உங்கள் வருகைக்கு நன்றி

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்கு எது காரணம்

வியாழன், 22 நவம்பர், 2012

இதற்கு பாதிக்காரணம் பெற்றோர்கள் தான். தங்கள் பிள்ளைகளை உயர்படிப்புக்கு தயார் செய்யும் எந்திரங்களாகவே அவர்கள் வளர்க்கிறார்கள். படிப்பில் பிள்ளைகள் தங்கள் விருப்பத்தை புறக்கணித்து விட்டு பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாக வேண்டிய கட்டாயம். 

இப்படி பெற்றோரின் விருப்பம் திணிக்கப்பட்டு டாக்டராகவோ, என்ஜினீயராகவோ உருவாகும் பிள்ளைகள் தங்கள் எதிர்கால பட்ஜெட்டில் போடும் முதல் துண்டே அவர்கள் பெற்றோர் தான். இதுவே அந்தஸ்து, ஆடம்பரம், அள்ளிக் குவிக்கும் பணம் என்ற கனவில் இருந்து விடுபட்டு அவனுக்குள் அன்பை எத்தனை பெற்றோர் விதைத்திருப்பார்கள்? அப்படி விதைக்கத் தவறும்போது தான் பிள்ளைகள் வளரும் காலத்தில் பாசம் தடுமாறுகிறது. 

எந்தப்பணம் இருந்தால் அது தங்கள் பிள்ளையை கடைசி வரை பார்த்துக் கொள்ளும் என்று பெற்றோர் நினைத்தார்களோ, அதே பணம் பெற்றோரின் வயதான காலத்தில் பிள்ளைகளால் அவர்களுக்கு பிச்சை போல் தரப்படுகிறது. `நீ என்னை பணம் காய்ச்சும் மரமாக்கினாய். அதில் இருந்து உனக்கும் கொஞ்சம் தருகிறேன். 

பெற்றுக்கொண்டு எங்காவது கண்காணாத இடத்தில் உன்னை பார்த்துக்கொள்' என்கிற பிள்ளைகள் இப்போது அதிகரித்து விட்டார்கள். இப்படி பெற்றோர்-பிள்ளைகள் என்ற பந்தம் அற்றுப் போகப் பண்ணுகிற வித்தையை பணம் பிரதானமாக இருந்து செய்து முடித்து விடுகிறது.

Read more...

எதையும் கமெண்ட் போடும் முன் யோசித்து செய்யவும்.

செவ்வாய், 20 நவம்பர், 2012


ஃபேஸ்புக்கில் ஏதாவது கமெண்ட் போட்டாலோ, ஏன் அதற்கு லைக் கொடுத்தாலோ கூட கைது செய்யப்படலாம் என்ற நிலைமை இந்திய நாட்டில் உருவாகியுள்ளது. சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடந்தபோது மும்பையில் நடந்த பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய 21 வயது பெண் ஷாஹீன் மற்றும் அதற்கு லைக் கொடுத்த ரேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

''மரியாதை என்பது ஒருவர் சம்பாதிப்பது, கட்டாயப்படுத்தி பெறுவதில்லை. இன்று (நேற்று முன்தினம்) மும்பையில் முழு பந்த் நடப்பதற்கு காரணம் மரியாதை அல்ல பயம்'' என்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஷாஹீன் தெரிவித்திருந்தார். அதற்கு ரேணு லைக் கொடுத்திருந்தார். உடனே இது குறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் ஷாஹீன் மற்றும் ரேணுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஷாஹீன் தன் காமென்டை அழித்துவிட்டு, அதனால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்ன பிறகும் ஒரு கூட்டம் அந்த பெண்ணின் கிளினிக்கை சூறையாடி இருக்கிறது. அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஒரு பிரிவு மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்தியன் பீனல் கோட் 295 ஏ ஷரத்தின்கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பலர் கேலி செய்கிறார்கள். ‘இந்த சட்டப்பிரிவின்கீழ் மிகவும் அதிக முறை குற்றம் இழைத்தவர் பால் தாக்கரே அல்லவா?’ என்று கேட்கிறார்கள். 

இதற்கிடையே ஷாஹீனின் உறவினர் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் வைத்துள்ள கிளினிக்கை சிவசேனா தொ(கு)ண்டர்கள் அடித்து நொறுக்கினர். ஆனால், இவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்விகள் குவியவே, இப்போது இதில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டதற்காக 2 பெண்களை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ மகாராஷ்டிரா முதல்வர் பிரி்த்விராஜ் சவானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் 2 பெண்களை கைது செய்தது சட்டவிரோதமானது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கைது நடவடிக்கைக்கு அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவை விட அதிக சொத்து வைத்துள்ளார் என்று டுவிட்டரில் தெரிவித்த புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் எதையும் கமெண்ட் போடும் முன் யோசித்து செய்யவும். சைபர் கிரைமை பொறுத்தவரை, அதிகார வர்க்கத்தினர் நினைப்பதே சட்டம் என்றாகி வருவது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் பிடித்துள்ள கேடு.

Read more...

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்


கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். 

கிரீன் டீயின் நன்மைகள்........ 

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 


*  உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 


*  உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. 


*  ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. 


* இதய நோய் வராமல் தடுக்கிறது. 


* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. 


* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது. 


*  புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 


*  புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. 


*  எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது. 


* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. 


* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. 


*  ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. 


*  சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது. 


*  பருக்கள் வராமல் தடுக்கிறது. 


* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets