நிறைவான வருமானம் கொடுப்பது, முருங்கை மட்டும் தான்.
வெள்ளி, 26 ஜூலை, 2019
குருஷ்' ரக
முருங்கையை,
இயற்கை
முறையில் சாகுபடி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, தர்மலிங்கம்:
ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு போகாமல், சிறு வயதிலேயே அப்பாவுடன், வாழைக்காய் வியாபாரம் பார்க்கிறேன். 1982-ல், முருங்கைக்காய்
விவசாயத்தை ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் முருங்கையை வைத்து, ரசாயன உரம்
போட்டு வந்தேன்.கடந்த, 2008ல், பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்து புத்தகத்தில் படித்து, அதன்பின், ரசாயன
உரங்களை நிறுத்தி, இயற்கைக்கு மாறினேன்.'குருஷ்' வகை முருங்கை ரகங்களை வளர்த்து வருகிறேன். யாழ்ப்பாணம்
முருங்கைக்கு அடுத்தபடியாக, பிரபலமான ரகம் இது. இது, எப்படி எங்கள் பகுதிக்கு வந்தது என, தெரியவில்லை.இந்த
ரக முருங்கைக்கு, தண்ணீர் அதிகம் தேவைப்படாது. காய்கள் நீளமாகவும், நுனி
வளையாமலும் இருக்கும். காய்களைபறித்து, மூன்று நாள் வரை இருப்பு வைக்கலாம்.அதனால், இந்தப்
பகுதியில் அதிகமாக, இந்த ரகத்தைத் தான் சாகுபடி செய்கின்றனர். எட்டு
ஆண்டுகளுக்கு முன், போலையார்புரம் எனும் கிராமத்திலிருந்து, இந்த ரக
முருங்கை குச்சிகளை வாங்கி வந்து நட்டேன்.எனக்கு, 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 6 ஏக்கரில், குருஷ்
முருங்கை உள்ளது. 4 ஏக்கரை, முருங்கை சாகுபடிக்காக தயார் செய்து வைத்துள்ளேன். 1 ஏக்கரில்,100 மரங்கள் நடவு
செய்யலாம்.இதில் இருந்து ஆண்டுக்கு, 12 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முருங்கை, குறைந்தபட்சம், ௭ ரூபாய்
முதல், அதிகபட்சம், 80 ரூபாய் வரை
விலை போகிறது.மொத்தமாக கணக்கு பார்க்கும் போது, 1 கிலோவுக்கு, 30 ரூபாய்க்கு
மேல் விலை கிடைக்கும்.அந்த வகையில், 12 டன் முருங்கை மூலமாக, 3.60 லட்ச ரூபாய் வருமானமும், இதர செலவுபோக, ஆண்டுக்கு, 1 ஏக்கர்
முருங்கை மூலமாக, 3.30 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.மொத்தம், 6 ஏக்கருக்கும்
சேர்த்து,
19.80 லட்ச
ரூபாய் லாபம் கிடைக்கும்.முருங்கையில் இவ்வளவு வருமானமா என, கொஞ்சம்
மலைப்பாகத் தான் இருக்கும்.உண்மையில், இதை விட அதிக லாபம் எடுக்கிறேன். சரியான முறையில் நடவு, தேவையான
சமயத்தில் உரம், பருவத்தில் பராமரிப்பு என, கண்ணும் கருத்துமாக பராமரித்தால், இந்த
வருமானம் சாத்தியம் தான்.அதிக பராமரிப்பு இல்லாமல், நிறைவான வருமானம் கொடுப்பது, முருங்கை
மட்டும் தான்.தொடர்புக்கு: 9976011750.