பாஸ்போர்ட் பெறுவது மிக எளிது !.
வெள்ளி, 25 அக்டோபர், 2013
கல்லூரி படிப்பில் இறுதி யாண்டில் காலடி பட்டதும் வேலை கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரி வாசலுக்கு படையெடுக்கின்றன. திறமையும், படிப்பும், கையில் பாஸ்போர்ட்டும் இருந்தால் வெளிநாட்டில் வேலை ரெடி. ஆனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றாலே முகத்தில் கவலை ரேகை படர்ந்து விடுகிறது. பாஸ்போர்ட் வாங்குவது எளிதான விஷயமே. விண்ணப்பத்தில் சரியான தகவல்களை கொடுத்தால் அதிகபட்சம் 45 நாட்களுக்குள் கிடைக்கிறது.
பாஸ்போர்ட் விண்ணப்பத்தை இணையதளத்திலேயே டவுன்லோடு செய்யலாம். சாதாரண முறை யில் பாஸ்போர்ட் வாங்க முகவரி சான்றுக்கு 2 இணைப்புகள்(ரேஷன் கார்டு, வங்கி கணக்கு பாஸ் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் இவற்றில் ஏதாவது 2), தட்கல் முறையில் வாங்க 3 சான்று தேவைப்படும். கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து போட்டோவுடன் கூடிய அத்தாட்சி சான்று, எஸ்எஸ்எல்சி அல்லது பிளஸ் 2 சான்று, 1989க்கு பிறகு பிறந்தவர்களாக இருந்தால் பிறப்பு சான்று(பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்கவேண்டும்), கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்கவேண்டும். சான்று ஆய்வுக்கு செல்லும்போது அசல் சான்றுகளை கொண்டு செல்லவேண்டும்.
இவற்றுடன் முன் சரிபார்ப்பு உறுதி செய்ய மாவட்ட எஸ்.பி, குடியிருக்கும் பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது தாசில்தாரிடம் கூட சான்று பெற்றிருந்தால் பாஸ்போர்ட் பெறுவது மிக எளிது. சாதாரண முறையில் பாஸ்போர்ட்டுக்கு ரூ.ஆயிரமும், தட்கல் முறையில் பெற யீ2500ம் கட்டணமாக செலுத்தவேண்டும். தமிழகத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் உள்ளன.