உங்கள் வருகைக்கு நன்றி

சர்க்கரை நோயும், பார்வை பறிப்பும்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு அன்றும் வி..பி. எஸ்கார்ட் டூட்டி. காலை பத்தாகியும், காலை உணவைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை. நேற்றிரவோ, அண்ணா சிலைக்கருகே நடந்த தர்ணாவின் பாதுகாப்புப் பணி. எல்லா வேலைகளும் முடிந்து வீடு திரும்பும் போது இரவு மணி பன்னிரெண்டு. சாப்பிட்டோமா , இல்லையா என்றே நினைவு வைத்துக்கொள்ளமுடியாத அளவு வேலைப் பளுவில், சர்க்கரை நோய் [ஷுகர்]க்கான மாத்திரைகளை சரியான நேரத்தில் எப்படி எடுத்துக் கொள்வது?. என்றைக்காவது நினைவு வரும் போது முழுங்குவார்.
கடைசியாக, அவர் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும். அப்போதே 300க்க அருகில் பயமுறுத்தியிருந்தது. மாத்திரைகளை மாற்றிக்கொடுத்த டாக்டர், பதினைந்து நாட்களில் மறுபரிசோதனைக்கு வரச் சொன்னார். இன்னும் செல்வதற்கு நேரமில்லை.
 ஆமாம், எவ்வளவு சர்க்கரை இருந்தால் என்ன, சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறோம், எந்த வேலையில் என்ன குறை வைத்தோம்”, என்று திருப்திபட்டுக் கொண்டார். நோயென்று தெரிந்தும் மெத்தனம் காட்டினார். ஒரு அறிகுறியும் இல்லாமலே,கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய், அவருடைய, ரத்த நாளங்களின் சுவர்களை, கரையான் போல் அரித்துக் கொண்டிருப்பதை, பாவம் , அவர் அப்போது அறியவில்லை.
ட்யூட்டியில் இருந்தபபோது திடீரென்று பின்னால் யாரோ கூப்பிடுவது போல் இருக்கவே, தலையை வேகமாகத் திருப்பினார். கண்ணில் மின்னல் வெட்டியது போல பளிச்சென்றது. கண் முன்னே, ஒரு சிவப்புப் புள்ளி தோன்றி பின்னர் சிவப்புக்கோடு போல் நீண்டு அப்புறம் ஒட்டடை மாதிரி தெரிந்தது. கண் முன்னே ஏதோ பூச்சி பறக்கிறதோ என்று கண்ணுக்கு முன்னால் கையை அசைத்து விலக்கிப் பார்த்தார். அவர் பார்க்கும் இடத்திலெல்லாம், அதுவும் கூடவே நகர்ந்ததே தவிர, பார்வையிலிருந்து மறையவில்லை. கலவரமடைந்தார். ஆஹா, இது, நம் கண்ணுள்ளிருந்து ஏதோ தெரிகிறது போல, என்ற சந்தேகம் குமரேசனுக்கு உண்டாயிற்று.
கண்பரிசோதனை என்பதாக, எந்தக் கண் டாக்டரிடமோ அல்லது கண் மருத்துவமனையை படியையோ இதுவரை அவர் மிதித்ததில்லை. எப்போதும் அவசரம், நேரமின்மை. கால் மணி நேரத்தில் பரிசோதித்துக் கண்ணாடி கொடுக்க, கம்ப்யூட்டர் கண் பரிசோதனை வசதியோடு, கண்ணாடிக்கடைகள் திறந்து கிடக்கும்போது, எதற்குப்போய் மணிக்கணக்கில் டாக்டரிடம் உட்காருவது, என்பது அவர் எண்ணம். அவ்வாறு, தான் நினைத்துக் கொண்டிருப்பது சரிதானா, என்று இப்போது தோன்றியது.
இரண்டு நாட்கள் கழித்து வேலையெல்லாம் முடிந்து ஒழிந்த நேரத்தில், குமரேசன் என்னிடம் வந்தார். ஒரு கண், முற்றிலும் கறுப்பாக மறைத்து விட்டிருந்தது.  விட்ரியஸ் ஹெமரேஜ், அதாவது, கண்ணுக்குள், இரத்தக்கசிவு என்றேன். அதிர்ந்து போனார்.
ஒழுங்கான கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு, டயபடிக் ரெடினோபதி ஏற்படுகிறது. இதை, பல ஸ்டேஜுகளாகப் பிரிக்கலாம். ஆரம்ப நிலையில், சிறுசிறு இரத்தப் புள்ளிகளும், இரத்தக்குழாயில் மைக்ரோ விரிவுகளும், கொழுப்புக் கசிவுகளும் ஏற்படும். நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாத பட்சத்தில், இவை அதிகமாகிக் கொண்டே செல்லும். இந்த நிலை வரை, எந்த அறிகுறியும் இருக்காது. அடுத்ததாக, மாக்குலா எனப்படும், விழித்திரையின் நடுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளும் போது தான், பார்வை மங்கலாகத் தெரியும், சிலருக்கு, முற்றிய நிலையான, ப்ரோலிஃபரேடிவ் ரெடினோபதி ஏற்படும் வரை, எந்த அறிகுறியும் இருப்பதில்லை.
நீரிழிவு நோய், கட்டுக்குள் இல்லாதபோது உடலில் உள்ள கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் உள்ள, சிறு இரத்தக் குழாய்களின் சுவர்களை, கரையான் போல் அரிக்கத் துவங்குகிறது. நாளடைவில், கண்ணும், சிறுநீரகமே முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. கண் பார்வைக் குறைவு, கால்வீக்கம் ஆகிய அறிகுறிகள், முற்றிய நிலையிலேயே தோன்றுகின்றன.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், கண்டறிந்ததிலிருந்து சீரிய இடைவெளியில் கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். லேஸர், கண்ணுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்துகள், என சொஸ்தப்படுத்த நிறைய முறைகள் உள்ளன. இந்தத் துறை இன்று பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் தாமதமாக செய்யப்படும் சிகிச்சை முறைகள், முழுப் பார்வையையும் மீட்டுக் கொடுக்க இயலாது.
சர்க்கரைநோயை ஆரம்பம் முதலே, சரியாகப் பரிசோதித்துக் கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம். கண்களையும், சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய சர்க்கரை நோயின் தாக்குதலுக்குத் தக்கவாறு எவ்வளவு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை தேவை என்பதை உங்கள் கண் மருத்துவர் கூறுவார்.  வருமுன் காத்தலே நலம்!


Read more...

இஸ்லாத்தின் பார்வையில் திருநங்கைகள்.

இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.

ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப்
போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர். இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.
இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால்
இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை
அல்லாஹ் தடை செய்துள்ளான்.


"
அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக்
கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்).

அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அல்குர்ஆன் (4 : 119)


உருவத்தில் ஆணாக இருந்து கொண்டு பெண்களைப் போன்று உடை அணிவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி (5885)


5886حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ
أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ
فُلَانًا رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், "அவர்களை உங்கள்
வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரைரை வெளியேற்றினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி
நூல் : புகாரி (5886)


மேலும் இன்றைக்கு உள்ள அரவாணிகள் சமுதாயத்திற்கு நிறைய தீங்குகளை ஏற்படுத்துகின்றனர். ஒழுக்கமான ஆண்களைக் கவர்ந்து விபச்சாரத்திற்கு அழைக்கின்றனர். இதன் மூலம் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸைப் பரப்புவதில் இவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். பேருந்து நிலையம் இரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மிகவும் துணிச்சலாக பிச்சை
எடுக்கின்றனர். கை கால் நன்றாக இருந்தும் உழைத்து உண்பதற்கு உடலில் வலு இருந்தும் மானங்கெட்டு பிச்சை எடுக்கின்றனர். பிச்சை போடாவிட்டால் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகின்றனர். பலர் இவர்களின் கேடுகெட்ட நடத்தைக்கு அஞ்சி காசை தூக்கி எரிந்து விடுகின்றனர். இது ஒரு
வகையான கொள்ளைத் தொழிலாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! மக்கள் எவரது அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில்ல் தீயவர் ஆவார்
என்றார்கள்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : புகாரி (6054)


இது போன்று தீய நடத்தை கொண்ட அரவாணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்) "அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த "அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின்
அபீ உமய்யாவிடம், "அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று
சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று சொன்னார்கள்.
                         அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)  நூல் : புகாரி (4324)


ஆண்கள் எவ்வாறு பெண்களுடைய சபைக்கு செல்லக் கூடாதோ அதைப் போன்று அலிகளும் செல்லக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அரவாணிகளாக இருப்பவர்கள்
ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.

Read more...

உங்களுடைய வளர்ச்சிக்கு நீங்களே தடையா ?

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

பரீட்சைக்குப் பயந்தே படிப்பைப் பாதியில் நிறுத்துகிறவர்கள் உண்டு. மற்றவர்கள் எப்பாடுபட்டாவது பரீட்சைகளை எழுதி முடித்து பாஸ்செய்துவிடுவார்கள். பள்ளிகல்லூரிப் படிப்பை முடித்தவுடன் "பரீட்சை தொந்தரவு விட்டதுடா சாமிஎன்று நிம்மதி அடைகிறார்கள்.
ஆனால்நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் நமக்கு நாமே ஒரு தேர்வு வைத்துக்கொள்ளவேண்டும் தினந்தோறும் பரீட்சை என்றவுடன் பயந்துவிடாதீர்கள். இந்தப் பரீட்சைக்கு நீங்கள் படிக்க வேண்டியதில்லை. வாத்தியார் இல்லை. கொஸ்டின் பேப்பர்கூட அதிக நீளமில்லை. 
 நான்கே நான்கு கேள்விகள்தான். அவை இங்கே:
1 ஒவ்வொரு நாளும் நான் என்னென்ன வேலைகளைச் செய்கிறேன்?
2
அந்த வேலைகள் ஒவ்வொன்றுக்கும் நிஜமான தேவை உள்ளதா?
3
நான் அந்த வேலைகளை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறேன்?
4   
இந்த வேலைகளை என்னைத் தவிர வேறு யாராவது செய்துவிடமுடியுமா? (அதாவது, இன்னொருவர் என்னைத் தூக்கி எறிந்துவிடுவது சாத்தியமா?)

இந்த நான்கு கேள்விகளையும் அடிக்கடி கேட்டுக்கொள்கிறவர்கள் வாழ்க்கையில் ஃபெயிலாக வாய்ப்பே இல்லை என்கிறார் டேவ் க்ரென்ஷா. காரணம், இவைதான் நம்மை ஒரு விலை மதிக்க முடியாத வைரமாகப் பட்டை தீட்டுகின்றன. வீடோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ, நாமின்றி அணுவும் அசையாது என்கிற அளவுக்கு நம்மை உயர்த்துகின்றன.
முக்கியமான விஷயம், இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் திருப்தியான பதில்களைப் பெறவேண்டும். ஏதாவது ஒன்று நன்றாக இருக்கிறது என்று இன்னொன்றை சாய்ஸில் விடக்கூடாது. பொய்யான பதில்களைச் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது.
உதாரணமாக, நீங்கள் செய்யும் வேலையில் ஒரு குறை இருக்கிறது என்று வையுங்கள். அதை இன்னொருவர் அடையாளம் கண்டு சுட்டிக்காட்டும் வரை காத்திருந்தால் நீங்கள் பத்தோடு பதினொன்று ஆகிவிடுகிறீர்கள். அப்படியில்லாமல் நீங்களே (இந்த மினிபரீட்சையின் உதவியோடு) அதைக்கண்டுபிடித்துச் சரிப்படுத்திக்கொள்ளப்பழகினால், கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய குறைகள் மறையும்.
உங்கள் இடத்தை யாராலும் பிடிக்கமுடியாது என்கிற நிலையை எட்டுவீர்கள்.
சரி. எனக்கு நானே பரீட்சை வைத்துக்கொண்டுவிட்டேன். நான் எதில் ஸ்ட்ராங், எங்கே வீக் என்பது புரிந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது?
இங்கே நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் எதில் கவனம் செலுத்தப்போகிறீர்கள்? உங்களுடைய பலங்களை நன்கு பயன்படுத்திக்கொள்வீர்களா? அல்லது பலவீனங்களைச் சரி செய்ய மெனக்கெடுவீர்களா?
இந்த இரண்டில் எது உசத்தி, எது மட்டம் என்று யோசித்துக் குழம்பவேண்டாம். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சூழ்நிலை, விருப்பு வெறுப்புகளைப் பொறுத்து மாறும். 
உங்களுக்கு எது சரி என்று நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அதற்கு டேவ் க்ரென்ஷா வழங்கும் சில டிப்ஸ்:
*நீங்கள் தினசரி 24 மணி நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்று யோசியுங்கள். அரை மணி நேரத்துக்குமேல் செலவாகிற எல்லா வேலைகளையும் பட்டியல் போடுங்கள். ஒவ்வொன்றும் எவ்வளவு நேரத்தைத் தின்கிறது என்று பக்கத்திலேயே குறிப்பிடுங்கள்.
* அந்த வேலைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு மேலே நாம் பார்த்த நான்கு கேள்விகளைக் கேளுங்கள்.
* உங்களது லட்சியம், திறமைகளுக்குப் பொருந்தாத விஷயங்களை என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். வேறொருவரிடம் ஒப்படைக்கலாமா? அல்லது நாமே அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளலாமா?
*
மிச்சமிருக்கும் விஷயங்களுக்கு மட்டும் உங்களுடைய நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு ஒதுக்குங்கள். மற்றதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
*
இந்தப் பரீட்சையைக் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது நடத்துங்கள், நீங்கள் வடிகட்டித் தேர்ந்தெடுத்திருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றையும் உங்களை விட்டால் வேறு யாராலும் அத்தனை சிறப்பாகச் செய்யவே முடியாது என்கிற மதிப்பு மிகுந்த உன்னதமான நிலையை எட்டும்வரை விடாதீர்கள். அப்புறம் உங்களை யாராலும், எதனாலும் அசைக்கமுடியாது!


இப்போது, உங்களுக்கு ஒரு சின்னப் பரீட்சை. இந்தக் கொஸ்டின் பேப்பரில் மொத்தம் பத்துக் கேள்விகள் இருக்கும். அதில் ஒன்பது கேள்விகள் சுலபமானவை, பத்தாவது கேள்வி கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் எழுதுவீர்கள் ?

நம்மில் பெரும்பாலானோர் சுலபமான கேள்விகளைத்தான் முதலாவதாக எழுதி முடிப்போம். அதன்பிறகு கடைசியாக அந்தக் கஷ்டமான கேள்விக்கு வருவோம்.

இது பரீட்சையில் சரிப்படும். நிஜ வாழ்க்கையில் ?

மேலே பார்த்த அதே பரீட்சை. ஆனால், பத்துக்கேள்விகளுக்குப் பதிலாக, இங்கே பத்து வேலைகள். அவற்றில் ஒன்றுமட்டும் கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் செய்வீர்கள் ?

நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேர் அந்தக் கஷ்டமான வேலையை "அப்புறமாகப் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்போடுவார்கள். மற்ற சுலபமான வேலைகளை உடனே செய்து முடித்து திருப்தி அடைவார்கள்.

ஆனால், பரீட்சைக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசம், அங்கே கஷ்டமான கேள்வியைத் தவறவிடுகிற ஒரு மாணவன், தேர்வு முடிவதற்குள் அதற்குத் திரும்பி வருவான். அந்தக் கேள்விக்குச் சரியாக பதில் எழுதி மார்க் வாங்கிவிடுவான்.

நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. சிரமம் என்று நினைத்துத் தளளிப்போடுகிற ஒரு வேலையை, அத்தனை சுலபத்தில் நாம் மீண்டும் எடுத்துச் செய்வதே கிடையாது. காரணம், இன்னும் இன்னும் சுலபமான வேறு வேலைகள் குறுக்கிடும். மனம் அதில்தான் போகும். கஷ்டமான வேலையை எடுத்துச் செய்யத் தோன்றாது.

"தள்ளிப்போடுதல்' என்பது கொடுமையான ஒரு வியாதி. அதைச் சீக்கிரத்தில் குணப்படுத்திக்கொள்ளாவிட்டால், நம்முடைய நேரம் ஓடும், ஆனால் நாம் எங்கேயும் ஓடாமல், முன்னேறாமல் அதே இடத்தில்தான் நிற்போம். இந்த  

ஃப்ராக் ? தவளைக்கும் தள்ளிப்போடுவதற்கும் என்ன சம்பந்தம்?

"உங்கள்முன்னே தட்டில் அறுசுவை உணவு இருக்கிறது. அதற்கு மத்தியில் ஒரு தவளையும் இருக்கிறது. உவ்வே, அதைப்போய் யார் சாப்பிடுவார்கள்? ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு மற்ற ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுகிறீர்கள்!''

"கஷ்டமான வேலை' என்பதும் ஓர் அருவருப்பான தவளையைப்போல்தான் நமக்குத் தோன்றுகிறது. அதைத் தள்ளிப்போட்டுவிட்டால் நம் வாழ்க்கை ஆனந்தமயமாக இருப்பதுபோல் எண்ணுகிறோம்.

உண்மையில் அது ஒரு மாயை. நீங்கள் தள்ளிப்போடும் அந்த முக்கியமான வேலைதான் தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கொண்டுவருகிற விஷயமாக இருக்கும்.அதைத் தள்ளிப்போடுவதன்மூலம் உங்களுடைய வளர்ச்சிக்கு நீங்களே தடை போட்டுக்கொள்கிறீர்கள் என்பதுதான் நிஜம்.

ஆகவே, "அறுசுவை உணவு கிடக்கட்டும், முதலில் அந்தத் தவளையைச் சாப்பிடுங்கள்'  ஆரம்பத்தில் இது ஒரு கஷ்டமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் போகப்போக சிரமமான வேலைகளைச் செய்து முடிக்கிற சவால் உங்களுக்குப் பிடித்துவிடும். அவற்றை உடனுக்குடன் செய்வதால் கிடைக்கும் பெரிய பலன்கள் புரிய ஆரம்பிக்கும்!

இப்போது இன்றைக்கு நீங்கள் செய்ய நினைத்திருக்கும் வேலைகளை ஒரு பட்டியல் போடுங்கள். அதில் "தவளை' எது என்று யோசியுங்கள். அதை முதலில் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் மனத்திருப்தியை அனுபவியுங்கள்!


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets