உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகள்

திங்கள், 24 செப்டம்பர், 2018

இயற்கையின் மீது பிடிப்பு உண்டாகும்!

சிறு குழந்தைகளை, திரையரங்குகள் மாதிரியான, கூட்டம் மிகுந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அங்கிருக்கும் சத்தம் மற்றும் மனித நெருக்கடி குழந்தைகளுக்கு அசவுகரியத்தை அளிக்கும். மேலும், குழந்தைகளுக்கு நோய் தொற்று  ஏற்படும் அபாயம் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, 'ஐஸ்கிரீம், சிப்ஸ்' உள்ளிட்டவற்றை பெற்றோர் சாப்பிடும் போது, இதைப் பார்க்கும் குழந்தையும், அதன் வாசத்தில் கிறங்க ஆரம்பிக்கும்; 'எனக்கும் வேணும்' என, நாக்கை நீட்டி கேட்கும். பெற்றோரும், குழந்தையின் நாக்கில் ஐஸ்கிரீமைத் தடவுவது, சிப்சை துாளாக்கி வாயில் திணிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வர். இது போன்ற உணவுகளை சிறுவயதிலேயே சுவைக்கும் குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகி விடுவர். விளைவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துக்கு வழிவகுக்கும்.
திரையரங்கிற்கு பதிலாக, சிறு வயது முதலே குழந்தைகளை,  பிரார்த்தனைக் கூடங்களுக்கு அழைத்துச் செல்வதால், அங்கிருக்கும் நல் அதிர்வுகள், குழந்தைகளை மேம்படுத்தும்; அவர்களை மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைக்கும்.
அதுமட்டுமல்லாமல், சினிமா உள்ளிட்ட, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றால் மட்டுமே, குழந்தைகளுக்கு அனுபவம் கிடைக்கும் என்ற தவறான எண்ணம், பெற்றோர் மத்தியில் இருக்கிறது.  ஆனால், உண்மை அதுவல்ல! வீட்டின் மொட்டை மாடியில், குழந்தைகளை உங்களின் கண்காணிப்பிலேயே விளையாட வைக்கலாம். 
இப்படி, மொட்டை மாடியில் குழந்தைகள் சிறிது நேரம், தங்களின் நேரத்தை செலவிடும் போது, ஆகாயம், பறவைகள்  உள்ளிட்டவற்றைப் பார்த்து ரசிப்பர்; இயற்கையின் மீது ஒருவித பிடிப்பு உண்டாகும். மாசு அதிகம் இல்லாத காலை நேரத்தில், வானிலையும் சிறப்பாக இருக்கும் போது, குழந்தைகளை அழைத்து, காலாற ஒரு நடை போகலாம்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குழந்தைகள், இதன் மூலம் தெரிந்து கொள்வர். பரந்து விரிந்த இந்த உலகம் குறித்த புரிதல், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்கும்!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets