உங்கள் வருகைக்கு நன்றி

நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஓதிக் காட்டித் தராத !

சனி, 6 ஏப்ரல், 2013


முஸ்லிம்களிலிருந்து பிரிவினையை உண்டாக்கிய ஹனஃபிகள் மிகவும் பரிதாபத் திற்குரியவர்கள்! தொழுகையில் ஆமீன் சொல் வதனால், முன் பாவங்கள் மன்னிக்கப்படும் உயரிய நிலையை அடையும் பாக்கியத்தை இழந்து விட்டார்கள். குர்ஆனையும், ஹதீஸை யும் விட்டு விட்டு, மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கும் மௌலவிகளைப் பின் பற்றினால் நஷ்டம் அடைய வேண்டியதுதான். இது உறுதி.
.“அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக் காரன் யார் இருக்க முடியும்?…”;. என்று 2:114வது வசனத்திலும், 72:18 வசனத்திலும் அல்லாஹ், மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுடையவை என்று அறிவித்ததை தூர எறிந்து விட்டு, இது ஹனஃபி பள்ளி; இங்கு ஆமீன் சப்தமாகச் சொல்லக் கூடாது என அறிவிப்புப் பலகை களை பள்ளியிலே தொங்கவிடும் இந்த அறிஞர்களுக்கு (உலமாக்களுக்கு) அல்லாஹ் வின் அச்சம் எள்ளளவும் கிடையாதா?
அவர்கள் ஆமீன் சப்தமாகச் சொல்லாதது மட்டுமல்ல, நபிவழியில் சப்தமாக ஆமீன் சொல்பவர்களையும் தடுக்கும் இக்கொடூரச் செயலை செய்யும் மவ்லவிகளை அல்லாஹ் வுக்கு அஞ்சுபவர்களாக ஆலிம்களாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஓதிக் காட்டித் தராத, ஃபர்ளு தொழுகைக்குப் பின் உள்ள கூட்டு துஆவை இவர்கள் புதிதாக-பித்அத்தாக உண்டாக்கி இருக் கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
5 வேளை ஃபர்ளு தொழுகைகளுக்குப் பிறகும் பிரார்த்திக்க வேண்டிய துஆக்களை வெளிப்படையாக முன்பே தீர்மானித்து கூட்டு துஆ செய்யலாமே என்ற வினா நமக்கு  எழ வாய்ப்புண்டு. அந்த எண்ணம் தவறு. ஏனெனில் அப்படி ஒரு வழக்கத்தை  நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்ததில்லை. எனவே அப்படிச் செய்தால் அது பித்அத் ஆகிவிடும். பித்அத்துகள் வழிகேடு கள், அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், பொதுவாக சில துஆக்களைத் தேர்ந்தெடுத்து கூட்டு துஆ செய்தால், ஒவ்வொருவரின் அந்தரங்கமான துஆக்கள் விடுபட்டு விடும்.
துஆக்களில் இறைவனிடம் அங்கீகரிக் கப்பட முதல் தகுதியானது எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கேட்கப்படும் துஆவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா(ரழி), நூல்:திர்மிதி
இந்த ஹதீஸின்படி ஒவ்வொருவரும் அவரவருக்குள்ள எண்ணற்ற தேவைகளை அவரவருக்குத் தெரிந்த மொழியில் இறைவ னிடம் கேட்டுப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக இது இருப்பதால், அவரவர் அவரவரின் தேவை களை இறைவனிடம் பிரார்த்திப்பதே சிறந்தது. இடையில் ஒரு மனிதர் தேவை இல்லை என்பதை 2:186 வசனம் தெளிவுபடுத்துகிறது.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த் தித்தால் விடையளிக்கின்றேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட் டும். அப்பொழுது அவர்கள் நேர் வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:186
எனவே கூட்டு துஆ என்பது அறிஞர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் மௌலவி கள் தங்களுக்கு ஒரு இமேஜ்! மற்றும் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்திய ஒரு செட் அப்! அவ்வளவுதான்! இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை.
கூட்டு துஆவை அறிமுகப்படுத்தி செயல் படுத்திக் கொண்டிருக்கும் மௌலவிகளை குழப்பவாதிகள் என்று அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள்.
உங்களுடைய இறைவனிடம் பணிவாக வும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய் யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன் 7:55
பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. அல்குர்ஆன் 7:56
அந்தரங்கமாக துஆ கேட்க வேண்டும் என்பது அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பு. இந்த வரம்பை மீறி சப்தமாக துஆ செய்கிறார்கள். சப்தமாக ஆமீன் சொல்கிறார்கள். அதுவும் காலர் மைக்கில் இன்னும் அதிக சத்தமாக துஆ செய்யும் பழக்கமும் ஏற்பட்டு விட்டது. எனவே வரம்பு மீறிய இவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று கூறுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு ஃபர்ளு தொழுகைக்குப் பின்னும் கூட்டு துஆ கேட்காத அழகிய முன்மாதிரியை ஏற்படுத்தி, எல்லா விஷயங்களிலும் 1430 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் சீர்திருத்தம் செய்துவிட்டு சென்று விட்டார்கள். பிற்காலத்தில் இந்த மௌலவிகள், 2,3,4 ரகாஅத்துகளில் வந்து சேர்ந்து, இமா மின் ஸலாத்துக்குப் பிறகு எழும்பி தங்கள் விடுபட்ட தொழுகைகளை நிறைவு செய்யும் தொழுகையாளிகளின் தொழுகையில் குழப் பத்;தை ஏற்படுத்தி கெடுக்கும் விதமாக அவர் களுக்கு இடைஞ்சலாக அதில் குழப்பம் உண்டாக்கி கூட்டு துஆ மற்றும் இது போன்ற புதியவைகளை அறிமுகப்படுத்தி விட்டனர். குழப்பம் உண்டாக்காதீர்கள் என்ற அல்லாஹ் வின் எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்ட மௌலவிகள், நபி வழியை போதிப்பவர்களை ஏதோ புது வழியைப் போதிப்பதாகக் கூறி குழப்பவாதிகள் என அவர்கள் மீது பழியை சுமத்தி, மக்களை குழப்பத்தில் ஆழ்த்து கின்றனர். இவர்கள் மறுமையில் தப்பமுடியுமா?
 நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஓதிக் காட்டித் தராத, ஃபர்ளு தொழுகைக்குப் பின் உள்ள கூட்டு துஆவை இவர்கள் புதிதாக-பித்அத்தாக உண்டாக்கி இருக் கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets