உங்கள் வருகைக்கு நன்றி

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா ?

வெள்ளி, 5 அக்டோபர், 2018


ஒவ்வொரு பெண்ணுக்கும், மாதவிடாய் நேர வலிகள் வேறுபட்டவை. அன்றாட வேலைகளை கூடச் செய் முடியாத அளவுக்கு இருக்கும்; அந்த நாட்களில் ஓய்வெடுப்பதும், சத்துமிக்க உணவை சாப்பிடுவதும் அவசியம். மூளையிலிருந்து உறுப்புகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருட்களான, 'ஹார்மோன்' மாற்றங்களால், மாதவிடாய் காலத்தில், உடல் பாரமாக இருப்பதாக உணர்வர். இந்த வேதிப் பொருட்களின் சமநிலையற்ற தன்மையால், மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவலை உணர்வு மேலோங்கி இருக்கும். சிலர் அதிக கோபத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுவர். மார்பகங்கள் வீங்கியிருப்பது போல தோன்றும்; வலியும் ஏற்படும். மேல் வயிறு பெரிதானது போல தோன்றும். அடிவயிறு பகுதியில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி ஏற்படும். இந்த சிரமங்களால், மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது என, பெண்கள் நினைக்கின்றனர். ஆனால், அப்போது சில உடற்பயிற்சிகளை செய்வது, நல்ல பலன் களை கொடுக்கும்.சாதாரணமாக, சைக்கிள் ஓட்டுவது நல்ல பயற்சி. அதுவும், 'ஜிம்'மில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி சைக்கிள் ஓட்டுவதால், தொடைப்பகுதி வலிமை அடையும். கைகளுக்கான பயிற்சிகளையும் செய்யலாம். 'கார்டியோ' உடற்பயிற்சிகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கும், 'சைக்கிளிங், ட்ரெட்மில்'லில் ஓடுவது போன்றவற்றை, 20 முதல், 40 நிமிடங்கள் வரை செய்யலாம். நடைபயிற்சியும், மிதமான ஓட்டமும் கூட உதவும். சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம். எனவே, வயிற்றுக்கான பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்வதால், மூளையில், ஒருவித அமிலம் சுரந்து, வலியை உணரும் சக்தி குறையும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், மாதவிடாய் கால ரத்தப் போக்கு அதிகரிக்காது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகள் வலிமையடைந்து, மாதவிடாய் காலச் சோர்வு குறைந்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.
சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தும், சிசேரியன் என்றால், ஒரு வாரம் கழித்தும், உடற்பயிற்சிகள் செய்யலாம். உடல் செயல்பாட்டுகளின் அடிப்படையில், காலை வேளை தான், உடற்பயிற்சிக்கு ஏற்றது. சில பெண்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில், காலை நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள், மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்.

பிசியோதெரபிஸ்ட், ரம்யா செந்தில்குமார்


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets