உங்கள் வருகைக்கு நன்றி

குளிர்கால நோய்களை வரவிடாமல் செய்ய.

புதன், 1 நவம்பர், 2017

குளிர்கால நோய்களை வரவிடாமல் தடுக்கும் சமையல் பொருட்கள் மழை, குளிர் காலத்தில், ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் சுத்தமில்லாத தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்டவை அதிகம் வரும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும், வெப்பமும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

குளிர்காலங்களில் மசாலா காரத்தை குறைத்து, மிளகு காரத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறி சூப்பில் சிறிதளவு இஞ்சி, பூண்டு மற்றும் மிளகுத்துாளை சேர்த்துக் கொடுத்தால், குழந்தைகள், பெரியவர்களுக்கு இன்பெக்க்ஷன் வராது; சளியும் வராது; காய்ச்சலும் வராமல் தடுக்க முடியும். இது, குளிர்காலங்களில் வருகிற உடம்பு வலியையும் போக்கும்.

இஞ்சி, மிளகு, திப்பிலி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்தால், குளிர்காலத்தில் எந்த பிரச்னையும் நம்மை அண்டாது. மேலும், கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிப்பது நல்லது. கொதிக்க வைத்த தண்ணீரில், 10 மிளகை போட்டு, ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே வைத்தால், தண்ணீரில் இருக்கிற அசுத்தம், கிருமிகளை மிளகு உறிஞ்சி விடும். இந்த தண்ணீரை குடித்தாலே, பாதி பிரச்னைகள் வராது. இந்த தண்ணீரை தினமும் செய்து பயன்படுத்துவது  நல்லது.  முதல் நாள் இரவு, ஒரு டம்ளர் தண்ணீரில், 10 துளசி இலைகளை போட்டு, மறுநாள் காலையில் குடித்தால், டைபாய்டு, மலேரியா கூட, உங்களை நெருங்காது. சீரகத் தண்ணீரை குடித்தாலே, குளிர்காலத்தில் வருகிற பல பிரச்னைகளுக்கு, 'குட் பை' சொல்லலாம். இஞ்சி அல்லது சுக்கை தண்ணீரில் போட்டு, பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டால், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சளி பிடிக்காது. சளி பிடித்தவர்களுக்கும் இதுதான் நிவாரணம். தவிர, குளிர் காலங்களில் ஜீரண சக்தி மெதுவாகத்தான் இருக்கும். சிலர்,  இந்த, 'சீசனில்' தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இதனால் மலச்சிக்கல் வரும். இவர்களுக்கும் இஞ்சி தான் சிறந்த தீர்வு.
வெதுவெதுப்பான தண்ணீரில், வீட்டில் அரைத்த மஞ்சள் துாளை ஒரு சிட்டிகை சேர்த்து தினமும் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு, உடம்பிலிருந்து விஷத்தையும் எடுக்கும். தவிர, மூட்டு வலி, துாக்கமின்மை, சூரிய வெளிச்சம் உடம்பில் படாததால் வருகிற சோம்பல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளையும் தீர்க்கும்.
வெந்தயம் குளிர்ச்சி தான் என்றாலும், ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடியை சுடுநீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் அதிகரிக்கும். தவிர, மலேரியா காய்ச்சலை எதிர்க்கிற நோய் தடுப்பு சக்தி, வெந்தயத்தில் இருக்கிறது.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets