உங்கள் வருகைக்கு நன்றி

அதிக அளவில் தக்காளி பயன்படுத்துகிறீர்களா ?

திங்கள், 20 மே, 2013

காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.

இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது. இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக் அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது. மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது. 

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும்.  தக்காளி உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.  பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது. 

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. 

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன. தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறதுவைட்டமின் ‘சி குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும்.

சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets