உங்கள் வருகைக்கு நன்றி

மனச் சோர்வை குணப்படுத்த முடியுமா ?

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


மனச் சோர்வு என்பது ஒரு சிலருக்கு எப்போதாவது ஏற்படுவது வழக்கம். சிலர் எப்போதுமே மனச்சோர்வுடன் இருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த மனச்சோர்வு என்பது ஏதோ சாதாரண ஒரு விஷயம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். ஆனால் அது சாதாரண விஷயமில்லை. மனச் சோர்வு என்பது ஒரு மன நோய்.  அதற்கு உடனடியாக உரிய சிகிச்சை (மருந்து மர்த்திரைகள் அல்ல) அல்லது தீர்வினை கண்டு, குணப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
மனச் சோர்வுக்கு எந்த வயது வித்தியாசமும் இல்லை. சிறார்கள் முதல் முதியவர்கள் வரை மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் ஏராளம். சிறிய தோல்விகள் முதல், ஏமாற்றங்கள், நஷ்டம் போன்றவற்றால் மனச் சோர்வு ஏற்படுகிறது.
தற்போதெல்லாம் மனச் சோர்வுக்கு ஆளாகும் நபர்களில் குழந்தைகளும், இளம் வயதினரும் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். இதில் இவர்களது மனச் சோர்வு பல நேரங்களில் குடும்பத்தாருக்கு தெரிவதில்லை. மனச்சோர்வினால் அவர்கள் செய்யும் செயல்களை குடும்பத்தார் வேறு விதமாக பார்ப்பதே சிக்கலை பெரிதாக்குகிறது.
அதாவது, ஒரு சிறிய விஷயம்தான் வித்யாசம். கவலை மற்றும் மனச் சோர்வு என்பதை வேறுபடுத்திப் பார்க்க ஒரு சில விஷயங்களை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டில் வளர்த்த செல்லப் பூனை இறந்துவிட்டது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்பட்டு, கண்ணீர் சிந்துகிறார்கள். இது மனக் கவலை. ஆனால் இதில் ஒருவர் மட்டும் அதிகக் கவலை அடைந்து, யாருடனும் பேசாமல், சாப்பிடாமல், தங்களது அன்றாடப் பணிகளை செய்யாமல், ஏன் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற அளவுக்கு சிந்தித்தால் அதுதான் மனச் சோர்வு என்கிறது மருத்துவ உலகம்.
பொதுவாக ஒருவர் மன அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டால் உடனடியாக உங்களது ஆதரவும், அவரது மனநிலையை மாற்ற நடவடிக்கையும் தேவை..  மனச் சோர்வுக்கு முக்கிய சிகிச்சை என்பது, அவர்களை பாதித்த விஷயத்தை சரி செய்வதாகத் தான் இருக்கும். அவர்களை பாதித்த, பாதிக்கிற விஷயம் சரியானால் இவர்கள் தானாகவே சரியாகிவிடுவார்கள்.
ஒருவருக்கு ஏற்படும் மனச்சோர்வுக்கு அவரது குடும்பத்திலோ, அவரை சுற்றியுள்ளவர்களிடத்திலோ, அவர் இருக்கும் பள்ளி, கல்லூரி, பணியிடத்திலோ இருக்கும் பிரச்னையே அடிப்படைக் காரணியாக அமைகிறது. அதனை மாற்றுவதன் மூலம் அவரை மனச்சோர்வில் இருந்து எளிதாக வெளியே கொண்டு வந்து விடலாம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மன சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரச்னை, மனச்சோர்வை வெளிப்படுத்தும் விதம், அதன் பாதிப்பு ஆகியவை ஒன்று போல இருப்பதில்லை.  அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அதை நாம் சரியான முறையில் கண்டுபிடித்து பயிற்சியளித்தால்தான் அதை விரைவில் குணப்படுத்த முடியும். 

Read more...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் எட்டு !

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

"எட்டு' போட்டால், வாகனம் ஓட்ட "உரிமம்' கிடைக்கும் என்பது தான் நமக்கு தெரியும். ஆனால், "எட்டு' வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால்உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார், யோகா ஆசிரியரான சண்முகம்.

சென்னை, ராயபுரம் அண்ணா பூங்காவில் மாலை நேரத்தில் சென்றால், தரையில் எட்டு என்ற எண்ணை எழுதி, அதன் மீது தொடர்ந்து நடந்து செல்வதைப் பார்க்கலாம்.
சர்க்கரை தீரும்: இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, "எட்டு' வடிவில் நடந்து செல்வதால்,சர்க்கரை வியாதியில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவதாகவும், மூட்டு வலியும் குணமடைவதாகவும் கூறினர்.

"எட்டு' வடிவ நடைபயிற்சியை வழங்கி வரும், வண்ணாரப்பேட்டை யோகா ஆசிரியர் சண்முகம் கூறியதாவது: சித்தர் கால வைத்தியம்"எட்டு' வடிவ நடைபயிற்சியை, புதுச்சேரியில் உள்ள இயற்கை உணவு வைத்தியர் மாணிக்கம் என்பவரிடம் கற்றுக்கொண்டேன். "எட்டு' போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடப்பது, பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை வைத்திய முறைகளில், இதுவும் ஒன்று.
சென்னையில் 20 ஆண்டுகளாக இப்பயிற்சியை அளிக்கிறேன். ஆயிரத்துக்கும் அதிகமானோர் "எட்டு' நடை போடுகின்றனர்.

பயிற்சி முறை:ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில், கிழக்கு மேற்காக கோடு வரைந்து, 10 அடியில், வடக்கு தெற்காக "எட்டு' எண் எழுத வேண்டும். அதன் மேல், தொடர்ந்து 10 முதல் 15 நிமிடம் வரை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி யோ அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி யோ நடக்க வேண்டும்.பயிற்சியின் முடிவில், உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின் இடைவெளி விட்டு மீண்டும் 15 நிமிட நடைபயிற்சியைத் தொடரலாம். இடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளியை தானாகவே வெளியே உமிழ்வதாலோ அல்லது கரைந்து இருப்பதையோ உணரலாம்.

குதிகால் வரை:இப்பயிற்சியால், குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். கண் பார்வை மற்றும் செவி கேட்புத் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் ஐந்து கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. குடலிறக்க நோயும் இதனால் குணமாகும். ரத்த அழுத்தம் குறையும்.

எட்டு நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்தால் மூட்டு வலியும், 40 நிமிடம் செய்தால் ரத்த அழுத்தமும், ஒரு மணி நேரம் செய்தால் சர்க்கரை வியாதியில் இருந்தும் விடுபடலாம். மற்ற நடைபயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியில் சிறுநீரகத்தின் "பாய்ண்ட்' என்று சொல்லப்படும் குதிகால், அதிக பயன் பெறுகிறது. மன அழுத்தமும் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு :எட்டு நடை பயிற்சி குறித்து நாகேந்திரன் கூறும்போது, ""60 வயதான எனக்கு, இந்த பயிற்சியை மேற்கொண்ட பிறகு, படபடப்பு குறைந்துள்ளது; சர்க்கரை அளவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது,'' என்றார்.

பள்ளி தலைமையாசிரியர் மனோன்மணி,""இந்த பயிற்சியை கடந்த ஆறு மாதமாக செய்து வருகிறேன். இதனால், எனது ஊளை சதை வெகுவாகக் குறைந்துள்ளது. கண்களுக்கு நல்ல பயிற்சியாக உள்ளது,'' என்றார்.



Read more...

சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டுவோம் !

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்   பட்டுள்ளது.

புகார் பதிவு முறை :
 புகார் மனுவில், புகார் தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், நஷ்ட ஈட்டின் விவரம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
* பாதிப்பு ஏற்பட்ட இரண்டு வருடங்களுக்குள், புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவிற்கான கட்டணத்தை, டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, கட்டணம் செலுத்த தேவை இல்லை.

* நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மற்றும் சான்று அளிக்கப்பட்ட நபர் மூலமாகவோ புகாரை பதியலாம்.


யாரை அணுகனும்? : நுகர்வோர் வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருப்பின், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 20 லட்சம் முதல், 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 1 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளவர்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுக வேண்டும். அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு, எந்த நிலையிலும் நீதி கிடைக்காத பட்சத்தில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெறலாம்.


புகார் பதிவு கட்டண விவரம்:

பொருட்களின் மதிப்பு கட்டணம்
(ரூபாயில்) (ரூபாயில்)
1 லட்சம் வரை 100

1 - 5 லட்சம் 200

5 - 10 லட்சம் 400

10 - 20 லட்சம் 500

20 - 50 லட்சம் 2,000

50 - 1 கோடி 4,000

1 கோடிக்கு மேல் 5,000 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets