உங்கள் வருகைக்கு நன்றி

வீடு கட்டும் போது, கவனிக்க வேண்டியவை.

புதன், 20 ஜூன், 2018


5 முதல், 6 அடி வரை தோண்டி, தரமான கம்பிகளைப் பயன்படுத்தி, அடித்தளம் அமைப்பதால், உறுதியாக இருப்பதுடன், முதல், இரண்டாவது தளம் அமைக்கவும் வசதியாக இருக்கும்.தரையிலிருந்து சீலிங், 11 அடி உயரத்தில் அமைப்பதால், அறை குளிர்ச்சியாகவும், வீடு பெரியதாக இருப்பது போன்ற உணர்வையும் தரும். மேலும், சுவரின் மேல்புறத்தில் சிறு செவ்வக வடிவ, 'ஓப்பன்' வைத்தால், அதன் வழியாக வெப்பமும் வெளியேறிவிடும். இதுவே, 'ஏசி' பயன்படுத்துவோர், ஜன்னலுக்கு மேல், திறந்து மூடும் விதமாக, செவ்வக வடிவ ஓப்பன் வைக்கலாம்.சாலையின் லெவல், 'ஜீரோ'வாக இருந்தால், வீட்டு முகப்பு லெவல், 2 ஆகவும், கதவின் லெவல், 4 ஆகவும் இருக்க வேண்டும். இது, மழை, வெள்ளத்தின் போது, தண்ணீர் வீட்டுக்குள் வருவதை தடுக்கும். கதவை திறந்தவுடன் கதவு பக்கத்திலும்; படுக்கையறையில், கட்டிலுக்குப் பக்கவாட்டிலும், கதவுக்குப் பக்கத்திலும்; சமையலறையில் மீடியம் உயரத்திலும், 'ஸ்விட்ச் பாயின்ட்' வைக்க வேண்டும். 'ஷாக்' அடிக்காமல் இருக்க, 'ஆன்டி ஷாக் ஸ்விட்ச்' பயன்படுத்தலாம். ஸ்விட்சை சுற்றியும், அழுக்கை நீக்க, 'அப்பர் லீக்' ஷீட் ஒட்டலாம். ஜன்னலை, 5 அடி உயரம் வைப்பது நல்லது. படுக்கையறையில், 4 அடிக்கு, ௪ அடி அளவில், ஜன்னல் அமைக்கலாம். பால்கனியுடன் கூடிய படுக்கையறையில், 'ஸ்லைடு டோர்' போட்டு, இரண்டடுக்கு ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.பிக்சட் அலமாரி மற்றும் பீரோ, டிரெஸ்சிங் டேபிளையும் அமைப்பதால், சவுகரியமாக, தரமாக இருப்பதுடன், அதிக ஆண்டு உழைக்கும். வெளிர் நிறம், வெப்பத்தை ஈர்க்காது. எனவே, வீட்டிற்கு வெளியே, உள்ளே வெளிர் நிறத்திலும், படுக்கையறையில், அடர் பச்சை அல்லது அடர் நிறத்தில் பெயின்ட் செய்வதால், சீரான துாக்கத்தையும் ஊக்குவிக்கும்.மாடிப்படியை, 'ஆன்டி ஸ்கிட்' படிகளாக வடிவமைப்பதுடன், எட்டு படிக்கட்டுக்கு மேல், ஒரு சமதளத்தை வைத்து, படிக்கட்டு அமைக்கலாம். சமையலறையை காற்றோட்டத்துடன் அமைப்பதுடன், அங்கிருந்து பார்த்தால், வீட்டின் மற்ற பகுதிகளில் நடப்பது அனைத்தும் தெரிவது போல் வடிவமைக்க வேண்டும்.'சம்ப், வாட்டர் டேங்க், செப்டிங் டேங்க்' வைக்கும் போது, 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு டேங்குகளை வைப்பது நல்லது. கீழ் தளம் மட்டும் உள்ள வீட்டில், தண்ணீர் தொட்டியை படுக்கையறைக்கு மேல் வைப்பதால், அந்த அறை, குளிர்ச்சியாக இருக்கும். கழிப்பறையில், 'ஆன்டி ஸ்கிட்' டைல்ஸ் பயன்படுத்தலாம். இதை கழுவுவதும், பராமரிப்பதும் சுலபமாக இருக்கும்.

Read more...

மதிப்புக் கூட்டல் தொழில்,


மதிப்புக் கூட்டல் தொழில், அதற்கான பயிற்சி குறித்து கூறும், தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் இயங்கி வரும், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர், முனைவர், அனந்த ராமகிருஷ்ணன்: விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய கருவிகளை கண்டுபிடிப்பதுடன், தொழில் முனைவோருக்கு தேவையான மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்களையும், நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம். தொழில் முனைவர்களை விட விவசாயிகள், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டினால், நல்ல லாபம் பார்க்கலாம். மதிப்புக் கூட்டல் சம்பந்தமான விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, ஒரு நாள் பயிற்சி நடத்துகிறோம். பல்வேறு கட்டணப் பயிற்சிகளும் இங்கு தரப்படுகின்றன. மேலும், மதிப்புக் கூட்டல் தொழிலை உடனே துவக்கும் வகை யில், பல நுட்பங்களை யும் சொல்லி தருகிறோம்.உதாரணமாக, தக்காளி விலை குறையும் போது, விவசாயிகள் பலர், சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். தக்காளி விலை குறையும்போது, எங்களிடம் தெரிவித்தால், விவசாயிகளுடைய இடத்திலேயே மிஷினை கொண்டு வந்து, மதிப்புக் கூட்டல் செய்து கொடுக்கிறோம். விவசாயிகள் எங்களிடம் பொருளை ஒப்படைத்தால், விற்பனையும் செய்து தருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் மதிப்புக் கூட்டல் தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு, தொழில் துவங்க ஏற்பாடு செய்து தருகிறோம். அதிகபட்சமாக, 35 சதவீத மானியத்துடன், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் பெற்றுத் தருகிறோம்.இவை தவிர, நாங்களே பொருளுக்கான சந்தை வாய்ப்பையும் அமைத்துக் கொடுக்கிறோம். மதிப்புக் கூட்டலில் இன்று இருக்கும் சவால், சந்தை வாய்ப்பு தான். உதாரணமாக, பாலில் இருந்து, 15க்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்ய முடியும். விவசாயிகளிடம் இருந்து வாங்கி, விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், மதிப்புக் கூட்டலில் முக்கியமானது தரம். அதை முழுமையாக கையாள்வதில் தான், மதிப்புக் கூட்டல் தொழிலின் வெற்றி ரகசியமே, அடங்கி இருக்கிறது. தொழில் முனைவருக்கான வாய்ப்புகளையும், உருவாக்கிக் கொடுக்கிறோம்.மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த, 2017 - 20ம் ஆண்டு வரை, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம், விளை பொருட்களைப் பாதுகாக்கும் குளிர்ப்பதன நிலையத்தை உருவாக்க, 40 சதவீத மானியமும், உணவைப் பதப்படுத்தும் தொழில்களுக்கு, 30 சதவீத மானியமும் வழங்கப்படும்.இதுபோன்ற திட்டங்கள், பயிற்சிகள் குறித்த விபரங்கள் தேவைப்படும் விவசாயிகளும், தொழில் முனைவோரும், எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகலாம்.தொடர்புக்கு: 94804 - 42807.

Read more...

குழந்தைகளும், பிளே ஸ்கூலும்


இன்றைய குழந்தைகள், 2 வயதிலேயே, 'பிளே ஸ்கூலில்' சேர்க்கப்படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன், அந்தப் புதிய சூழலுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.பயண துாரம் குறைவாக, வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது நலம்; இதனால், அலைச்சல், அசதியைத் தவிர்க்கலாம். குழந்தைகளை தங்கள் அரவணைப்பில் மட்டுமே வைத்து வளர்க்கும் பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்கு முன், அவர்களை நண்பர், உறவினர் வீடுகளுக்கு சில மணி நேரம் அழைத்துச் சென்று, அங்கிருக்கும் பெரியவர், குழந்தைகளுடன் பழக வைக்க வேண்டும்.கிண்டர் கார்டன், கே.ஜி., வகுப்புகளில் குழந்தை களை மதிய வேளைகளில் சிறிது நேரம் உறங்க வைப்பதால், வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்க வைத்துப் பழக்கலாம். ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு குழந்தைகள், பள்ளி செல்ல மறுத்து அடம் பிடித்து அழுவது இயல்பானது. அதுவே மாதங்களைக் கடந்தும் தொடர்ந்தால், என்ன பிரச்னை என, குழந்தையிடமும், பள்ளித் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும்; குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.தன் பார்வையில் படும் கவர்ச்சிகரமான பொருட்களை, தனக்கு சொந்தமாக்க நினைப்பது சில குழந்தைகளின் இயல்பு. இக்குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கு முன், செய்முறையுடன் விளக்கி, 'இது தவறு' என்பதை, பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.பசித்தால் சொல்லத் தெரிவது, தானே சுயமாகச் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் வந்தால் பாத்ரூமில் மட்டும் ெவளியேற்றுவது, மூக்கில் சளி ஒழுகினால், கைக்குட்டையில் துடைத்துக் கொள்வது, சாப்பிடும் முன், பின் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட அவசியமான பழக்கங்களை, பள்ளிக்கு அனுப்பும் முன் கற்றுக் கொடுக்க வேண்டும்.குழந்தையின் வயதுக்கு ஏற்றாற்போல, பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரியை சொல்ல தெரிய வேண்டும்.வாரம் ஒரு முறை நகம் வெட்டுவது, குழந்தைக்கு தொந்தரவு தராத வகையிலான, 'ஹேர்கட்' போன்றவை முக்கியம். பெண் குழந்தைகளுக்கு தொங்கட்டான், ஜிமிக்கி, செயின் போன்ற அணிகலன்கள், விளையாடும்போது, சண்டையிடும்போது இழுக்கப்பட்டு விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.விடுமுறை நாட்களிலேயே கண் பரிசோதனை, காது வலி, பல் வலி, சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, மூச்சுத்திணறல், தொடர் இருமல் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னை இருந்தால், அதைக் கண்டறிந்து சரிபடுத்த வேண்டும்.'குட் டச், பேட் டச்' மற்றும் யாரிடம் எப்படி பழக வேண்டும் உள்ளிட்ட பாலினம், பாலியல் சார்ந்த விஷயங்களை, குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களையே, ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets