உங்கள் வருகைக்கு நன்றி

ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி

புதன், 31 அக்டோபர், 2018


ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தயாரித்து விற்பனை செய்து வரும், மதுரையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் விஜயலட்சுமி: ஊதுவத்திக்கு ஏழு வகையான மூலப் பொருட்கள் தேவை. அனைத்தும், 'கெமிக்கல்' விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். குறைந்தபட்சம் கிலோ அளவுக்குத் தான் கொடுப்பர்.பெரும்பாலும் இந்த மூலப் பொருட்களை, தரம் வாரியாகப் பிரித்து வைத்திருப்பர்; அதற்கேற்ப விலையும் வேறுபடும். பிசினசாகச் செய்ய விரும்புவோர், தரமான பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஊதுவத்திகளிலும், 'கோல்டு, சில்வர்' என, 'கிளிட்டர்' கலர்கள் வந்துவிட்டன.அதேபோல், ஒரே ஒரு, 'சென்ட்டை' மட்டும் உபயோகித்து செய்யலாம்; ஒன்றுக்கு மேலான, 'சென்ட்' வகைகளைக் கலந்தும் செய்யலாம். இப்போது ஆயிரக்கணக்கான, 'சென்ட்' வகைகள் வந்துவிட்டன. மல்லிகை, மரிக்கொழுந்து, 'சென்ட்'டுகளின் விலை கொஞ்சம் அதிகம். 2 கிலோ ஊதுவத்திகள் செய்ய, 120 - 150 ரூபாய் வரை முதலீடு தேவை. குச்சிகளின் எண்ணிக்கையையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.'கம்ப்யூட்டர்' சாம்பிராணிக்கு, 10 வகையான மூலப் பொருட்கள் தேவை. வாசனை எதுவும் கலக்க மாட்டோம். சாம்பிராணியின் வாசம் தான், இதில் ஸ்பெஷல். மூலிகைகள் கலந்த, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தான், இப்போது, 'ட்ரெண்டில்' இருக்கிறது. உதாரணத்துக்கு வேப்பிலை, துளசி என, நம் தேவைக்கேற்ப மூலிகைகளைக் கலந்து செய்யலாம்; இதற்கு, 120 ரூபாய் முதலீடு தேலைப்படும்.விரல் தடிமன் அளவு கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கான, 'மோல்டு'கள் கடைகளில் கிடைக்கும். 'கப்' வடிவ மோல்டு வேண்டுமானால், பட்டறையில் ஆர்டர் கொடுத்து செய்து தான் வாங்க வேண்டும். ஊதுவத்திகளைப் பொறுத்தவரை, போடுகிற முதலீட்டைப் போல, இரு மடங்கு லாபம் எடுக்க முடியும்.'சென்ட்' கலக்காமல் வெறும் ஊதுவத்திகளை மட்டும் தயாரித்து, மொத்த வியாபாரக் கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்கும் வாய்ப்பும் உண்டு. 'கம்ப்யூட்டர்' சாம்பிராணியில், இரு மடங்கு லாபம் கிடைக்கும். சாதாரண சாம்பிராணியா, மூலிகை கலந்த ஸ்பெஷல் சாம்பிராணியா என்பதைப் பொறுத்து, விலையில் மாற்றம் செய்யலாம். அட்டைப் பெட்டிகளில் அடுக்கி, சாம்பிராணியை ஏற்றிவைக்கும் குட்டித் தட்டு போன்றவற்றுடன் கொடுக்கலாம். வெறுமனே சாம்பிராணிகளை, 'கவரில் பேக்' செய்தும், கடைகளில் மொத்தமாகக் கொடுக்கலாம்.நாம் வாங்கும் சாம்பிராணி, சில நேரம் ஏற்றி வைத்ததும் உதிர்ந்து போவதைப் பார்த்திருப்போம். கலவை நுணுக்கம் தெரியாமல் செய்யும் போது தான் அப்படி ஏற்படும். அதற்கும், வாசனை போகாமல் இருப்பதற்கான, சூட்சுமங்கள் பயிற்சியில் கற்றுத் தரப்படும். சென்னை மற்றும் மதுரையில், ஒரே நாள் பயிற்சியாக, 800 ரூபாய் கட்டணத்தில், ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets