உங்கள் வருகைக்கு நன்றி

கவனமா காலடி எடுத்து வெச்சு மேலே மேலே போங்க!

வெள்ளி, 25 அக்டோபர், 2013

பெரிய வெற்றிகளை அடைந்த பிரபலங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களும் நம்மைப்போல் திடீரென்று ஒரு திருப்புமுனை. ஒரே தாவலில் வெற்றியை தொட்டுவிடுகிறார்கள். இந்தத் தாவல் எப்படி நிகழ்கிறது? இந்தக் கேள்வியை முன்வைத்துப் பேசும் சமீபத்திய புத்தகம். "தி லீப்' (The Leap) இதன் ஆசிரியர் ரிக் ஸ்மித்.
இந்த ரிக் ஸ்மித்தும் நம்மைப்போலச் சாதாரணமான ஒரு வாழ்க்கையில் முடங்கிக் கிடந்தவர்தான். ஆஃபீஸ், சம்பளம், பிரமோஷன், போனஸ் என்று சின்னச் சின்ன சந்தோஷங்களில் திருப்தியடைந்து கொண்டிருந்தவர், திடீரென்று ஒரு புத்தகம் எழுதினார்; பிரபலமானார், வெற்றிகரமான எழுத்தாளராக நாடு முழுவதும் சுற்றி வந்தார்.
அந்த சமயத்தில் வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கைகளை ஊன்றிப் படித்து அவர்களின் மூன்று வெற்றி ரகசியங்களை கண்டுபிடித்திருக்கிறார்.
"தி லீப்' புத்தகத்தில் ரிக் ஸ்மித் அழகான உதாரணங்களோடு விவரிக்கும் அந்த மூன்று விஷயங்கள் இதோ:
        
1.              உங்களுடைய "கலர்' என்ன என்று கண்டுபிடியுங்கள்
முதலில், இங்கே ரிக் ஸ்மித் "கலர்' என்று குறிப்பிடுவது நம்முடைய தோலின் நிறத்தை அல்ல. நாம் நிஜமாகவே நம் வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைத்தான்.
2.                    
உதாரணமாக, ஒருவர் ஏதோ ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கலாம். ஆனால், அவருக்குள் என்ளைக்காவது பெரிய நடிகராக வேண்டும் என்கிற தாகம் இருக்கும். அதுதான் அவருடைய "கலர்'.
2. அந்த கலரை வைத்து வண்ணம் தீட்டுவதற்கு ஏற்ற ஒரு யோசனையை திட்டத்தைத் தேடிப் பிடிப்பது. அந்த யோசனை பெரிய அளவில் இருக்கட்டும் என்கிறார்.

உதாரணமாக, நீங்கள் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்தால், லோக்கல் டீம் ரேஞ்சுக்கு யோசிக்காதீர்கள்; இந்திய அணியில் இடம் பிடிக்கவேண்டும், வேர்ல்ட் கப் ஜெயிக்கவேண்டும் என்கிற அளவுக்கு ஆசைப்படுங்கள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். அடுத்து, அந்த யோசனையில் சுயநலம் இருக்கக்கூடாது. அதாவது, நீங்கள் பெரிய கிரிக்கெட் வீரராக வந்தால் அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்கிற சுயநல நோக்கத்தோடு மட்டும் அதில் இறங்கினால், சுற்றியிருக்கிற மற்றவர்கள் யாரும் உங்களுக்கு மனம் வந்து உதவமாட்டார்கள்.
அதற்குப் பதிலாகப் பொதுநல நோக்கம் கொண்டு செயல்படுகிறவர்களுக்கு எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும். அவர்களுடைய முன்னேற்றமும் வேகமாக இருக்கும்.
அப்படியானால், என்னுடைய சொந்த லாபத்தைப் பற்றி நான் நினைக்கவே கூடாதா?
3.                     நினைக்கலாம். பொதுநலத்தோடு ஓரமாகக் கொஞ்சம் சுயநலமும் கலந்திருந்தால் தப்பில்லை. அதேசமயம் வெறும் சுயநலம்தான் உங்களுடைய இலக்கு என்றால் கஷ்டம். அதில் மற்றவர்களுக்கும் உதவுகிற ஒரு நோக்கமும் இருந்தால், அந்த நல்லெண்ணமே உங்களை தூக்கிவிடும்.
4.                     கடைசியாக, எளிமையான யோசனை. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெளிவாகப் புரியவேண்டும். இதுவா, அதுவா என்று புரியாமல் குழப்பியடித்தால் "பய ஒரு மாதிரி' என்று மற்றவர்கள் விலகிப் போய்விடுவார்கள். யாரும் உதவமாட்டார்கள்.
5.                     சரி. கலர் கிடைச்சாச்சு, யோசனையும் கிடைச்சாச்சு, அடுத்து என்ன? எகிறவேண்டியதுதானே? அதுதான் கூடாது.
6.                    
3. "நீங்கள் யோசித்து வைத்திருக்கும் விஷயம் என்னதான் உயர்வானதாக இருந்தாலும், அதை நம்பி ஓரளவுக்குமேல் ரிஸ்க் எடுக்காதீர்கள். கவனமாகக் காலடி எடுத்துவையுங்கள்' என்கிறார் ரிக் ஸ்மித்.

இதென்ன கூத்து? பொதுவாக ரிஸ்க் எடுத்தால்தானே நிறைய ஜெயிக்க முடியும் என்று சொல்வார்கள்?
உண்மைதான். ஆனால், அதேசமயம் கண்மூடித்தனமாக ரிஸ்க் எடுப்பதும் தவறு. இப்போது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து அடுத்து செல்லவிருக்கும் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பாதையில் ஏதாவது சிரமங்கள், தடைகள் வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று மாற்று யோசனைகளைப் பக்காவாகத் தயார் செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஆழம் பார்த்துக் காலை விடுங்கள் களம் ஓரளவு பழகியபிறகு புகுந்து விளையாடலாம்.
சுருக்கமாகச் சொன்னால், உங்க கலரைத் தெரிஞ்சுக்கோங்க, அதுக்கு ஏற்றதுபோல் ஒரு பெரிய யோசனையைக் கண்டுபிடிங்க, கவனமா காலடி எடுத்து வெச்சு மேலே மேலே போங்க!   
நன்றி - குமுதம் 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets