உங்கள் வருகைக்கு நன்றி

பணம்மும் பூக்கும் டேபில் செடியில் !

வெள்ளி, 11 அக்டோபர், 2013


சுவாசக் காற்றைக் கூட ஆக்சிஜன் பார்லரில் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம். பசுமை சூழ்ந்த வாழ்க்கை கனவாகிக் கொண்டே போகிறது. இருக்கவே இடமில்லாத மனிதர்கள், மரம், செடி, கொடிகளை வைக்க எங்கே செல்வார்கள்? சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த கானசரஸ்வதி சொல்கிற டேபிள் செடிகள்கான்செப்ட், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறது.

‘‘நம்மைச் சுத்தி பசுமை இருக்கிறது மனசுக்கு இதமளிக்கிற விஷயம். ஆனா இன்னிக்கு இருக்கிற அவசர உலகத்துல தோட்டம் போட இடமோ, அதைப் பராமரிக்க நேரமோ இருக்கிறதில்லை. பர்சனலா எனக்கும் அந்தப் பிரச்னை இருந்தப்பதான், இந்த டேபிள் செடிகள் பத்திக் கேள்விப்பட்டு, அதைக் கத்துக்கிட்டேன். நம்மைச் சுத்தி பசுமை இருக்கிற திருப்தியும் கிடைக்கும். பராமரிப்பும் சிரமமில்லை’’ என்கிற கானசரஸ்வதி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.


என்னென்ன தேவை? முதலீடு?

‘‘டெரகோட்டா தட்டு, பாத்திரம், கிண்ணம்னு ஏதோ ஒரு பேஸ், தேங்காய் நார், கூழாங்கல், மணல், செடிகள்... 10 செடிகளுக்கான முதலீடு வெறும் 500 ரூபாய்.’’


என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘வீட்டுக்குள்ள டைனிங் டேபிள், வரவேற்பறைன்னு எங்கே வேணாலும் வச்சுக்கலாம். ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க, ஏ.சி. ரூம்லகூட, அவங்க டேபிள் மேல வச்சுப் பராமரிக்கலாம். கையடக்க குட்டிச் செடியிலேருந்து, ஆளுயர செடி வரைக்கும் எந்த சைஸ் வேணாலும் வைக்கலாம். கொடி வகைகளையும் வைக்கலாம். பார்க்கவும் அழகு. வெறுமனே செடி மட்டும் வேணாலும் வைக்கலாம். கூடுதலா அழகுபடுத்த, அதுலயே தண்ணீர் விட்டு, கூழாங்கல் போடலாம். இன்னும் கொஞ்சம் அழகா வேணும்னா, கலர் மீன்களை நீந்த விடலாம். கற்பனைக்கேத்தபடி எப்படி வேணா டிசைன் பண்ணிக்கலாம்.’’


விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘இப்பல்லாம் கார்ப்பரேட் ஆபீஸ்கள்ல பொக்கே வைக்கிறதுக்குப் பதில் இந்த மாதிரி டேபிள் செடிகளைத்தான் விரும்பறாங்க. அன்பளிப்பாவும் கொடுக்கலாம். ஃபிளாட்ல வசிக்கிறவங்க, வேலையிடத்துல சின்னதா செடி வச்சு அழகு பார்க்க விரும்பறவங்கன்னு எல்லாரும் வாங்குவாங்க. செடியோட அளவைப் பொறுத்து 300 ரூபாய்லேருந்து  விற்கலாம். 50 சதவீத லாபம் தங்கும்.’’

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets