கட்டுக்குள் இல்லாத நீரிழிவு?
புதன், 8 நவம்பர், 2017
பொருளாதார
வளர்ச்சி,
நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி விட்டது. தினசரி வாழ்க்கையில், நாம்
அதிகம் சிரமப்பட தேவை இல்லா வகையில், எல்லா வேலைகளும் எளிதாகி விட்டன; இதனால், உடல்
உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. துரித உணவு கள், மென்
பானங்கள், செயற்கை உணவுகள், அதிக
அளவில் அரிசி, சர்க்கரை சாப்பிடுவது, எண்ணெயில்
பொரித்த, வறுத்த உணவுகள், என, இவையெல்லாம், 'ஒபிசிட்டி' எனப்படும், உடல் பருமனை ஏற்படுத்தி, முடிவில், நீரிழிவு
கோளாறை ஏற்படுத்துகின்றன.
வயதானவர்களுக்கு
மட்டுமே வந்த நீரிழிவு பிரச்னை, நடுத்தர வயதினருக்கு வந்தது. தற்போது, இளம்
வயதினர்கள் மற்றும் டீன் - ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள் என்று பாதிக்கப்பட்டு, தற்போது, குழந்தைகளையும்
அது பாதிக்கிறது.
நீரிழிவு
கோளாறு வந்தால், அது சிக்கலான உடல் பிரச்னையாக மாறுவதற்கு, 20 ஆண்டுகள்
ஆகும். இளம் வயதிலேயே இந்தப் பிரச்னை வரும்போது, நடுத்தர
வயதை நெருங்கும்போது, நீரிழிவு பல சிக்கலான உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இதனால், அவரின் சுய முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
இதனால், அவரின் சுய முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
உங்கள்
வயது,
தினமும் உடற்பயிற்சி செய்பவரா, உங்கள் பெற்றோருக்கு நீரிழிவு உள்ளதா, என்ற
எளிமையான கேள்விகளுக்கு கிடைக்கும் பதில், நீரிழிவு நோயாளியா, இல்லையா
என்பதை சொல்லி விடும். ஆண்களுக்கு, இடுப்பின் சுற்றளவு, 90 செ.மீ,க்கு
குறைவாகவும், பெண்களுக்கு, 80 செ.மீ.,க்கு கீழேயும் இருந்தால், நீரிழிவு
வருவதற்கான வாய்ப்பு, 50 சதவீதத்திற்கும் குறைவு.
அதிக
தாகம்,
களைப்பு, ஆறாத புண், பாதங்கள் மரத்து போதல், எரிச்சல், கால்களில்
காயம் மற்றும் கட்டி போன்றவை நீரிழிவு வருவதற் கான அறிகுறிகள்.புகை பிடிப்பதோ, மது
அருந்துவதோ கூடாது. முடிந்த அளவு அரிசி உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக
சாப்பிடுதல் நல்ல பலனை தரும். ஒரே இடத்தில், அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது தவறான பழக்கம்.
செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது; குறைந்தது, தினமும், 350 கிராம் பழங்கள் சாப்பிடுவது; தினமும் நடைப்பயிற்சி, போதிய துாக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை பின்பற்றினால், நீரிழிவு வருவதை தடுக்கலாம்!
செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது; குறைந்தது, தினமும், 350 கிராம் பழங்கள் சாப்பிடுவது; தினமும் நடைப்பயிற்சி, போதிய துாக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை பின்பற்றினால், நீரிழிவு வருவதை தடுக்கலாம்!