வீடு கட்டும் போது, கவனிக்க வேண்டியவை.
புதன், 20 ஜூன், 2018
5 முதல், 6 அடி வரை தோண்டி, தரமான
கம்பிகளைப் பயன்படுத்தி, அடித்தளம் அமைப்பதால், உறுதியாக இருப்பதுடன், முதல், இரண்டாவது தளம் அமைக்கவும் வசதியாக இருக்கும்.தரையிலிருந்து
சீலிங்,
11 அடி
உயரத்தில் அமைப்பதால், அறை குளிர்ச்சியாகவும், வீடு பெரியதாக இருப்பது போன்ற உணர்வையும்
தரும். மேலும், சுவரின் மேல்புறத்தில் சிறு செவ்வக வடிவ, 'ஓப்பன்' வைத்தால், அதன் வழியாக
வெப்பமும் வெளியேறிவிடும். இதுவே, 'ஏசி' பயன்படுத்துவோர், ஜன்னலுக்கு மேல், திறந்து மூடும் விதமாக, செவ்வக வடிவ ஓப்பன் வைக்கலாம்.சாலையின்
லெவல், 'ஜீரோ'வாக
இருந்தால்,
வீட்டு
முகப்பு லெவல், 2 ஆகவும், கதவின் லெவல், 4 ஆகவும் இருக்க வேண்டும். இது, மழை, வெள்ளத்தின் போது, தண்ணீர் வீட்டுக்குள் வருவதை தடுக்கும். கதவை திறந்தவுடன்
கதவு பக்கத்திலும்; படுக்கையறையில், கட்டிலுக்குப் பக்கவாட்டிலும், கதவுக்குப்
பக்கத்திலும்; சமையலறையில் மீடியம் உயரத்திலும், 'ஸ்விட்ச்
பாயின்ட்'
வைக்க
வேண்டும். 'ஷாக்' அடிக்காமல்
இருக்க,
'ஆன்டி
ஷாக் ஸ்விட்ச்' பயன்படுத்தலாம். ஸ்விட்சை சுற்றியும், அழுக்கை
நீக்க, 'அப்பர் லீக்' ஷீட்
ஒட்டலாம். ஜன்னலை, 5 அடி உயரம் வைப்பது நல்லது. படுக்கையறையில், 4 அடிக்கு, ௪ அடி அளவில், ஜன்னல்
அமைக்கலாம். பால்கனியுடன் கூடிய படுக்கையறையில், 'ஸ்லைடு டோர்' போட்டு, இரண்டடுக்கு
ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.பிக்சட் அலமாரி மற்றும் பீரோ, டிரெஸ்சிங்
டேபிளையும் அமைப்பதால், சவுகரியமாக, தரமாக இருப்பதுடன், அதிக ஆண்டு உழைக்கும். வெளிர் நிறம், வெப்பத்தை
ஈர்க்காது. எனவே, வீட்டிற்கு வெளியே, உள்ளே வெளிர் நிறத்திலும், படுக்கையறையில், அடர் பச்சை
அல்லது அடர் நிறத்தில் பெயின்ட் செய்வதால், சீரான துாக்கத்தையும் ஊக்குவிக்கும்.மாடிப்படியை, 'ஆன்டி ஸ்கிட்' படிகளாக
வடிவமைப்பதுடன், எட்டு படிக்கட்டுக்கு மேல், ஒரு சமதளத்தை வைத்து, படிக்கட்டு
அமைக்கலாம். சமையலறையை காற்றோட்டத்துடன் அமைப்பதுடன், அங்கிருந்து
பார்த்தால்,
வீட்டின்
மற்ற பகுதிகளில் நடப்பது அனைத்தும் தெரிவது போல் வடிவமைக்க வேண்டும்.'சம்ப், வாட்டர்
டேங்க், செப்டிங்
டேங்க்' வைக்கும்
போது, 12
ஆயிரம்
லிட்டர் கொள்ளளவு டேங்குகளை வைப்பது நல்லது. கீழ் தளம் மட்டும் உள்ள வீட்டில், தண்ணீர்
தொட்டியை படுக்கையறைக்கு மேல் வைப்பதால், அந்த அறை, குளிர்ச்சியாக இருக்கும். கழிப்பறையில், 'ஆன்டி ஸ்கிட்' டைல்ஸ்
பயன்படுத்தலாம். இதை கழுவுவதும், பராமரிப்பதும் சுலபமாக இருக்கும்.