உங்கள் வருகைக்கு நன்றி

கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் ஆல்கஹால்

புதன், 6 மார்ச், 2013


கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் பல்லி மிதக்கும், மூடி கிடக்கும், பூச்சி இருக்கும் என்பதெல்லாம் போய் இப்போது அதில் ஆல்கஹாலும் கலந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஒரு லிட்டர் பாட்டிலில் 10 மில்லிகிராம் அளவுக்கே இது இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. இதற்காக 19 விதம் விதமான கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பத்து பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம்.
இதுகுறித்து  கோக கோலா வின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின் கூறுகையில், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும்.
ஆனால் இதை வைத்து கோக்கை மது பானம் என்று கூறி விட முடியாது.  
பெப்சி நிறுவனமும் இதேபோல இத்தகைய குளிர்பானங்களில் மிக மிக சிறிய அளவில் ஆல்கஹால் கலந்திருக்கும் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது.
கோக் 1886ம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் இதை தலைவலி, ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets