கம்ப்யூட்டர் மூலமே சம்பாதித்து, படிப்பை தொடர்கின்றனர்
சனி, 4 மே, 2013
வெளிநாட்டில்
எல்லாம் மாணவர்கள், பகுதி நேரமாக வெளியில் பணி செய்து கொண்டே, கல்லூரியில் படிக்கின்றனர்.
மதுரையில் படித்துக் கொண்டே, அந்த படிப்பால், கம்ப்யூட்டர் மூலமே சம்பாதித்து, படிப்பை
தொடர்கின்றனர் நான்கு மாணவர்கள்.
"படித்து
முடித்து, நல்ல வேலை கிடைத்து சம்பாதிக்க வேண்டும்' என்று கனவு காணும் இளைஞர் களுக்கு
மத்தியில், இவர்கள் வித்தியாசமானவர்கள். மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி,
"அனிமேஷன்' துறை மாணவர்கள் இவர்கள்.
படிக்கும்
போதே, "ஆன்லைன் மார்க்கெட்டிங்'கில் நுழைந்து, "பாரீன்' சம்பளத்தை அள்ளி
அசத்துகின்றனர்.
கொஞ்சம்
வித்தியாசமான, "கிரியேட்டிவ்நஸ்' இருந்தால் போதும் அனிமேஷன் துறையில், "மணி
மேக்கிங்' இணையதளங் களை ஒரு கை பார்த்து விடலாம் என்பதற்கு, இக்கல்லூரியில் படிக்கும்
இறுதியாண்டு மாணவர்கள் ராம்பாண்டியன், மதுசூதனன், விஜயலட்சுமி, சதீஷ்குமார் ஆகியோர்,
"அப்பட்டமான' சாட்சிகள்.
அனிமேஷன்
துறையில், கிராபிக்ஸ் டிசைன், வெப் டிசைன், அனிமேஷன் டிசைன் மற்றும் கம்ப்யூட்டர் கேம்
டிசைன் போன்றவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகளை அள்ளித் தருபவை. இப்போது,
"இ-கார்டு டிசைனும்' அதிக வரவேற்பை பெற்றுள்ளது. "கிரியேட்டிவ்' எண்ணம் இருந்தால்
போதும், ஒரு மணி நேரத்தில், 1,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்...' என்கிறார் மாணவி விஜயலட்சுமி.
அவர்
கூறுகையில், "திறமையானவர்கள் தேவை என, அமெரிக்கா சார்ந்த பல நிறுவன இணையதளங்கள்,
"கடை' விரித்து காத்திருக் கின்றன. உதாரணமாக, வித்தியாசமாக இ-கார்டு டிசைன் செய்து,
"அப்டேட்' செய்து, அந்த கார்டு டிசைன், அந்த கம்பெனி களுக்கு பிடித்திருந்தால்,
அதற்கு நாம் நிர்ணயித்த விலை, நம் அக்கவுன்டில், "டாலராக' விழுந்து விடும்.
"பாரீன்' சம்பளம் கிடைக்கிறது...' என்றார்.
வெளிநாட்டு
கம்பெனிகளுக்கான விளம்பரம், விசிட்டிங் கார்டு, கிராப் டிசைன்ஸ், இன்டர்நெட் மார்க்கெட்டிங்
போன்ற பணிகளுக்கு, "அவுட் சோர்ஸ்' அடிப்படையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இன்டர்நெட்டில்
கொட்டி கிடக்கின்றன. பேஸ் புக், டுவிட்டர்களில் மெயில் பார்க்க மட்டுமே, "இன்டர்நெட்டை'
பயன்படுத்தாமல், சிலமணிநேரம் இதுபோன்ற தேடுதலையும் நாம் தொடர்ந்தால், அது, நமக்கு,
"பாரீன்' டாலர் ஈட்டும் தளமாக மாறி விடும். உயர் படிப்புக்கான செலவை பெற்றோரிடம்
எதிர்பார்க்க தேவையில்லை என்று, அசத்தலான, "ஐடியா' தருகின்றனர், ராம்பாண்டியன்,
மதுசூதனன், சதீஷ்குமார் ஆகியோர்.
அனிமேஷன்
துறை மாணவர்களின் திறமை, கிரியேட்டிவ் எண்ணங் களுக்கான தளமாக கல்லூரியில், motiffmedia.com
என்ற தனி இணையதளமே துவங்கியுள்ளனர்.
"விளையாட்டிலும்,
பொழுதுபோக்கிலும்கூட, "கிரியேட்டிவ்' எண்ணங்கள் இருந்தால், அனிமேஷன் துறை, பணம்
கொட்டும் தளமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை...' என்ற கல்லூரி அனிமேஷன் துறை தலைவர் தினேஷின் வார்த்தை அர்த்தமுள்ளதாகவே உள்ளது.