உலர் முருங்கை இலை, விதை விற்பனையில் வருமானம்.
வியாழன், 4 அக்டோபர், 2018
பிளேட்டோசென் சமரசம்: பி.டெக்., - எம்.பி.ஏ., முடித்த நான், பிலிப்பைன்ஸ்
நாட்டில்,
அரசு
சாரா அமைப்பின் இயக்குனராக இருந்த போது, விவசாயம், சுற்றுச்சூழல் என, நிறைய, 'புராஜெக்ட்' செய்தோம். அப்போது, வெளிநாடுகளில் முருங்கை இலைக்கு, அதிகத் தேவை
இருப்பது தெரிய வந்தது.அதன்பின், இந்தியா திரும்பி, உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அந்த நேரத்தில், ஓய்வு பெற்ற
அப்பாவிடம்,
முருங்கைச்
சாகுபடி பற்றி கூறியதும், ஏற்றுக் கொண்டார். நிறைய ஊர்களுக்குப் போய், முருங்கை
விவசாயிகளைப் பார்த்துப் பேசியதில், இலை அறுவடைக்கு, செடி முருங்கை ஏற்றது என, தெரிந்தது.இது, மொத்தம், 40 ஏக்கர் நிலம்; நல்ல
செம்மண். 10
ஏக்கரில்
நெல்லி,
5 ஏக்கரில்
நாட்டு ரக எலுமிச்சை, 15 ஏக்கரில் மாமரங்கள், 5 ஏக்கரில் செடி முருங்கை, 2 ஏக்கரில், முருங்கை
விதைக்கு என விட்டு உள்ளோம். மீதி, 3 ஏக்கரை, முருங்கைச் சாகுபடிக்காகத் தயார் செய்து வைத்துள்ளோம். காய
வைத்த முருங்கை இலையை எங்களிடம் இருந்து வாங்கி, ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து
வருகின்றனர். 45 நாளுக்கு ஒருமுறை, இலை அறுவடை செய்யலாம். மழைக்காலங்களில் அறுவடை செய்ய
மாட்டோம். அந்த வகையில், ஆண்டுக்கு, ஐந்து தடவை அறுவடை செய்யலாம். 1 ஏக்கர் செடி
முருங்கையில், ஓர் அறுப்புக்கு, 4,000 - 4,500 கிலோ இலை கிடைக்கும்.மேலும், 1,000 கிலோ இலையைக் காய வைத்தால், 100 கிலோ உலர்ந்த
இலை கிடைக்கும். ஆண்டுக்கு, 2,000 கிலோ உலர்ந்த இலை கிடைக்கிறது. 1 கிலோ, 130 ரூபாய் என, ஆண்டுக்கு, 1 ஏக்கர்
மூலமாக,
2.50 லட்சம்
ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இடுபொருள், பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்து எல்லாம் சேர்த்து, 85 ஆயிரம்
ரூபாய் செலவு போக, 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் வரும்; ஒரு முறை
நடவு செய்தால், ஐந்து ஆண்டு வரை வருமானம் பார்க்கலாம்.தொடர்புக்கு:
பிளேட்டோசென் சமரசம்: 95661 01102; சமரசம்: 94437 35902.