எலும்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!
புதன், 24 ஜூலை, 2019
எலும்புகள்
வலுப்பெற சாப்பிட வேண்டிய உணவுகளை கூறும், டயட்டீஷியன்.:
எலும்பு தான், நம் உடலின் ஆதாரம். அதில்
பாதிப்பு ஏற்பட்டால், உடலின் மொத்த இயக்கமும்
பாதிக்கப்படலாம். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், குறைபாடு
காரணமாக அதில் வரும் பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கவும், கால்சியம், மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், போலேட், வைட்டமின், 'சி' மற்றும்
'டி' ஆகிய
சத்துகள் தேவை. இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம், வைட்டமின், 'டி' மற்றும்
மக்னீசியம் என்பதால், அவை அதிகமாக உள்ள உணவு களை
எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.பால், தயிர், சீஸ், வெண்ணெய்
போன்ற பால் உணவுகளில், கால்சியம் நிறைந்திருக்கும்.
பால் உணவுகள் சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்கள், மேற்கூறிய
உணவுகளுக்கு பதில் கசகசா, பச்சை நிற காய்கறிகள், கீரை
வகைகள்,
புரொக்கோலி, எள், சியா
விதைகள்,
பாதாம்
போன்றவற்றை எடுத்துக் கொண்டால், கால்சியம் சத்து
கிடைக்கும்.சூரிய ஒளியில், வைட்டமின், 'டி' சத்து
அதிகம் உள்ளது. எனவே, காலை,
6:00 முதல், 9:00 மணி
வரையும்,
மாலை,
4:00 முதல், 6:00 மணி
வரையும்,
உடலில்
சூரிய ஒளி படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை முட்டை, மீன், மீன்
எண்ணெய்,
காளான்
போன்றவற்றை சாப்பிடலாம். கால்சியம் சத்தை முழுமையாகவும், முறையாகவும்
உட்கிரகிக்க, வைட்டமின், 'டி' அவசியம்.
எலும்பு ஆரோக்கியம் மட்டுமன்றி, நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கவும், இது உதவும்.கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை
விதைகள்,
வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு
வகைகள்,
சிறு
தானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ
போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்துக்கும் தனித்தனியாக உணவு
உட்கொள்வதை விட, கலவை உணவுகளாக சாப்பிடுவது
நல்லது.உதாரணமாக, எள் + அடை உடன், ஆரஞ்சு
பழம். எள்ளை பொடியாக்கி அடை மீது துாவியோ அல்லது சட்னியாக அரைத்தோ காலை உணவாக
சாப்பிடலாம்; கால்சியம் அதிகம்
கிடைக்கும்.சிறு தானியத்துடன் கீரையை சேர்த்து, மதிய
உணவாக எடுத்துக் கொள்ளலாம். கீரையில் மக்னீசியம், துத்தநாகம்
போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும்.புரொக்கோலியுடன், பச்சை
நிற காய்கறிகள் சேர்த்த சூப்பை, மாலை நேரம் சாப்பிடலாம்.
புரொக்கோலி, கால்சியம் மற்றும் வைட்டமின், 'சி' நிறைந்தது.
பச்சை நிற காய்கறி கள் அனைத்திலும், வைட்டமின், 'ஏ, கே' மற்றும்
போலேட் சத்துகள் நிறைந்துள்ளதால் அவற்றை சாப்பிடலாம்.