதை நிறைவேற்றவும் முடிவதில்லை. 

`பணம் இருந்தால் மட்டும் பணக்காரர் ஆகிவிட முடியாது. சிக்கனம், சேமிப்பு, முதலீடு, திட்டமிடலும் இருந்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியும்; தொடர்ந்து லட்சாதிபதியாக நிலைக்க முடியும்'' என்கின்றனர் சிகரத்தைத் தொட்டவர்கள். அதே சமயம் ``40, 50 வயதில் பணக்காரர் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை 40, 50 வயதில் யோசிப்பதைவிட, 10, 20 வருடங்களுக்கு முன்பே அதுகுறித்து நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வாழ்க்கையை வழிநடத்தினால் வெற்றி கிட்டும்'' என்கின்றனர் அனுபவசாலிகள். 
அறிஞர்கள் அருளிய எளிய வழிகள் உங்களுக்காக...
வருமானத்தைப் பெருக்கிக்கொள்! 
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணக்காரர் ஆவது, அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால், அதற்கான முதல் படி ஒவ்வோர் ஆண்டும் நாம் வளர்வதைப்போல, நம்முடைய வருமானமும் வளர வேண்டும். அது மாத சம்பளதாரராக இருந்தாலும் அல்லது ஏதேனும் வியாபாரம் செய்பவராக இருந்தாலும் வருமானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கவில்லையெனில், திறமையை வளர்த்துக்கொண்டு, உங்கள் துறையில் எங்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதைப் பார்த்து அங்கு மாறிக்கொள்வது சிறந்தது. உங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வது நல்லது. 
இரண்டாவது வேலை! 
உங்களுக்கு என ஒரே பணி, ஒரே சம்பளம், ஒரே வருமானம் என வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை நடத்தாதீர்கள். எந்த வழியில் எல்லாம் வருமானம் ஈட்ட முடியுமோ, அந்த வழியில் எல்லாம் முடிந்த வரை வருமானம் ஈட்டத் தயாராகுங்கள். வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் காலத்தைக் கடத்தாதீர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஆகையால், சிறிய வேலையாக இருந்தாலும் சரி, பெரிய வேலையாக இருந்தாலும் சரி முடிந்த வரை உங்களை வளைத்து வேலை செய்யுங்கள், வருமானத்தை ஈட்டுங்கள். 
சேமிக்கப் பழகு! 
உங்களுடைய முதல் மாதச் சம்பளம் அல்லது உங்களுடைய இப்போதைய வருமானத்திலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள். சேமிப்பு என்பதற்காக அந்தப் பணத்தை உண்டியலிலோ, பீரோ லாக்கரிலோ போட்டு வைப்பது சேமிப்பாகாது. இதனால் எந்த ஒரு பலனும் இல்லை. மாறாக, உங்களுக்கு நன்கு தெரிந்த, விருப்பமான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். தேவையில்லாத, அநாவசியமான செலவைக் குறைத்து நல்ல முதலீட்டுத் திட்டத்தில் நீண்டகாலத்துக்கு முதலீட்டை மேற்கொள்ளுங்கள். 
இலக்கை நிர்ணயிக்காதீர்கள்! 
வாழ்க்கையில் இலக்கு என்பது மிக அவசியம். ஆனால், வருமானம் விஷயத்தில் மட்டும் இலக்கு என எதையும் நிர்ணயிக்காமல், கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராமல் ஓடிக்கொண்டே இருந்தால் மட்டுமே அதிக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணத்துக்கு, ஆண்டுக்கு `ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என இலக்கு நிர்ணயித்து ஓடாமல், `10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என ஓடி உழையுங்கள். வருமானத்தைப் பொறுத்தவரை அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அதே சமயம் அதற்காகப் பல மடங்கு பாடுபடுங்கள். 
நேரம் ஒதுக்குங்கள்! 
தினமும் தூங்குவதற்கு முன்போ அல்லது வேறு ஒரு நேரத்திலோ குறைந்தது 5 அல்லது 10 நிமிடம், இன்று என்ன செய்தோம் என்பதை யோசியுங்கள். வாழ்க்கையை வளமாக்குவதற்காக இதுவரை சரியாகச் செய்தோமோ, செய்துவருகிறோமோ என உங்கள் பாதையை நீங்களே பின்னோக்கிப் பாருங்கள். குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என உங்கள் பாதையைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பயணியுங்கள். இதில் ஏதாவது தவறு இருந்தால் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே. 
நல்ல நண்பர்கள்! 
பணம் சம்பாதிப்பதைப் பொறுத்தவரை, நம்முடைய உழைப்பு மற்றும் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது. பணம் சம்பாதிப்பதைவிட நல்ல நண்பர்களை, உறவுகளைச் சம்பாதிப்பதும் மிகவும் முக்கியம். ஆகையால், என்னதான் உங்களுக்கு வேலை அல்லது தொழில் பிரச்னையாக இருந்தாலும் அதை வேறு ஒருவரிடம் காட்டாமல், மென்மையான அணுகுமுறையையே என்றும் கையாளுங்கள். ஏனெனில், பிறருடைய ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் எந்த ஒரு லட்சியத்தையும் அடைய முடியாது; லட்சத்தையும் சம்பாதிக்க முடியாது.
  நன்றி - விகடன்


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets