சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
'ஆசிட்'
தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு, உடனடியாக, தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
மிகக் கொடூரமான, ஆசிட் வீச்சுக்கு இலக்கான லட்சுமி என்ற
இளம்பெண்ணின் வழக்கை, 2006ம் ஆண்டு முதல் விசாரித்து
வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட அமர்வு, இந்த உத்தரவையும் நேற்று பிறப்பித்தது.ஆசிட் வீச்சுக்கு இலக்காகும் பெண்கள், உடனடியாக தகுந்த சிகிச்சை கிடைக்காததால் தான், கடும் பாதிப்படைந்து உடல் பாகங்கள் கோரமாக ஆகின்றன என்பதால், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு.லலித் பிறப்பித்தனர்.
மேலும், இந்த உத்தரவை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிடம் இருந்தும் அதற்கான உறுதிமொழியை பெற்று, அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.