உங்களுடைய வளர்ச்சிக்கு நீங்களே தடையா ?
ஞாயிறு, 26 ஏப்ரல், 2015
பரீட்சைக்குப் பயந்தே படிப்பைப் பாதியில் நிறுத்துகிறவர்கள்
உண்டு. மற்றவர்கள் எப்பாடுபட்டாவது பரீட்சைகளை எழுதி முடித்து
பாஸ்செய்துவிடுவார்கள். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவுடன்
"பரீட்சை தொந்தரவு விட்டதுடா சாமி' என்று நிம்மதி அடைகிறார்கள்.
ஆனால், நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் நமக்கு
நாமே ஒரு தேர்வு வைத்துக்கொள்ளவேண்டும் தினந்தோறும் பரீட்சை என்றவுடன்
பயந்துவிடாதீர்கள். இந்தப் பரீட்சைக்கு நீங்கள் படிக்க வேண்டியதில்லை. வாத்தியார்
இல்லை. கொஸ்டின் பேப்பர்கூட அதிக நீளமில்லை.
நான்கே நான்கு கேள்விகள்தான். அவை இங்கே:
1
ஒவ்வொரு நாளும்
நான் என்னென்ன வேலைகளைச் செய்கிறேன்?
2 அந்த வேலைகள் ஒவ்வொன்றுக்கும் நிஜமான தேவை உள்ளதா?
3 நான் அந்த வேலைகளை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறேன்?
4 இந்த வேலைகளை என்னைத் தவிர வேறு யாராவது செய்துவிடமுடியுமா? (அதாவது, இன்னொருவர் என்னைத் தூக்கி எறிந்துவிடுவது சாத்தியமா?)
இந்த நான்கு கேள்விகளையும் அடிக்கடி கேட்டுக்கொள்கிறவர்கள் வாழ்க்கையில் ஃபெயிலாக வாய்ப்பே இல்லை என்கிறார் டேவ் க்ரென்ஷா. காரணம், இவைதான் நம்மை ஒரு விலை மதிக்க முடியாத வைரமாகப் பட்டை தீட்டுகின்றன. வீடோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ, நாமின்றி அணுவும் அசையாது என்கிற அளவுக்கு நம்மை உயர்த்துகின்றன.

முக்கியமான
விஷயம், இந்தக் கேள்விகள்
எல்லாவற்றுக்கும் திருப்தியான பதில்களைப் பெறவேண்டும். ஏதாவது ஒன்று நன்றாக
இருக்கிறது என்று இன்னொன்றை சாய்ஸில் விடக்கூடாது. பொய்யான பதில்களைச் சொல்லி
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது.
உதாரணமாக, நீங்கள் செய்யும் வேலையில் ஒரு
குறை இருக்கிறது என்று வையுங்கள். அதை இன்னொருவர் அடையாளம் கண்டு சுட்டிக்காட்டும்
வரை காத்திருந்தால் நீங்கள் பத்தோடு பதினொன்று ஆகிவிடுகிறீர்கள். அப்படியில்லாமல்
நீங்களே (இந்த மினிபரீட்சையின் உதவியோடு) அதைக்கண்டுபிடித்துச்
சரிப்படுத்திக்கொள்ளப்பழகினால்,
கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய
குறைகள் மறையும்.
உங்கள் இடத்தை
யாராலும் பிடிக்கமுடியாது என்கிற நிலையை எட்டுவீர்கள்.
சரி. எனக்கு நானே பரீட்சை வைத்துக்கொண்டுவிட்டேன். நான் எதில் ஸ்ட்ராங், எங்கே வீக் என்பது புரிந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது?
இங்கே நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் எதில் கவனம் செலுத்தப்போகிறீர்கள்? உங்களுடைய பலங்களை நன்கு பயன்படுத்திக்கொள்வீர்களா? அல்லது பலவீனங்களைச் சரி செய்ய மெனக்கெடுவீர்களா?
இந்த இரண்டில் எது உசத்தி, எது மட்டம் என்று யோசித்துக் குழம்பவேண்டாம். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சூழ்நிலை, விருப்பு வெறுப்புகளைப் பொறுத்து மாறும்.

உங்களுக்கு
எது சரி என்று நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அதற்கு டேவ் க்ரென்ஷா வழங்கும்
சில டிப்ஸ்:
*நீங்கள் தினசரி 24 மணி நேரத்தை எப்படிச்
செலவிடுகிறீர்கள் என்று யோசியுங்கள். அரை மணி நேரத்துக்குமேல் செலவாகிற எல்லா
வேலைகளையும் பட்டியல் போடுங்கள். ஒவ்வொன்றும் எவ்வளவு நேரத்தைத் தின்கிறது என்று
பக்கத்திலேயே குறிப்பிடுங்கள்.
* அந்த வேலைகள் ஒவ்வொன்றையும்
எடுத்துக்கொண்டு மேலே நாம் பார்த்த நான்கு கேள்விகளைக் கேளுங்கள்.
* உங்களது லட்சியம், திறமைகளுக்குப் பொருந்தாத
விஷயங்களை என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். வேறொருவரிடம் ஒப்படைக்கலாமா? அல்லது நாமே அந்தத் திறனை
வளர்த்துக் கொள்ளலாமா?
* மிச்சமிருக்கும் விஷயங்களுக்கு மட்டும் உங்களுடைய நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு ஒதுக்குங்கள். மற்றதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
* இந்தப் பரீட்சையைக் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது நடத்துங்கள், நீங்கள் வடிகட்டித் தேர்ந்தெடுத்திருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றையும் உங்களை விட்டால் வேறு யாராலும் அத்தனை சிறப்பாகச் செய்யவே முடியாது என்கிற மதிப்பு மிகுந்த உன்னதமான நிலையை எட்டும்வரை விடாதீர்கள். அப்புறம் உங்களை யாராலும், எதனாலும் அசைக்கமுடியாது!

இப்போது, உங்களுக்கு ஒரு சின்னப்
பரீட்சை. இந்தக் கொஸ்டின் பேப்பரில் மொத்தம் பத்துக் கேள்விகள் இருக்கும். அதில்
ஒன்பது கேள்விகள் சுலபமானவை, பத்தாவது கேள்வி கஷ்டமானது. நீங்கள் எதை முதலில்
எழுதுவீர்கள் ?
நம்மில் பெரும்பாலானோர்
சுலபமான கேள்விகளைத்தான் முதலாவதாக எழுதி முடிப்போம். அதன்பிறகு கடைசியாக அந்தக்
கஷ்டமான கேள்விக்கு வருவோம்.
இது
பரீட்சையில் சரிப்படும். நிஜ வாழ்க்கையில் ?
மேலே பார்த்த அதே பரீட்சை.
ஆனால், பத்துக்கேள்விகளுக்குப் பதிலாக, இங்கே பத்து வேலைகள். அவற்றில்
ஒன்றுமட்டும் கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் செய்வீர்கள் ?
நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது
பேர் அந்தக் கஷ்டமான வேலையை "அப்புறமாகப் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்போடுவார்கள்.
மற்ற சுலபமான வேலைகளை உடனே செய்து முடித்து திருப்தி அடைவார்கள்.
ஆனால், பரீட்சைக்கும் இதற்கும்
முக்கியமான வித்தியாசம், அங்கே கஷ்டமான கேள்வியைத் தவறவிடுகிற ஒரு மாணவன், தேர்வு முடிவதற்குள் அதற்குத்
திரும்பி வருவான். அந்தக் கேள்விக்குச் சரியாக பதில் எழுதி மார்க் வாங்கிவிடுவான்.
நிஜ வாழ்க்கையில் அப்படி
நடப்பதில்லை. சிரமம் என்று நினைத்துத் தளளிப்போடுகிற ஒரு வேலையை, அத்தனை சுலபத்தில் நாம்
மீண்டும் எடுத்துச் செய்வதே கிடையாது. காரணம், இன்னும் இன்னும் சுலபமான வேறு வேலைகள் குறுக்கிடும். மனம்
அதில்தான் போகும். கஷ்டமான வேலையை எடுத்துச் செய்யத் தோன்றாது.
"தள்ளிப்போடுதல்' என்பது கொடுமையான ஒரு வியாதி. அதைச் சீக்கிரத்தில்
குணப்படுத்திக்கொள்ளாவிட்டால், நம்முடைய நேரம் ஓடும், ஆனால் நாம் எங்கேயும் ஓடாமல்,
முன்னேறாமல் அதே இடத்தில்தான்
நிற்போம். இந்த
ஃப்ராக் ? தவளைக்கும் தள்ளிப்போடுவதற்கும் என்ன சம்பந்தம்?
"உங்கள்முன்னே தட்டில் அறுசுவை உணவு இருக்கிறது. அதற்கு
மத்தியில் ஒரு தவளையும் இருக்கிறது. உவ்வே, அதைப்போய் யார் சாப்பிடுவார்கள்? ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு
மற்ற ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுகிறீர்கள்!''
"கஷ்டமான வேலை' என்பதும் ஓர் அருவருப்பான தவளையைப்போல்தான் நமக்குத்
தோன்றுகிறது. அதைத் தள்ளிப்போட்டுவிட்டால் நம் வாழ்க்கை ஆனந்தமயமாக இருப்பதுபோல்
எண்ணுகிறோம்.
உண்மையில் அது ஒரு மாயை.
நீங்கள் தள்ளிப்போடும் அந்த முக்கியமான வேலைதான் தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு
மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கொண்டுவருகிற விஷயமாக இருக்கும்.அதைத்
தள்ளிப்போடுவதன்மூலம் உங்களுடைய வளர்ச்சிக்கு நீங்களே தடை போட்டுக்கொள்கிறீர்கள்
என்பதுதான் நிஜம்.
ஆகவே, "அறுசுவை
உணவு கிடக்கட்டும், முதலில் அந்தத் தவளையைச் சாப்பிடுங்கள்' ஆரம்பத்தில் இது ஒரு கஷ்டமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் போகப்போக
சிரமமான வேலைகளைச் செய்து முடிக்கிற சவால் உங்களுக்குப் பிடித்துவிடும். அவற்றை
உடனுக்குடன் செய்வதால் கிடைக்கும் பெரிய பலன்கள் புரிய ஆரம்பிக்கும்!
இப்போது இன்றைக்கு நீங்கள்
செய்ய நினைத்திருக்கும் வேலைகளை ஒரு பட்டியல் போடுங்கள். அதில் "தவளை' எது என்று யோசியுங்கள். அதை
முதலில் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் மனத்திருப்தியை அனுபவியுங்கள்!