திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.
திங்கள், 2 ஏப்ரல், 2018
மண்ணில் மனிதன் பிறந்ததிலிருந்து நேரத்தின் பங்கு முக்கியமானது. நேரத்தை பொறுத்து தான்
அனைத்து செயல்களும் அரங்கேறுகின்றன. ஒன்றை நாம் அடைய வேண்டு மெனில்,நேரத்தின் போக்கிற்கேற்ப ஓடிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு நேரத்தில்
வாழ்க்கை வாழ்வதை மறந்துவிட்டு ஓடுகிறோமே என்று தோன்றும். இதற்கு காரணம் நேரத்தை
முறையாக திட்டமிட்டு பயன்படுத்தாமல் இருப்பது தான்.
சமநிலைப்படுத்துங்கள்
சமநிலை என்பது எல்லாவற்றிலும் இருப்பதால் இப்பூவுலகம் அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்வதில் துவங்கி வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது முடிய அனைத்து செயல்களுக்கும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை எந்த அளவு முடிக்க முடியும் என திட்டமிட்டு அதன் படி, நேரத்தை சமநிலைப்படுத்துங்கள். பின் அந்த செயலை துவங்கி வெற்றிகரமாக முடியுங்கள்.
உங்களை அறியுங்கள்
நேர மேலாண்மையில் மிகவும் முக்கியமான ஒன்று இது தான். உங்களை நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே நேரத்தை உரிய முறையில் கட்டுப்படுத்தி நிர்வகிக்க முடியும். ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான திறமை உள்ளதா? செயல் திறம் உள்ளதா? உள்ளிட்டவற்றை நீங்கள் அறிந்தால் மற்றவர்களின் புத்திமதியோ, உதவியோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் நேரத்தை தரமாக நிர்ணயித்து காரியத்தை வெற்றிகரமாகவும் குறித்த நேரத்திலும் முடிப்பீர்கள்.
எதார்த்தமாக பழகுங்கள்
எதார்த்தமான விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயல்களை உங்கள் திறமை மற்றும் செயல்திறம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடினமான செயல்களை உங்கள் மீது சுமத்திக் கொள்ளாதீர்கள்.
செயலை பிரித்துக் கொள்ளுங்கள்
பெரிய அளவிலான ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் முன் அதை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் உங்களை மூழ்கடித்து விடும். நேரத்திற்கு தகுந்தவாறு சிறு பாகங்களாக செயலை பிரித்து செய்தால் அதை முழுமையாகவும், பதட்டம் இல்லாமலும் பார்க்கலாம்.
திட்டமிட கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுடைய வேலைகளையும் அவற்றை தகுந்த நேரத்தில் முடிப்பதற் கான வழிகளையும் திட்டமிட கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் மேற்கூறியது போல், திட்டமிடும் பொழுதே ஒரு செயலுக்கான நேரமும், செயலை பாகங்களாக பிரித்து முடிப்பதற்கான முயற்சிகளும் நமக்கு தெரிந்துவிடும். இது போல் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம். - தினமலர்