உங்கள் வருகைக்கு நன்றி

தமிழக அரசின் புத்தாண்டு பரிசு !.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும் வகையில், புதிய மருத்துவ சேவை திட்டம், '104' என்ற போன் இணைப்பு எண்ணில், துவக்கப்பட்டுள்ளது. இதில், 104 என்ற இந்த போன் எண்ணில் தொடர்பு கொண்டால், டாக்டர்கள் குழு, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும். தமிழகத்தில், அவசர கால, ஆம்புலன்ஸ் வசதிக்கு, '108' என்ற போன் எண்ணில் தகவல் தெரிவித்தால், உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வீடு வந்து சேரும். இந்தச் சேவைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, '104' என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டால், முதலுதவி சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் தரும் புதிய சேவைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, புத்தாண்டு பரிசாக, இச்சேவையை துவக்கியுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 1.2 கோடி ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. இத்திட்டமும், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை, செயல்படுத்தும், 'ஜிவிகே' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, உடல்நல பாதிப்பு குறித்து தெரிவித்தால், நோயின் தன்மைக்கேற்ப, டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை தருவர். முதலுதவி ஆலோசனை மட்டுமின்றி, எந்த மாதிரியான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தெரிவிப்பர். கர்ப்ப கால பிரச்னைகள், மாதவிடாய், மார்பக புற்றுநோய் குறி?த்து பெண்கள் பேசினால், விளக்கம் அளிக்க, பெண் டாக்டர்களும் உள்ளனர். மன அழுத்தம், மன சிதைவால் தற்கொலை முயற்சிக்கு செல்வோர், '104' போன் எண்ணை டயல் செய்தால், 'கவுன்சிலிங்' தரப்படும்.

Read more...

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

சனி, 21 டிசம்பர், 2013


டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இந்த பிரச்சனையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்... 

* உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம். நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம் இந்த டீன் ஏஜ்.. இந்த வயதில் அவர்களுடன் அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள். அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன்வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம். 


* உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். உதாரணமாக, "இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும்` என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 


* இந்த டீன் ஏஜ் பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். 


* குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப்பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர். உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும். எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள். 


* உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள். இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், பிரச்னை அளவுக்கு அதிகமாக போகும் போது, மருத்துவரை அணுகுவது நல்லது.

Read more...

பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது?


பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள். ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.

ஆனால் இப்போது இருக்கிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம். அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கினற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது.

இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றிற்கும் மிஷின் வந்து விட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது.

சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள். ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது.

வேலை பிஸியில் பெண்கள் காலையில் சாப்பிடும் டீ, டிபன் கூட மறந்து விடுகிறார்கள். இப்போது நிறைய பெண்களுக்கு சின்ன வயதிலேயே முதுகுவலி கால் வலி இடுப்புவலி, என்று வந்து விடுகிறது.

தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம். முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இரங்கலாம். ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம். நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டுபடுத்தலாம்.

Read more...

இல்லறம் நல்லறமாவது இல்லத்தரசிகளின் கையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துணைவனின் மனோபாவத்திலும் உள்ளது.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பெண்கள் அலுவலகத்திலும், வீட்டிலும் படும் அவஸ்தைகள் ஏராளம். அதையும் தாண்டி பெண்கள் ஒரு பக்கம் அனைத்து துறைகளிலும் சாதித்து கொண்டு இருந்தாலும் மறு பக்கம் குடும்பத்தில் பிரச்சனைகளை எதிகொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு கோபம் தான் வருகிறது. 

இதை வெளியில் காட்டினால் இவர்களுக்காக நாம் படுகின்ற இந்த அனைத்துக் கஷ்டங்களும் வீணாகி விடும். வேலைக்காரி வைத்துக் கொண்டோ அல்லது கணவன் குழந்தைகளுக்குத் தன்னிலை விளக்கித் தன்னுடன் ஒத்துழைக்குமாறு செய்வதன் மூலமாகவோ, நமது அலுவலகப் பணி, இல்லறம் என்ற இரட்டை குதிரைச் சவாரியை மிக லாவகமாகச் செய்ய முடியும். 

எல்லா வேலையும் நாம் தான் செய்ய வேண்டும் என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, பிறகு எரிச்சல் அடைந்து, குடும்பத்தில் மற்றவர்கள் சந்தோஷத்தையும் கெடுத்துக் கொள்வதை விட வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், அமைதியும் மகிழ்ச்சியும் தொடரும். 

இல்லறம் நல்லறமாவது இல்லத்தரசிகளின் கையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துணைவனின் மனோபாவத்திலும் உள்ளது. மனோபாவத்தை கணவனிடத்தில் கொண்டு வருவது கடினம். ஆண்களுக்கு அவரவர் வேலையே பெரிது. 

பெண்கள் சற்று ஆயாசமாக அவர்கள் அலுவலகத்தில் நடைபெறுவதை தெரிவித்தால் கூட, அது சுவாரசியமாக இருந்தால் கூட கணவன்மார்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு "போதும்மா உன் ஆபீஸ் புராணம்" என்று முடித்து வைப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் கணவனுக்கு ஒரு கஷ்டம் அலுவலகத்தில் ஏற்பட்டது என்றால் அவனது புலம்பல் அத்தனையும் மனைவி கேட்க வேண்டிய கட்டாயம்! 

இந்த முரண்பாடுகளைப் போக்குவது எப்படி. சும்மா விட்டுக் கொடுத்து போவது என்பதெல்லாம் பொய். ஏனெனில் விட்டுக் கொடுக்கும் பொறுப்பு எப்போதும் பெண்கள் தலையிலேயே விழுகிறது. ஆண்கள் தங்கள் வேலை தங்கள் சம்பளம் தங்கள் நண்பர்கள், தங்கள் பொழுது போக்கு என்று சுயநலமிகளாக இருப்பதைத் தவிர்த்தால் இல்லத்தரசிகளை ஹிஸ்டீரியா' மன நோயிலிருந்து காப்பற்றலாம்!

Read more...

விளையாட்டு விபரீதமானது

வெள்ளி, 13 டிசம்பர், 2013

பெரம்பூர் அடுத்த புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (37). ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (11), அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள சுந்தரம் 1-வது தெருவில் வசிக்கும் அத்தை சுதா வீட்டுக்கு சென்றான். சுதாவுக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் சஞ்சய் விளையாடிக் கொண்டிருந்தான்.

கதவில் இருந்து ஸ்கிரீன் துணியை எடுத்துகழுத்தில் சுற்றிக் கொண்டு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டினான் சஞ்சய். அப்போதுஎதிர்பாராதவிதமாக துணி கழுத்தை இறுக்கமாக சுற்றிக் கொண்டது. மூச்சுவிட முடியாமல் சிறுவன் தவித்தான். வெளியே சென்றிருந்த சுதாஅந்த நேரத்தில் வீடு திரும்பினார். சஞ்சய் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் அவனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். 
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டுசஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் சுதா கதறினார். இதையடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுகுடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Read more...

இஷ்டப்பட்டும், கடின உழைப்புடனும் செயல்பட்டால்?


மின்னணு பொறியியல் துறையில் பி.இ.பட்டம் பெற்றுமீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சதீஷ்குமார்: மின்னணு பொறியியல் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலை தேடி சென்னையை வலம் வந்தேன். இரண்டு மாதங்கள் தேடியும் வேலை கிடைக்காததால்மனம் சோர்ந்து போனேன். ஒரு நாள் மெரீனா கடற்கரைக்குச் சென்று விட்டு திரும்பும் வழியில்மீன் இறக்குமதி வணிகத்தைக் கண்டேன். இருளில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில்ஒரு ஒளியைக் காட்டியது போல் நடந்தது அந்நிகழ்வு. இன்று என் வாழ்க்கையையே அதுவெளிச்சத்தின் பாதையில் வழி நடத்துகிறது. என் சொந்த ஊரான ராமேஸ்வரம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால்அங்கு மீன் பிடித் தொழில் தான் முதன்மைத் தொழில். எனவேராமேஸ்வரத்தில் இருந்து மீன்களை வாங்கிசென்னையில் விற்கலாம் என நினைத்தேன். முதலீடே இல்லாமல்மீன் விற்பனைத் தொழிலைத் தொடங்கியதும்அதில் காலூன்ற கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. மாலை, 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மீன்களை ஏற்றிச் சென்றுஅதிகாலை, 6.30 மணிக்கெல்லாம்சென்னை எழும்பூரை அடைவேன்.பின்அங்கிருந்து லைட்ஹவுஸ் வரை சென்றுமீன் விற்பனையை முடித்து விட்டுமீண்டும் மாலை, 5 மணிக்குசென்னையில் இருந்து ரயிலில் ஏறிஅதிகாலை, 5.30 மணிக்கு ராமேஸ்வரம் அடைவேன். என் தூக்கம் முழுவதும் ரயில் பயணங்களில் தான். மூன்று மாத கடுமையான உழைப்பிற்குப் பின்தற்போது நான் சொந்தமாக ஒரு டெம்போ வாங்கியுள்ளேன். இந்த டெம்போஎன் தொழிலுக்கு சற்று உதவியாக உள்ளது. தற்போதுநான் ஒரு பொறியாளர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.வேலையில் நல்ல வேலைகெட்ட வேலை எனகவுரவம் பார்த்தால்நிச்சயம் நல்ல நிலைக்கு வர முடியாது. எந்த வேலையானாலும்இஷ்டப்பட்டும்கடின உழைப்புடனும் செயல்பட்டால்வெற்றி நிச்சயம்.

Read more...

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி !

ஒத்த பைசா கூட செலவில்லாமல் ஒரு நாளைக்கு 50 கிமீ வரை செல்லும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சோலார் காரை பெங்களூரை சேர்ந்த இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் சையது முசாக்கீர் அகமது. ஆட்டோமொபைல் ஆர்வலரான இவர் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில்தான்எரிபொருள் பிரச்னையால் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் பிரச்னைகளை கருத்தில்க்கொண்டு புதிய காரை வடிவமைக்க முடிவு செய்தார்.
Solar Car 

அதன்படிசுற்றுச் சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாதமுழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் காரை வெற்றிகரமாக வடிவமைதத்து அசத்தியுள்ளார். இது கான்செப்ட் மாடல் என்றாலும்ஸ்பான்சர் கிடைத்தால் வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்து சையது முஜாகீர் அகமது கூறுகையில்," இந்த காரில் முன்பக்க பேனட்கூரை மற்றும் பின்பகுதியில் மூன்று சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பகல் வேளையில் சூரிய சக்தியிலிருந்து பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம்ஒரு நாளைக்கு 50 கிமீ தூரம் ஒத்த பைசா செலவில்லாமல் செல்ல முடியும்.

ஸ்பான்சர் கிடைத்தால் இந்த காரை மேம்படுத்தி வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த காரை பிரபலப்படுத்துவதற்காக பெங்களூருவிலிருந்து கொச்சி வரை 600 கிமீ தூரம் சென்று வந்துள்ளேன்.

மேலும்ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் செய்யவதற்காக இந்த காரில் டெல்லி செல்லவும் திட்டமிட்டுள்ளேன். 50 கிமீ.,க்கு மேலும் பயணம் செல்ல வேண்டியிருந்தால் வீட்டு மின்சாரத்தை சார்ஜ் செய்தும் செல்லும் வகையில் பிளக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

இந்த இளம் சாதனையாளரின் திட்டத்தை ஊக்குவிக்க விரும்புவோர் பின்வரும் இமெயில் மற்றும் மொபைல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். solarahmed1@yahoo.com என்ற இமெயில் முகவரியிலும், 9845229757 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets