அம்மாக்கள் கவனத்திற்கு!
வெள்ளி, 22 மார்ச், 2013
அம்மாக்கள்
கவனத்திற்கு! குழந்தை மன நல மருத்துவர் கண்ணன்: என்னிடம் வரும் பெற்றோர், பெரும்பாலும் கூறும் ஒரே புகார், "என் பசங்க சாப்பிடவே
மாட்டேங்கறாங்க...' என்பது
தான். குழந்தைகள் குறைவாகவோ, அதிகமாகவோ
சாப்பிடுவதற்கு, பல காரணங்கள்
உள்ளன. பெரும்பாலும் அவையெல்லாம் கவலைப்படக் கூடிய காரணங்கள் இல்லை."நம்ம
குழந்தை நன்றாக சாப்பிடட்டும்' என்ற
எண்ணத்தில், வயிற்றுத்
தேவையைவிட, அதிக
அளவிற்கு டிபன் பாக்சில் நிரப்பி அனுப்புகின்றனர் பல அம்மாக்கள். அதிலிருந்து, தங்கள் தேவைக்குச் சரியாகச் சாப்பிட்டு
விடுகின்றனர் குழந்தைகள். மீதி, அப்படியே
டிபன் பாக்சில் உள்ளது, என்பதை
உணர வேண்டும்.காலை, இரவு
மற்றும் விடுமுறை நாட்களில், சுவையாக
சாப்பிட்டுப் பழக்கப்படும் குழந்தைகள், பள்ளியில்
ஆறிப் போன உணவைத் தான் சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆறிய உணவில், இயல்பாகவே சுவை குறைவதால், சாப்பிடும் ஆர்வம் குறைவதும் இயல்பே.அதே
போல், பெரும்பாலான பள்ளிகளில், உணவு இடைவேளை போதுமான அளவிற்கு
இருப்பதில்லை. குழந்தைகள் உணவை வெறுக்க, இதுவும்
ஒரு காரணம்.எந்நேரமும், குழந்தைகளுக்கு, நொறுக்குத் தீனி கொடுப்பதையும், "ஜங்க் புட்' கொடுப்பதையும் நிறுத்துங்கள். அவற்றின்
தீமைகளை நன்கு புரியும் விதத்தில் அடிக்கடி நினைவூட்டி, வீட்டில் சமைத்த உணவின் அருமையை
உணர்வதுடன், பெற்றோரும்
அதையே உண்ண வேண்டும். காலை, மதியம், மாலை, இரவு
என, நான்கு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மற்ற நேரம் எதுவும் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்ற கொள்கையை, பெற்றோர் கடைப்பிடித்தாலே, குழந்தைகள் ஆரோக்கியமான வீட்டு உணவை
விரும்ப ஆரம்பித்து விடுவர்.செய்யும் உணவுகளில், சிறிய
மாற்றங்களையும், சுவையையும்
அதிகரிக்க வேண்டும். இதுவே போதும், குழந்தைகளுக்கு
உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க!