உங்கள் வருகைக்கு நன்றி

தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும் ஏன் ?

செவ்வாய், 18 செப்டம்பர், 2018


நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும். ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது. வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை. எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, குடும்பத்துடன் சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும். உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது.மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர். தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம். முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets