உங்கள் வருகைக்கு நன்றி

லாபம் தரும் மேக்ரமி லேம்ப் ஷேடு

வெள்ளி, 11 அக்டோபர், 2013


சாதாரண ஜீரோ வாட் பல்ப் உமிழ்வதையும் அழகான வெளிச்சமாகக் காட்டுவதில் லேம்ப் ஷேடுகளுக்கு பெரிய பங்கு உண்டு. லேம்ப் ஷேடுகள் அழகானவை என்றாலும், எல்லா வீடுகளிலும் அவற்றை உபயோகிப்பதில்லை. காரணம், அவற்றின் எக்கச்சக்க விலை!

நடுத்தரக் குடும்பங்களும் வாங்கி உபயோகிக்கக்கூடிய விலையில், சிம்பிளான, அழகான லேம்ப் ஷேடுகள் செய்வதில் நிபுணி ஜெயந்தி. பைகள் தைக்க உபயோகிக்கிற மேக்ரமி ஒயரில், இவர் தயாரிக்கிற விதம்விதமான லேம்ப் ஷேடுகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார் ஜெயந்தி.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘மேக்ரமி ஒயர், சின்ன, பெரிய சைஸ் வளையங்கள், அலங்கார மணிகள்...

மேக்ரமி ஒயர், கிலோ கணக்குல கிடைக்கும். ஒரு சின்ன லேம்ப் ஷேடுக்கு 1 கிலோவும், பெரிசுன்னா
ஒன்றேமுக்கால் கிலோவும் தேவைப்படும். ஒரு கிலோ ஒயர் 240 ரூபாய். மற்ற பொருள்களோட சேர்த்து ஒரு லேம்ப் ஷேடுக்கு 400 - 450 ரூபாய் முதலீடு வேணும்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘வட்ட வடிவம், ஸ்டார் வடிவம், சதுர வடிவம், கூடை வடிவம்னு நாலு மாடல்களை எல்லாரும் போடலாம். அடிப்படை தெரிஞ்சுக்கிட்டா, அப்புறம் அவங்கவங்க கற்பனைக்கேத்தபடி எத்தனை மாடல் வேணும்னாலும் பண்ண முடியும்.


பொதுவா லேம்ப் ஷேடுகளை சுத்தப்படுத்தறது சிரமம். கழுவ முடியாது. இந்த மேக்ரமி லேம்ப் ஷேடுகளை கழுவி, காய வச்சு உபயோகிக்கலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘ஒரு சின்ன லேம்ப் ஷேடுக்கான அடக்க விலை 400 முதல் 450 ரூபாய் ஆகும். அதை 850 ரூபாய் வரைக்கும் விற்கலாம். அளவு பெரிசாக ஆக... லாபமும் பெரிசாகும். வட்ட வடிவ ஷேடுன்னா, ஒரு நாளைக்கு ஒன்றும், மற்ற மாடல்களை ரெண்டு நாள்லயும் போடலாம். விதம்விதமான லைட் விற்கற கடைகள், ஃபேன்சி ஸ்டோர், அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடைகள்ல கொடுக்கலாம்.’’ 


நன்றி - தினகரன்

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets