மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
திங்கள், 18 மார்ச், 2013
தமிழகத்தில்
ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடியும் நிலையில், மாணவ, மாணவியர்
வீட்டை விட்டு ஓடுவது, சில
ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாணவியர், தங்களின்
காதலர்களாகிய மாணவர்கள், இளைஞர்களின்
ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வீட்டை விட்டும், பெற்றோரை
தவிக்க விட்டும், சென்று
விடுகின்றனர். போலீசாரின் கணக்கெடுப்பின் படி, கடந்த
ஆண்டில் பொதுத் தேர்வு முடிவுற்ற நிலையில், தமிழகம்
முழுவதிலும் உள்ள பள்ளி மாணவியரில், 125 பேர், காதலர்களுடன் ஓட்டம் பிடித்தனர். இதில், பல மாணவியர், போலீஸ் வலையில் சிக்கினர். இவ்வாறு சிக்கியவர்களின்
பெற்றோரை அழைத்து, பேச்சுவார்த்தை
மட்டுமின்றி, மாணவியருக்கு
ஆலோசனை வழங்கிய நிலையில், அவர்கள்
மீண்டும், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவ, மாணவியர் தேர்வு எழுதி முடிக்கும் நிலையில், அவர்களின் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக
அவர்களுக்கு, பிரத்தியேகமாக வீடுகளில் அறைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை கண்காணிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள், பணம்,
வங்கியின் ஏ.டி.எம்., கார்டு,
செக் புத்தகம் ஆகியவற்றை
பத்திரமாக மாணவ, மாணவியருக்கு தெரியாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு முடியும் நிலையிலும்,
முடிந்த பின்னரும் அவர்களின்
தோழிகள், பழக்கமானவர்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம். மாணவ, மாணவியர் பணம் கேட்கும் பட்சத்தில், அந்த பணத்துக்கான தேவை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணவனோ, மாணவியோ காணவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ்
ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதோடு,
அவர்களின் புகைப்படங்களை
வழங்கி உதவலாம். அவர்களின் பழக்க வழக்கங்கள்,
தொடர்புகள் குறித்து முழு
விவரங்களையும், போலீசாரிடம்,
எவ்வித தயக்கமும் இன்றி
தெரிவித்தால், நடவடிக்கை எடுக்க உதவி கரமாக இருக்கும். பள்ளி தேர்வு
முடிவுக்கு வரும் நிலையில், மாணவ,
மாணவியரின் பெற்றோர் உஷாராக
இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும்.