உங்கள் வருகைக்கு நன்றி

எய்ட்சை விட அபாயகரமானது

புதன், 6 மார்ச், 2013


நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம், வயிறு உப்புசம் என, தற்காலத்தில் அடிக்கடி அனைவருக்கும் ஏற்படுகிறது. இது, மேற்கத்திய நாடுகளில் மட்டுமே தான், முன்பு இருந்தது. மேற்கத்திய பாணி வாழ்க்கையை நாம் பின்பற்ற ஆரம்பித்தவுடன், இந்தக் கோளாறு நம்மை தொற்றிக் கொண்டுவிட்டது.
பள்ளி செல்லும் குழந்தைகள் கூட, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பதும், சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவதும், "டிவி' பார்த்துவிட்டு இரவு தாமதமாகத் தூங்குவதும், அடிக்கடி மன அழுத்தம், டென்ஷன் என இருப்பதும், நெஞ்சு எரிச்சல் ஏற்படக் காரணம்.பெரும்பாலான மக்களுக்கு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், மலம் இளகிப் போகுதல், மலத்துடன் சளி போன்று வருதல், அடிவயிறு வலித்துக் கொண்டே இருப்பது, சரியாக மலம் வெளியேறாமல் இருப்பது ஆகிய உபாதைகள் உள்ளன. இவையெல்லாம் ஐ.பி.எஸ்., நோய்க்கான அறிகுறி. இவை, நாம் சரியான வாழ்க்கை முறையுடன் வாழாததால் வந்த விளைவு.தினமும் உடற்பயிற்சி செய்பவர்களின் உடல் எடை போடாமல், வயிறு லேசாக இருக்கும். தினமும், அனைத்து வயதினரும் கட்டாய உடற்பயிற்சி செய்ய வேண்டும். வயிறு முட்டச் சாப்பிடுவதை விட, ஒரு நாளைக்கு ஐந்து வேளைகளாக, சிறிது சிறிதாக உணவைப் பிரித்து உண்பது சிறந்தது. காய்கறிகளும், பழங்களும் நம் உணவில் கட்டாய அங்கத்தினர்களாக இருக்க வேண்டும். அருந்தும் நீரில் சிக்கனம் கூடாது. நல்ல உறக்கம், சீரண மண்டலம் துவங்கி, அனைத்து உடல் உறுப்புகளும் சிறப்பாகச் செயல்பட உதவும்.அடுத்து, பலரும் அறியாதது, "ஹெப்படிட்டிஸ் பி, ஹெப்படிட்டிஸ் சி' வைரஸ்களால் வரும் பாதிப்புகள். சரியாக, சுத்தப்படுத்தாத ஊசியின் மூலமாகவோ, ஏற்கனவே தொற்று உள்ள ரத்தம், நம் உடலில் ஏற்றப்படுவதாலோ, சில சமயம் சின்ன வயதில் காது குத்தும் போதோ அல்லது முடி இறக்கும் போதோ இந்த தொற்று, நம் ரத்தத்தில் கலந்து, நம் கல்லீரலில் புகுந்து, நாளடைவில் அரிக்க ஆரம்பித்துவிடும் அபாயம் வரும். எய்ட்சை விட அபாயகரமானது இது.
உணவு செரிமானத் துறை நிபுணர் பழனிச்சாமி:

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets