குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதே நல்லது.
புதன், 8 நவம்பர், 2017
குழந்தைகள் தங்கள்
சூழலைப் பொறுத்தே, தங்களை வடிவமைத்து கொள்கின்றனர். எட்டு வயதுக்கு மேற்பட்ட
குழந்தைக்கே, தாங்கள் செய்வது சரியா, இல்லையா என்பதை
பிரித்தறியத்
தெரியும். குழந்தைகள் சுட்டித்தனமாகப் பேசுவதை, தொலைக்காட்சிகளில் ரசிக்கப்படுவதைப் போல காட்டுவதால், அதைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும், பெற்றோரும் அது தான் சரியானது எனவும், அப்படி இருந்தால் தான், தங்களைக்
கொண்டாடுவர் எனவும், பொய்யான கற்பிதங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
குழந்தைகள்
செய்யும் குறும்புத்தனத்தைப் பொறுத்து அவர்களை, 'ஹைப்பர் ஆக்டிவ், ஓவர் ஆக்டிவ்' என சொல்லலாம்.
அதிக வேலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கும் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள், எதையும் முழுமையாக செய்யாமல் கவனச் சிதறல்கள் கொண்டவர்களாக
இருப்பர்.
குழந்தைகளின்
உலகம், வீடு, பள்ளி, சமூகம், சூழலின்
அடிப்படையில் தான், மாறுபடுகிறது. குழந்தைகள் தாங்கள் செய்யும் செயல் சரியா, தவறா என, தெரியாமல்
பெற்றோர், ஆசிரியர் காட்டும் வழிகாட்டுதலின் படியே தங்களை
வடிவமைத்துக் கொள்கின்றனர்.
குழந்தைகள்
வயதுக்கு மீறி செய்யும்போது, பெற்றோர் அதைக்
கவனிக்காமல் இருந்தாலோ, ஊக்கப்படுத்தினாலோ குழந்தைகள் அதை சரியென எடுத்துக் கொள்கின்றனர்.
ஐந்து முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தாம் செய்யும்
தவறுகளால் ஏற்படும் அவமானம் குறித்துப்
புரிவதில்லை.
அதனால், தனக்கு கிடைக்கும் சுதந்திரம், சூழல் பொறுத்தே அக்குழந்தைகள், தங்கள் செயல்களை செய்ய ஆரம்பிக்கின்றனர்.
ஓவர் ஆக்டிவ்
குழந்தைகள் ஒரே விஷயத்திலோ,
பல விஷயங்களிலோ கவனம் செலுத்துவர். ஆனால், ஒரு வேலையில் ஈடுபடும்போது அதை முழுமையாக உள்வாங்காமல், அடுத்த வேலையில் ஈடுபட மாட்டார்கள்.
இத்தகைய
குழந்தைகள் பன்முகத் திறமைசாலிகளாக இருந்தாலோ, ஒரே துறையில்
திறமைசாலிகளாக இருந்தாலோ அதில் முழுமையான, தேர்ந்த அறிவைப்
பெற்றிருப்பர். ஆக, குழந்தைகள் எந்த வகையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதுபற்றி கவலை கொள்ள தேவையில்லை. குழந்தைகளை, குழந்தை
களாக இருக்க
விடுவதே சரி. குழந்தைகளை கண்டிக்க ஆரம்பித்தால், அவர்கள் தங்கள்
செயலை, பெற்றோருக்கு தெரியாமல் செய்ய ஆரம்பித்து விடுவர். அதைத்
திருத்திக் கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள். எனவே, குழந்தைகள்
ஏற்கும்படி, புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச்
சொல்வதே நல்லது.