உங்கள் வருகைக்கு நன்றி

வழிகாட்டும் விஜயலட்சுமி !

வெள்ளி, 11 அக்டோபர், 2013

14 மாஸ்டர் டிகிரி பெற்று, 64 சாப்ட்வேர்களை தயாரித்த, மதுரையின் முதல் பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாளரான, விஜயலட்சுமி:

சொந்த ஊர் கோவை. இன்ஜினியரிங் படிப்பு. காதல் திருமணம் செய்து கொண்டேன். திடீர் விபத்தில், கணவன் இறந்த போது, என் வயது, 25. காதல் கணவன் இல்லாத வெறுமை, தற்கொலைக்குத் தூண்டியது. குழந்தைகளின் முகம் மனதில் நிழலாடியதால், குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற, மன உறுதி பிறந்தது. ஐந்து லட்சம் ரூபாயுடன்  சிறிய சாப்ட்வேர் நிறுவனத்தை, 12 ஊழியர்களுடன், கணவர் வீட்டிலேயே ஆரம்பித்தேன். கடின உழைப்பால் இன்று, 400 ஊழியர்களுடன், மதுரை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் என, நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள், கணினி தொடர்பாக படிக்கின்றனரே தவிர, தொழில் ரீதியான திறனை வளர்க்காததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. எனவே, நான் சாப்ட்வேர் துறையில் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப் டெவலப்பிங்' பயிற்சியை இலவசமாக தந்து, "மைக்ரோசாப்ட்' துணையுடன், "ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன். இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாப்ட்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி., நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வெளியிடங்களில் இப்பயிற்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர்.
ஆண்டிற்கு, 200 கிராம மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன். இதுவரை, யாரும் தோல்வி அடையவில்லை. மேலும், விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, டெக்னிக்கல் டிரெய்னிங், மன உறுதியை வளர்க்க, கவுன்சிலிங் போன்றவற்றை இலவசமாக வழங்கி, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறேன். சாப்ட்வேர் துறையில் வெற்றியடைந்ததற்காக, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை, மத்திய, மாநில அரசிடமிருந்தும், இங்கிலாந்தின், "விமன் ஆப் தி இயர்' விருதும் பெற்றிருக்கிறேன். 


தொடர்புக்கு: 98421 74800.

Read more...

பணம்மும் பூக்கும் டேபில் செடியில் !


சுவாசக் காற்றைக் கூட ஆக்சிஜன் பார்லரில் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம். பசுமை சூழ்ந்த வாழ்க்கை கனவாகிக் கொண்டே போகிறது. இருக்கவே இடமில்லாத மனிதர்கள், மரம், செடி, கொடிகளை வைக்க எங்கே செல்வார்கள்? சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த கானசரஸ்வதி சொல்கிற ‘டேபிள் செடிகள்’ கான்செப்ட், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறது.

‘‘நம்மைச் சுத்தி பசுமை இருக்கிறது மனசுக்கு இதமளிக்கிற விஷயம். ஆனா இன்னிக்கு இருக்கிற அவசர உலகத்துல தோட்டம் போட இடமோ, அதைப் பராமரிக்க நேரமோ இருக்கிறதில்லை. பர்சனலா எனக்கும் அந்தப் பிரச்னை இருந்தப்பதான், இந்த டேபிள் செடிகள் பத்திக் கேள்விப்பட்டு, அதைக் கத்துக்கிட்டேன். நம்மைச் சுத்தி பசுமை இருக்கிற திருப்தியும் கிடைக்கும். பராமரிப்பும் சிரமமில்லை’’ என்கிற கானசரஸ்வதி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.


என்னென்ன தேவை? முதலீடு?

‘‘டெரகோட்டா தட்டு, பாத்திரம், கிண்ணம்னு ஏதோ ஒரு பேஸ், தேங்காய் நார், கூழாங்கல், மணல், செடிகள்... 10 செடிகளுக்கான முதலீடு வெறும் 500 ரூபாய்.’’


என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘வீட்டுக்குள்ள டைனிங் டேபிள், வரவேற்பறைன்னு எங்கே வேணாலும் வச்சுக்கலாம். ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க, ஏ.சி. ரூம்லகூட, அவங்க டேபிள் மேல வச்சுப் பராமரிக்கலாம். கையடக்க குட்டிச் செடியிலேருந்து, ஆளுயர செடி வரைக்கும் எந்த சைஸ் வேணாலும் வைக்கலாம். கொடி வகைகளையும் வைக்கலாம். பார்க்கவும் அழகு. வெறுமனே செடி மட்டும் வேணாலும் வைக்கலாம். கூடுதலா அழகுபடுத்த, அதுலயே தண்ணீர் விட்டு, கூழாங்கல் போடலாம். இன்னும் கொஞ்சம் அழகா வேணும்னா, கலர் மீன்களை நீந்த விடலாம். கற்பனைக்கேத்தபடி எப்படி வேணா டிசைன் பண்ணிக்கலாம்.’’


விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘இப்பல்லாம் கார்ப்பரேட் ஆபீஸ்கள்ல பொக்கே வைக்கிறதுக்குப் பதில் இந்த மாதிரி டேபிள் செடிகளைத்தான் விரும்பறாங்க. அன்பளிப்பாவும் கொடுக்கலாம். ஃபிளாட்ல வசிக்கிறவங்க, வேலையிடத்துல சின்னதா செடி வச்சு அழகு பார்க்க விரும்பறவங்கன்னு எல்லாரும் வாங்குவாங்க. செடியோட அளவைப் பொறுத்து 300 ரூபாய்லேருந்து  விற்கலாம். 50 சதவீத லாபம் தங்கும்.’’

Read more...

லாபம் தரும் மேக்ரமி லேம்ப் ஷேடு


சாதாரண ஜீரோ வாட் பல்ப் உமிழ்வதையும் அழகான வெளிச்சமாகக் காட்டுவதில் லேம்ப் ஷேடுகளுக்கு பெரிய பங்கு உண்டு. லேம்ப் ஷேடுகள் அழகானவை என்றாலும், எல்லா வீடுகளிலும் அவற்றை உபயோகிப்பதில்லை. காரணம், அவற்றின் எக்கச்சக்க விலை!

நடுத்தரக் குடும்பங்களும் வாங்கி உபயோகிக்கக்கூடிய விலையில், சிம்பிளான, அழகான லேம்ப் ஷேடுகள் செய்வதில் நிபுணி ஜெயந்தி. பைகள் தைக்க உபயோகிக்கிற மேக்ரமி ஒயரில், இவர் தயாரிக்கிற விதம்விதமான லேம்ப் ஷேடுகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார் ஜெயந்தி.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘மேக்ரமி ஒயர், சின்ன, பெரிய சைஸ் வளையங்கள், அலங்கார மணிகள்...

மேக்ரமி ஒயர், கிலோ கணக்குல கிடைக்கும். ஒரு சின்ன லேம்ப் ஷேடுக்கு 1 கிலோவும், பெரிசுன்னா
ஒன்றேமுக்கால் கிலோவும் தேவைப்படும். ஒரு கிலோ ஒயர் 240 ரூபாய். மற்ற பொருள்களோட சேர்த்து ஒரு லேம்ப் ஷேடுக்கு 400 - 450 ரூபாய் முதலீடு வேணும்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘வட்ட வடிவம், ஸ்டார் வடிவம், சதுர வடிவம், கூடை வடிவம்னு நாலு மாடல்களை எல்லாரும் போடலாம். அடிப்படை தெரிஞ்சுக்கிட்டா, அப்புறம் அவங்கவங்க கற்பனைக்கேத்தபடி எத்தனை மாடல் வேணும்னாலும் பண்ண முடியும்.


பொதுவா லேம்ப் ஷேடுகளை சுத்தப்படுத்தறது சிரமம். கழுவ முடியாது. இந்த மேக்ரமி லேம்ப் ஷேடுகளை கழுவி, காய வச்சு உபயோகிக்கலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘ஒரு சின்ன லேம்ப் ஷேடுக்கான அடக்க விலை 400 முதல் 450 ரூபாய் ஆகும். அதை 850 ரூபாய் வரைக்கும் விற்கலாம். அளவு பெரிசாக ஆக... லாபமும் பெரிசாகும். வட்ட வடிவ ஷேடுன்னா, ஒரு நாளைக்கு ஒன்றும், மற்ற மாடல்களை ரெண்டு நாள்லயும் போடலாம். விதம்விதமான லைட் விற்கற கடைகள், ஃபேன்சி ஸ்டோர், அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடைகள்ல கொடுக்கலாம்.’’ 


நன்றி - தினகரன்

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets